அப்பாவுக்கு ‘பிக் பாஸ்’.. மகளுக்கு ‘ஹலோ சகோ’... டிவி தொகுப்பாளினி ஆகும் ஸ்ருதி!
சின்னத்திரை தொகுப்பாளினி ஆகி இருக்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்.
சென்னை: நடிகை ஸ்ருதிஹாசன் சன் டிவி நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளராகி இருக்கிறார்.
சமீபகாலமாக வெள்ளித்திரை முன்னணி நடிகர்கள் பலர் சின்னத்திரைக்கு படையெடுத்து வருகின்றனர். நடிகரும், மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவருமான கமல், விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன்1 மற்றும் சீசன் 2 நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.
அவரைத் தொடர்ந்து நடிகர் விஷால், சன் டிவியில் 'நாம் ஒருவர்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இவரைப் போலவே ஜெயா டிவியில் வரலட்சுமியும், ஜீ தமிழில் இயக்குநர் கரு.பழனியப்பனும் புதிய நிகழ்ச்சியில் தொகுப்பாளராகி இருக்கின்றனர்.

சின்னத்திரையில் ஸ்ருதி:
இந்த சூழ்நிலையில், கமலின் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசனும் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளராகி இருக்கிறார். இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள ‘ஹலோ சகோ' என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளார். இதன் ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.
எதிர்பார்ப்பு:
இதன் முதல் நிகழ்ச்சியில் வரவுள்ள பிரபலம் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிகழ்ச்சி எப்படிப்பட்டதாக இருக்கும் என்ற ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது. ஸ்ருதி பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி நிச்சயம் கலர்புல்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொகுப்பாளர்:
தற்போது இந்தி படமொன்றில் மட்டுமே ஸ்ருதி நடித்து வருகிறார். தமிழில் புதிய படங்கள் எதிலும் அவர் ஒப்பந்தமாகவில்லை. சமீபகாலமாக காதலருடன் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் விரைவில் திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. அதனால் தான் புதிய பட வாய்ப்புகளை அவர் ஏற்கவில்லை எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தான் நிகழ்ச்சித் தொகுப்பாளராகி இருக்கிறார் ஸ்ருதி.

இது தான் காரணம்:
சினிமாவில் ஒரு படத்தில் நடிப்பதைவிட, சின்னத்திரையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பது பத்து திரைப்படங்களில் நடித்ததற்கு சமம் என்பதை பிக் பாஸ் நிகழ்ச்சியில் திரும்பத் திரும்பக் கூறி வந்தார் நடிகர் கமல். எனவே தான் சமீபகாலமாக சினிமா கலைஞர்களின் கவனம் சின்னத்திரை பக்கம் திரும்பியிருக்கிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications