Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குங்க... ரசிகர்களின் மனசை அள்ளும் "சந்திரா"

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமாக்களில் அறிமுகமாகி அதில் பல நடிகைகள் வெற்றி மாலை சூட்டினாலும் சிலருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது. அதனால் இரண்டாவது சாய்ஸ் ஆக சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்து அதில் சினிமாவில் விடவும் அதிகப்படியாக ரசிகர்களை ஈர்த்து கலக்கி வருகிறார்கள்.

அதில் சந்திரலேகா சீரியல் மூலம் பிரபலமான ஸ்வேதா பண்டேகரும் ஒருவர். தமிழ்நாட்டில் பிறந்த தமிழரான இவர் தமிழ் மலையாளம் ஹிந்தி ஆங்கிலம் மராட்டியம் ஆகிய மொழிகளில் புகழ் பெற்றவராக விளங்குகிறார்

அதுமட்டுமல்லாமல் விளம்பர படங்களின் மூலம் அறிமுகமாகி திரைப்படத் துறையில் கால்பதித்து சன் டிவியில் ஒளிபரப்பாகும் சந்திரலேகா தொடர் மூலம் உலகளாவிய தமிழ் மக்கள் மனங்களில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கிறார்.

புகழின் உச்சி

புகழின் உச்சி

இந்த சீரியலின் மூலம் இவர் புகழின் உச்சிக்கு சென்றிருக்கிறார். இதைப் பற்றி இவர் திரைப்படங்களில் இல்லாத அளவிற்கு ரசிகர்களில் அதிகரிப்பது எனக்கு ரொம்பவும் சந்தோஷமாகவும் நான் சரியான பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன் என்றும் எனக்கு தெரிகிறது. இந்திய ஊடகங்களில் இதுவரை எனது இயற்பெயர் வெளிவந்ததில்லை எனது பெயரை விடவும் சந்திரலேகா நாடகத்தில் தான் நடிக்கும் சந்திரா என்னும் கேரக்டர் பெயரையே என்னுடன் நிலைத்துவிட்டது.

உண்மையான பெயர் சொப்னா

உண்மையான பெயர் சொப்னா

என்னுடைய உண்மையான பெயர் சொப்னா என்ற பெயரை குறும்படத்திற்காக ஸ்வேதா என்று மாற்றிக் கொண்டேன். அவரது குடும்ப பெயரான பண்டேகர் என்னும் பெயரை இணைத்து ஸ்வேதா பண்டேகர் என்று மாற்றி இருக்கிறாராம். இந்த தொடரின் கதாநாயகியாக நடிப்பதற்கு கிடைத்த வாய்ப்பு நான் செய்த புண்ணியம் ஆகவே பார்க்கிறேன். என்னை மகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறது.

நீடித்து ஒளிபரப்பாகும் சீரியல்

நீடித்து ஒளிபரப்பாகும் சீரியல்

கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக சன் டிவியில் இந்த சீரியல் ஒளிபரப்பாகிறது . என்னுடைய நடிப்பையும் என்னையும் முழுமையாக ஏற்றுக் கொண்ட எனது ரசிகர்களும் தான் எனக்கு முக்கியம் என்றும் கூறியிருக்கிறார். இவர் சென்னையில் உள்ள பிஎம் ஆர் கல்லூரியில் பொறியியல் படிப்பை படித்துள்ளார். காலேஜ் படிக்கும் போது ஆரம்பத்தில் ஒரு சில விளம்பர படங்களில் நடித்து வந்தார்.

அழகிய வாய்ப்பு

அழகிய வாய்ப்பு

இவருடைய அழகை பார்த்து இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2007 ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ஆழ்வார் திரைப்படத்தில் அவரின் தங்கையாக நடித்திருந்தார். பல நடிகைகள் அஜித்துடன் நடிக்க போட்டி போட்டுக்கொண்டு தவமாய் தவம் இருக்கும்போது இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய பரிசாக தான் இருந்ததாம். முதல்படம் அஜித்படம் என்பதால் அடுத்த படத்திலேயே இவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

திரைப்படம்

திரைப்படம்

தொடர்ந்து வள்ளுவன் வாசுகி என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தை மறுமலர்ச்சி படத்தை இயக்கிய பாரதி தான் இயக்கி இருக்கிறார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தராததால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைப்பது கொஞ்சம் காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது.

நான் நடித்தால் கதாநாயகியாக தான் நடிப்பேன் என்று காத்திருக்காமல் கிடைத்த வாய்ப்புகளில் தன்னுடைய திறமையை காட்ட வேண்டும் என்று இவர் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார்.

பூலோகம் படம்

பூலோகம் படம்

கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூலோகம் படத்திலும் நடித்திருந்தார். இவர் ஆசையோடு வந்த கதாநாயகி கனவு தொடர்ந்து நீடிக்க நேரத்தில் விளம்பரங்கள் தான் இவருக்கு கைகொடுத்திருக்கிறது. பிரபலமான விளம்பரங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது அடுத்த கட்டமான சீரியலில் இவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் கெட்டியாக பிடித்து ஐந்து வருடம் ரசிகர்களுக்கு சலிப்பு தட்டாமல் ஒரு சீரியல் ஓடிக்கொண்டு இருக்கிறது என்றால் அது லேசான காரியம் இல்லை.

நீண்ட காலம் நடிப்பது சிரமம்தான்

நீண்ட காலம் நடிப்பது சிரமம்தான்

அதை விட முக்கியமாக, அதில் நடித்த அதே கதாநாயகி தொடர்ந்து நடித்துக் கொண்டிருப்பது என்பது கூட ஒரு கஷ்டமான காரியமாக தான் இருக்கிறது. ஆனாலும் இந்த சீரியலில் இவர் சந்திராவாக எல்லோர் மனதிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பொதுவாக சினிமாக்களில் ஒருவரை நல்லவராக நடித்தால் உண்மையிலேயே அவர் நல்லவர் என்று மக்கள் நம்பி விடுவதும் அவர் வில்லனாக நடித்தால் அவர் அந்த கதாபாத்திரமாகவே நாம் மனதில் கற்பனை பண்ணி அவரது கேரக்டரை முடிவு பண்ணி விடுவதும் வழக்கம் தான்.

பெருமையான சந்திரா

பெருமையான சந்திரா

அது போல இவர் சந்திரா கேரக்டரில் பெண்களின் பாதுகாவலராக பல பெண்களுக்கு முன்னுதாரணமாக தைரியமாக நடித்திருப்பார் இதைப்பார்த்த பல பெண்களும் இவரை புகழ்ந்து தள்ளுகிறார்கள். சினிமாக்களில் கலக்கிக் கொண்டே இருந்தாலும் இவர் இன்ஸ்டாகிராம் ட்விட்டர் பக்கங்களையும் அப்பப்ப போஸ்ட் போட்டு அடுத்த கட்டமான ரசிகர்களை கவர்ந்து இழுப்பதற்கு முடிவு பண்ணி களமிறங்கியிருக்கிறார். சேலையில் புசுபுசுன்னு நடித்துக்கொண்டிருந்த இவர் இணையதளங்களில் மாடர்ன் உடையுடன் கலக்கிக்கொண்டு வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+