அரை குறை டிரஸ் போட்டு ஆட கூச்சமில்லையானு கேட்ட ஷர்மிலி.. சில்க் ஸ்மிதா சொன்ன உருக்கமான பதில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரை குறை டிரஸ் போட்டுட்டு நடிக்க கூச்சமா இல்லையா அக்கா என நடிகை ஷர்மிலி கேட்ட கேள்விக்கு நடிகை சில்க் ஸ்மிதா உருக்கமாக சொன்ன பதில் என்ன தெரியுமா?

80 களில் திரைப்பட கதாநாயகிகளை விட அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் கவர்ச்சி பாடலுக்கு நடனமாடும் சில்க் ஸ்மிதா. சில்க்கின் கண்களிலேயே கவர்ச்சியை வெளிப்படுத்தும் பார்வை, கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழ், அழகான நடை... இவற்றிற்கு ரசிகர்கள் யாரும் இல்லாமல் இல்லை.

ஆண் ரசிகர்களை போல் பெண்களும் சில்க்கின் அழகிற்கு ரசிகைகளாக இருந்துள்ளனர். சில்க் ஸ்மிதாவின் பாடல் இருந்தால் அந்த படமே ஹிட்டடித்து போல் வசூலை அள்ளும் அளவுக்கு அவரது கவர்ச்சி நடனம் அந்த காலத்து ரசிகர்களை கட்டி போட்டது.

சில்க் டான்ஸ்

சில்க் டான்ஸ்

இன்னும் சிலர் சில்க்கின் டான்ஸை பார்ப்பதற்காகவே டிக்கெட் எடுத்து படம் பார்க்க வருவார்கள். சில்க்கின் பாட்டு முடிந்தவுடன் தியேட்டரே காலியாக இருக்குமாம். சில்க்கின் பாட்டை வைத்து மொக்கை படத்திற்கும் வசூலை அள்ளி குவித்த ஏராளமான தயாரிப்பாளர்கள் உள்ளனர். சில்க் ஸ்மிதா உதவும் மனப்பான்மை கொண்டவர். எல்லாவற்றுக்கும் மேல் பந்தா இல்லாமல் எளிமையை விரும்பும் நடிகையாகவே இருந்துள்ளார்.

ஜீரணிக்க முடியவில்லை

ஜீரணிக்க முடியவில்லை

அவரது இறப்பை இன்று வரை ரசிகர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. இந்த நிலையில் அவருடன் பயணித்த நடிகை ஷர்மிலி, தனியார் தொலைகாட்சி சேனலுக்கு சில்க் குறித்து கூறுகையில், கவர்ச்சி உடையில் நடிக்க எல்லா பெண்களுக்குமே தயக்கம் இருக்கும். எனக்கும் அந்த தயக்கம் இருந்தது. சில்க் ஸ்மிதாவை நான் எப்போதும் அக்கா என்றுதான் கூப்பிடுவேன்.

அரை குறை ஆடை

அரை குறை ஆடை

ஒரு நாள் அவரிடம் அரை குறை டிரஸ் போட்டுக்கிட்டு ஆடுவதற்கு உங்களுக்கு கூச்சமாக இல்லையா என கேட்டேன். அதற்கு அவர் "எனக்கும் இழுத்து போர்த்திகிட்டு நடிக்கதான் ஆசை. ஆனால் எவன்டி பார்ப்பான்" என மிகவும் உருக்கமாக கேட்டார். அவரது பதிலிலேயே அவருக்கு இது போல் நடிக்க துளியும் விருப்பமில்லை. ஆனாலும் குடும்ப வறுமைக்காக அவர் இவ்வாறு நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது தெரிந்தது.

பட்டுப் புடவை

பட்டுப் புடவை

சில்க்கிற்கு பட்டுப்புடவை என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் ஷூட்டிங் இல்லாத நேரங்களில் சில்க் ஸ்மிதா பட்டுப் புடவையில்தான் முழு நேரமும் இருப்பார். அது போல் தலை நிறைய பூ வைத்து நகைகளை அணிந்து கொள்ளவும் அவருக்கு மிகவும் பிடிக்குமாம். இதை ஒரு நாள் அவரே என்னிடம் சொன்ன போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது என்றார் ஷர்மிலி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+