சந்திரமுகி ஓவியத்தில் இருப்பது இந்த நடிகையா? வென்றது சிம்ரனின் தாய்மை.. ஜோதிகாவுக்கு சான்ஸ்: பிரபலம்
சென்னை: முன்னணி நடிகைகளில் ஒருவராக 90களில் வலம் வந்தவர் சிம்ரன்.. தமிழ், இந்தி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்த சிம்ரன், தற்போது மீண்டும் சினிமாவில் தலைகாட்ட துவங்கியிருக்கிறார்.. இதனால், தன்னுடைய வயதுக்கேற்ற, முக்கிய கேரக்டர்கள் கிடைத்தால், அதில் நடித்துவருகிறார். டூரிஸ்ட் ஃபேமிலி என்கிற படத்திலும் நடித்து முடித்துள்ள நிலையில், சமீபத்தில் அவரது பேச்சு ரசிகர்களிடையே பேசுபொருளாகியிருக்கிறது. சிம்ரனின் கருத்துக்கு மூத்த பத்திரிகையாளர்களும் தங்களது கருத்துக்களை சொல்லி வருகிறார்கள்.
2 நாட்களுக்கு முன்பு நடந்த விருது வழங்கும் விழா ஒன்றில் பங்கேற்ற சிம்ரன், "என்னுடன் ஒரே காலகட்டத்தில் நடித்த நடிகைக்கு ஒருமுறை, உங்களை அந்த கேரக்டரில் பார்த்தது சர்ப்ரைஸாக இருந்தது என மெசேஜ் அனுப்பினேன்.
உடனே அவர், "ஆண்ட்டி ரோலில் நடிப்பதைவிட இந்த ரோல் பெஸ்ட்" என்று ரிப்ளை பண்ணியிருந்தார்.. இதை பார்த்ததுமே எனக்கு ஷாக்கிங்காக இருந்தது.. 20, 25 வயதுக்காரர்களுக்கு அம்மாவாக நடித்தால் தவறா என்ன? கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் அம்மா வேடம் ஏற்று நடித்தேன்.. என்னை பொறுத்தவரை டப்பா ரோல்களில் நடிப்பதைவிடவும் ஆண்ட்டி ரோலில் நடிக்கலாம்" என சிம்ரன் பேசியிருந்தார்.

அது ஜோதிகாவா?
சிம்ரனின் இந்த பூடகமான பேச்சு பெரிய சலசலப்பை தந்துவிட்டது. சிம்ரன் சொல்வது எந்த நடிகையை? ஜோதிகாவா? என்ற யூகம் ஓடிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான நெட்டிசன்கள், டப்பா கார்ட்டெல் என்ற வெப்சீரிஸில் நடித்தது ஜோதிகா என்பதால், டப்பா என்று அவரைதான் சொல்வதாகவும் கமெண்ட் பதிவிட்டு வருகிறார்கள்.
இதுகுறித்துதான், King24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா சொல்லும்போது, "சக நடிகைகள் பேசும்போது, தனிமனித வார்த்தைகளை விடாமல் கவனமாக பேச வேண்டும். சிம்ரன் -ஜோதிகா இவர்கள் இருவருக்குள்ளும் லடாய் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. உதாரணத்துக்கு சந்திரமுகி கேரக்டருக்கு முதலில் நடிக்கவிருந்தது சிம்ரன்தான்.
கர்ப்பமான சிம்ரன்
டைரக்டர் பி.வாசு சிம்ரனை அணுகி இதுகுறித்து கேட்டதற்கு, தான் கர்ப்பமாக இருப்பதால், கிளைமாக்ஸ் காட்சியில் டான்ஸ் ஆட முடியாது, நடன மங்கையர் கேரக்டரில் தன்னால் அந்த படத்தில் நடிக்க முடியாது என்று சிம்ரன் சொல்லியிருக்கிறார்.. இதை பி.வாசுவே ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.. நாங்கள் எவ்வளவோ சிம்ரனிடம் நடிக்க கேட்டோம், இறுதியில் சிம்ரனின் "தாய்மைதான் வென்றது" என்று கூறியிருந்தார்.
சந்திரமுகி ஓவியம்கூட சிம்ரனை மையப்படுத்திதான் வரையப்பட்டிருக்குமே, தவிர, ஜோதிகாவின் முகஜாடை அதில் இருககாது. ஆனால், சிம்ரனைவிட ஜோதிகா நன்றாக நடித்திருக்கிறார் என்று பலரும் பேசினார்கள்..
சிம்ரன் மனக்குமுறல்
ஒருவேளை அதுகூட சிம்ரன் மனதில் பதிந்திருக்கலாம். ஆனால், சிம்ரன் தன்னுடைய மனக்குமுறலை கொட்டும்போது அந்த நடிகையின் பெயரை வெளிப்படையாக சொல்லவில்லை.. சிம்ரன் என்றில்லை, யாராக இருந்தாலும், சம்பந்தப்பட்ட நபரின் பெயரை சொல்லிடுங்க, எதுக்காக விடுகதை போட்டு வைக்கணும்.. இதனால், சம்பந்தமேயில்லாதவர்களையும் சந்தேகிக்க தோன்றுகிறது." என்று தெரிவித்துள்ளார்.
ஏன் ஆண்ட்டி ரோல்
இதுகுறித்து வலைப்பேச்சு அந்தணன் கருத்து சொல்லும்போது, உண்மையிலேயே சிம்ரன் உண்மையைத்தான் சொல்றாங்களானு தெரியல.. அல்லது மேடை பரபரப்புக்காக இதை சொன்னார்களா தெரியவில்லை.
ஒருவேளை அது ஜோதிகாவாக இருந்தால், அது தவறில்லை. ஏன் ஆண்ட்டி ரோல் செய்கிறீர்கள் என்று சிம்ரன் மீதான அக்கறையில்கூட சொல்லியிருக்கலாம். அதையெல்லாம் ஏன் பொறாமையாக பார்க்க வேண்டும்? விமர்சிக்கக்கூடியதாக ஏன் பார்க்க வேண்டும்? ஒரு தவறான விமர்சனம் போல சிம்ரன் இப்போது சொல்வதுதான் ஆச்சரியமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications