காதலின் பிரிவு.. அந்த வலி.. இந்த முத்தம்.. உருக வைக்கும் சித்து ஸ்ரேயா
சென்னை: தொலைக்காட்சி சீரியல் வரலாற்றில் முதல்முறையாக லிப் லாக் காட்சியில் நடித்து பரபரப்பை கிளப்பிய திருமணம் சித்து - ஸ்ரேயா ஜோடிதான்.
லாக்டவுன் பிரிவின் ஏக்கத்தை படம்பிடித்து வெளியிட்டிருக்கும் வீடியோ தான் சின்னத்திரை ஏரியாவில் இப்போ வைரல். சினிமா ஜோடியா நடிச்சவர்களுக்கிடையே காதல் மலர்ந்து அவர்கள் நிஜவாழ்க்கையில் சேர்வது தமிழ்த் தொலைக்காட்சிக்கு புதிதல்ல.
சின்னத்திரையிலும் அப்படி நிறைய ஜோடிகள் சேர்ந்திருக்கின்றன சேத்தன் -தேவதர்ஷினி, ராஜ்கமல் -லதா ராவ், தொடங்கி செந்தில்- ஸ்ரீஜா, ரக்ஷிதா - தினேஷ் ,ஆலியா- சஞ்சீவ் என எத்தனையோ தம்பதிகளைப் உதாரணமாக சொல்லலாம்.

திருமண பந்தம்
ஏற்கனவே திருமண பந்தத்தில் நுழைந்த கணவன் மனைவி ஆகிவிட்ட இந்த ஜோடிகள் எல்லாம் நிச்சயமாக பிரிவை அனுபவித்திருக்க மாட்டார்கள். ஆனால், தற்போது மும்முரமாக காதலித்து வருகின்ற சில ஜோடிகள் தான் ரொம்ப புலம்புகிறார்கள். அந்த வகையில் சீரியல் வரலாற்றில் முதல்முறையாக லிப் லாக் காட்சியில் நடித்து பரபரப்பை கிளப்பிய திருமணம் தொடரின் சித்து - ஸ்ரேயா அஞ்சல் லாக்டவுன் பிரிவின் ஏக்கத்தை படம்பிடித்து வீடியோ போட்டுள்ளனர்.

பிரிவு வீடியோ
இந்த வீடியோதான் இப்போது வைரலாகியுள்ளது. இவர்கள் இருவரும் அவரவர் வீட்டிலிருந்து சூட் செய்து ஒரு வீடியோவாக வெளியிட்டிருக்கிறார்கள். வீடியோவில் தேநீர் அருந்தியபடி ஸ்ரேயா காபி குடித்துக்கொண்டே முத்தங்களை பறக்கவிட அதை ஒன்னு விடாமல் லபக் லபக்கென்று அழகாய் கேட்ச் பிடிக்கிறார் சித்து. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது

என்னய்யா நடக்குது அங்கே
இந்த ரீல் ஜோடி 2 ரியல் ஜோடி பற்றி என்ன சொல்றாங்கன்னா இவர்கள் இருவருக்குமே உண்மையான சந்தோஷ் - ஜனனி (சீரியலில் இவர்களின் பெயர்கள்) ஆக தான் ரசிகர்கள் மத்தியில் வாழ்ந்துகிட்டு இருக்காங்களாம். இந்த சீரியலில் ஸ்ரேயா ஜனனி ஆக நடிக்கவில்லை மாறிட்டாங்க என்றுதான் சொல்லணும். அந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் அவருக்கு வரவேற்பு இருக்கிறது.

சொந்த ஊர் மங்களூர்
ஸ்ரேயாவுக்கு சொந்த ஊர் மங்களூர். 1995இல் பிறந்துள்ளார் அவருக்கு சின்ன வயசுல இருந்தே டான்ஸ்ல தான் ரொம்ப இஷ்டமாம். அவங்க அம்மாவுக்கு தான் இவங்க நடிக்கிறதுக்கு ஆசையாம். அம்மாவின் ஆசைக்காக தான் இவங்க ஐந்து வயதிலேயே ஸ்கூல் நிகழ்ச்சிகளில் நடிக்க ஆரம்பித்தார். அதுவே இப்பொழுது அதற்கு பிரபஷனல் ஆகிவிட்டதாம். ஸ்ரேயா கன்னட திரைப்படத்தில் தான் முதலில் நடிக்க தொடங்கினார். பிறகு கன்னட சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

நந்தினி சீரியல்
கன்னடத்தில் அவருடைய வெற்றியை தொடர்ந்து தான் சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி தொடரில் நந்தினியின் தங்கையாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது .அதைத் தொடர்ந்து தான் திருமணம் தொடரிலும் இவருக்கு கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்திருக்கிறது. திருமணம் தொடரில். ஹீரோ ஹீரோயினியாக ஸ்ரேயாவும் சித்துவும் கமிட் ஆனபோது ஆரம்பத்தில் இவர்களுக்குள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகலையாம். இருவருமே அந்த அளவுக்கு பேசிக் கொள்ளவே மாட்டார்களாம். எலியும் பூனையுமாக தான் இருந்திருக்கிறார்கள்.

மெல்ல நுழைந்த புரிதல்
அதன்பிறகுதான் இவர்களுக்குள் ஒரு புரிதல் ஏற்பட்டிருக்கிறது. அடுத்த சில மாதங்களிலேயே இருவருக்குமிடையில் ஏதோ ஒன்று இருப்பதாக கிசுகிசு கிளம்பியது. இன்னொருபுறம் சீரியல் ரசிகர்கள் மத்தியில் இந்த ஜோடி பொருத்தம் வெகுவாக ரசிக்கப்பட, இயக்குனரும் எக்கச்சக்க குளோசப் காட்சிகளை புகுத்தி ரீல் லவ்வை ரொம்ப ஆழமாக்கி விட்டார். கூடவே ரியல் லவ் ஆவதற்கும் தன் பங்குக்கு ரோடு போட்டுக் கொடுத்துள்ளார். இதோட விளைவு கிசுகிசுப்பு என்றது போய் இருவர் காதுபடவே இவர்களுக்கு இடையே காதல் என பேசப்பட்டது.

அது வேற இது வேற
இப்படி கிளம்பிய பேச்சுக்களை இருவருமே கண்டுகொள்ளவில்லை அதன் அதன்பிறகும் சேர்ந்துதான் பேட்டிகள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்
இவங்க லவ் பண்றாங்களா இல்லையா என்ன அறிந்துகொள்ள சீரியல் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வந்த நேரத்தில் தான் கொரானா வந்து சேர்ந்தது. சீரியலும் சூட்டிங்கும் ரத்தாகி இப்போது சித்து சென்னையிலும் ஸ்ரேயா பெங்களூரிலும் இருக்கிற சூழலில் தான் தற்போது முத்தங்களை பறக்கவிட்டு வீடியோ வெளியிட்டிருக்கிறது இந்த ஜோடி.

எதுக்கு முத்தம்
வீடியோ குறித்து டிவி இண்டஸ்ட்ரியைப் பொருத்தவரை ஹீரோ ஹீரோயின்களை ஜோடியா மக்களுக்கு புடிச்சு போச்சுன்னா பிறகு அந்த சீரியலை அடிச்சிக்கவே முடியாது. அந்த வகையில் என்னையும் ஸ்ரேயாவையும் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டதோடு சீரியல் ஜோடியான நாங்க ரியல் லைப் ல யும் சேரணும்னு ஆசைப்படுறாங்க. இந்த நிலையில் அவங்க எங்கள ரொம்பவே மிஸ் பண்ற மாதிரி ஆகி விட்டதால் உங்களை சேர்ந்து பார்க்க ஆசையா இருக்கு என்று கேட்டுக்கொண்டே இருந்தாங்க.

நல்லாருக்கே ஜோடி
பல துன்பங்களை அனுபவித்து இருக்கிறவங்களோட இந்த சின்ன ஆசையை நிறைவேற்றலாம்னு தான் ஸ்ரேயா கிட்ட கேட்டேன். அவர்களும் சம்மதிக்கவே வீடியோ வெளியிட்டோம். ஆனால் நாங்களே எதிர்பார்க்காத வகையில் வரவேற்பு கிடைத்துள்ளது என்று சொல்லி இருக்கிறார். உண்மையிலேயே இந்த ஜோடியை எல்லோரும் உண்மையான ஜோடி என்றுதான் அழைக்கிறார்கள். அந்த அளவிற்கு இவர்களின் நடிப்பு இந்த சீரியலில் இருக்கிறது. இப்போ இருக்கிற வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் களில் தவறாது இவர்களின் வீடியோ தான் இடம் பிடிக்கிறது. லவ் ரொமான்டிக் வீடியோக்களில் ஃபர்ஸ்ட் இடத்திலேயும் இவர்களின் வீடியோ தான் இருக்கிறது.
என்னவோ பண்ணுங்கப்பா.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications