வேட்டுவம் பட சூட்டிங்கில் காலமான மோகன்ராஜ் குடும்பத்திற்கு சிலம்பரசன் செய்த உதவி.. அதுவும் இத்தனை லட்சம்!
சென்னை: தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழும் சிலம்பரசன் (STR), சமீபத்தில் தனது கருணை உள்ளத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். திரைப்படங்களில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றிய மோகன் ராஜ் மரணமடைந்ததை அடுத்து, அவரது குடும்பத்திற்கு உதவும் வகையில் நடிகர் சிலம்பரசன் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.1,00,000 வழங்கியுள்ளார்.
மோகன் ராஜ் பல ஆண்டுகளாக திரையுலகில் தொழிலாளியாக தன்னுடைய பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளார். அவரது மறைவு குடும்பத்தினருக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சிலம்பரசனின் இந்த உதவி மனிதாபிமானத்தை வெளிக்காட்டும் செயலாக அமைந்துள்ளது. திரைத்துறையில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டவராக நடிகர் சிலம்பரசன் திகழ்கிறார் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும்.

சிலம்பரசன் செய்த உதவி
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து, நடிகர் சிலம்பரசனுக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். நடிகர் சிலம்பரசன் தனது மனிதநேய செயலால், திரையுலகின் மற்றொரு பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.
பிரபல திரைப்பட இயக்குனரான பா.ரஞ்சித், 75-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு, "வேட்டுவம்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். இது ஒரு கேங்ஸ்டர் படம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
வேட்டுவம் படம்
முதலில் இது விக்ரம் படமா? அல்லது கமல் படமா? என்றெல்லாம் பேச்சுக்கள் எழுந்தன. ஆனால், இது அட்டகத்தி தினேஷுக்காக எழுதப்பட்ட கதை என்று பா.ரஞ்சித் தெளிவுபடுத்தினார். இப்படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூர் பகுதிகளில் வேகமாக நடைபெற்று வந்த நிலையில், எதிர்பாராதவிதமாக கடந்த வாரம் சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கும்போது ஸ்டண்ட் மாஸ்டர் மோகன் ராஜ் உயிரிழந்தார்.
மோகன் ராஜின் மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த துயர சம்பவத்தையடுத்து இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மோகன் ராஜ் மங்காத்தா, விஸ்வாசம், கோட் போன்ற பல திரைப்படங்களில் கார் ஸ்டண்ட் காட்சிகளில் பணியாற்றியுள்ளார். படப்பிடிப்பின்போது ஸ்டண்ட் மாஸ்டர்கள் உயிரிழப்பது இது முதல் முறையல்ல என்றாலும், இந்த மரணம் மிகுந்த வேதனையை அளித்தது. வேட்டுவம் படக்குழுவினர் மோகன் ராஜுக்கு அஞ்சலி செலுத்தினர். சினிமா பிரபலங்கள் பலரும், பா.ரஞ்சித் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் படப்பிடிப்பு நடத்தியிருக்க மாட்டார் என அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.
ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் மறைவு
மோகன் ராஜின் மறைவு குறித்து இரங்கல் தெரிவித்த இயக்குனர் பா.ரஞ்சித், அவரது மரணம் தன்னை உலுக்கிவிட்டதாகவும், மீளா துயரில் இருப்பதாகவும் கூறினார். ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு முறையான பாதுகாப்பு இல்லை எனவும், தமிழக அரசு போதிய நிவாரணம் வழங்கினால் அவர்களது குடும்பத்திற்கு உதவியாக இருக்கும் எனவும் இயக்குனர் செல்வமணி கோரிக்கை வைத்தார். நடிகர் சூர்யா கடந்த 10 வருடங்களாக ஸ்டண்ட் கலைஞர்களுக்கு இன்சூரன்ஸ் கட்டி வருவதாக ஸ்டண்ட் சில்வா தெரிவித்தார். இந்த செய்தி தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த விபத்தைத் தொடர்ந்து, பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரும் 100 பேருக்கு இன்சூரன்ஸ் எடுத்துள்ளார் என்ற செய்தியும் வெளியானது.
நடிகர் விஷால், மோகன் ராஜின் குழந்தைகளின் படிப்புச் செலவை தானே ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். ஸ்டண்ட் கலைஞர்களுக்கு சங்கம் இருந்தும், அவர்களுக்கு முறையான காப்பீடு கிடைப்பதில்லை என்ற வேதனை நிலவுகிறது. மோகன் ராஜை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு நடிகர் சிம்பு ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications