விஜய் அரசியல் வருகை! நான் எப்பவோ ரெடி! அப்பா ஓகே சொன்னால் போதுமே! கமல் மகள் ஸ்ருதிஹாசன் ரிப்ளை
சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததற்கு வாழ்த்துகள். அப்பா சரி என சொன்னால் தான் ரெடியாக இருப்பதாகவும் நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். தக் லைப் இசை வெளியீட்டு விழாவில் அவர் அவ்வாறு தெரிவித்திருந்தார்.

மணிரத்னம்-கமல் கூட்டணியில் ஜூன் 5ஆம் தேதி தக் லைஃப் எனும் படம் வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த படத்தில் ஒரு பாடலையும் ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார். இவர் இந்த விழாவிற்காக மும்பையிலிருந்து சென்னை வந்திருந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததற்கு வாழ்த்துகள். கூலி படத்தில் ரஜினி சாருடன் சேர்ந்து நடித்தது நல்ல அனுபவமாக அமைந்தது. அப்பாவுடன் சேர்ந்து நடிக்க நான் தயார்தான். ஆனால் அவர் சம்மதிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
கமல்ஹாசன் மூத்த மகள்
கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் உன்னை போல் ஒருவன் எனும் திரைப்படத்தில் பாடகியாக அறிமுகமானார். இவரது குரல் வெளிநாட்டு பாடகிகளை போல் சர்வதேச தரத்தில் இருப்பதால் பலரது பாராட்டுகளை பெற்றார்.
பிரபல பாடகி
பிரபல பாடகியாக வருவார் என நினைத்த நிலையில் 2011 ஆம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ஏழாம் அறிவு படத்தில் ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிப்பிலும் அசத்தியிருந்தார்.
புதிய முகம்
புதிய முகம் என்பதால் ஆங்காங்கே பிசிறு தட்டியது. ஆனால் ஏதோ அவருடைய ஜீனில் இருந்த நடிப்பு வெளிக் கொணரப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழில் ரஜினி மகள் இயக்கத்தில் தனுஷுடன் 3 எனும் படத்தில் நடித்திருந்தார்.
பூஜை படம்
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஸ்ருதிஹாசன் நடிக்கத் தொடங்கினார். தமிழில் அவர் பூஜை எனும் படத்தில் விஷாலுடன் நடித்திருந்தார்.
தமிழில் வாய்ப்புகள்
தமிழில் வாய்ப்புகள் குறைந்த நிலையில் அவர் தெலுங்கில் கவனம் செலுத்தினார். 'வால்டர் வீரய்யா', 'வீரசிம்ஹா ரெட்டி' படத்தில் நடித்தார். இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களையே பெற்றன. கடைசியாக கேஜிஎஃப் படத்தை இயக்கி இந்திய அளவில் கவனம் பெற்ற இயக்குநரான பிரசாந்த் நீல் பிரபாஸை வைத்து இயக்கிய சலார் படத்தில் லீடு ரோல் செய்திருந்தார் ஸ்ருதி ஹாசன்.
ஆல்பம்
மேலும் லோகேஷ் கனகராஜுடன் ஆல்பம் ஒன்றிலும் நடித்திருந்தார். பின்னர் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி பிறகு அந்த படத்திலிருந்து விலகிவிட்டார். தற்போது விஜய் சேதுபதியுடன் ட்ரெய்ன் எனும் படத்தில் நடித்து வருகிறார்.
காதல்
இவர் டாட்டூ கலைஞர் சாந்தனு என்பவரை காதலித்து வந்ததாக சொல்லப்பட்டது. இவருடன் மும்பையில் வீடு எடுத்து தங்கி வந்ததாகவும் கூறப்பட்டது. இவர்கள் இருவரும் சேர்ந்து புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வந்தார்.
முறிந்த காதல்
ஆனால் ஸ்ருதிஹாசன் தனது காதலனான சாந்தனுவுடன் எடுத்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் இருந்து நீக்கிவிட்டார். அது போல் இருவரும் இன்ஸ்டாவில் பின்தொடர்வதையும் நிறுத்திக் கொண்டனர். இதனால் இருவரும் தங்கள் காதல் உறவை முறித்துக் கொண்டதாக சொல்லப்பட்டது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு நடந்ததாகவும் தற்போது பிரேக் அப்பான சாந்தனுவுக்கு வேறு காதலி கிடைத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஸ்ருதிஹாசன் கூலி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications