நல்ல குடும்பத்திலிருந்து வந்த பெண்! என்ன நிலைமையில் இருக்கேன் தெரியுமா? ஆர்த்தி ரவிக்கு கெனிஷா பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரவி மோகன், ஆர்த்தி இடையிலான மனமுறிவு பிரச்னையில் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக பாடகி கெனிஷா கூறியுள்ளார். பலரும் ஏகத்துக்கும் தன்னை குற்றம்சாட்டி வருவதாக கவலை தெரிவித்துள்ள கெனிஷா, தான் நல்ல குடும்பத்தில் இருந்து வந்த பெண், உங்களுக்கு தைரியம் இருந்தால் என் முகத்தைப் பார்த்து என் மீதான விமர்சனத்தை முன் வையுங்கள், நான் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அதற்கு முன்னர் எனது தரப்பில் சொல்வதையும் கேட்டுவிட்டு விமர்சியுங்கள் என்று பதிவிட்டுள்ளது பெரும் கவனத்தை பெற்று வருகிறது.

நடிகர் ரவி மோகன், ஆர்த்தி இருவரிடையே கருத்து மோதல் ஏற்பட்டு வந்த நிலையில், விவாகரத்து வரை சென்றுள்ளது.. கடந்த செப்டம்பர் 9ம் தேதி தன்னுடைய மனைவியை பிரிவதாக ரவிமோகன் அறிவித்ததையடுத்து, இவர்களது விவாகரத்து வழக்கு விசாரணை கோர்ட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Television Singer Kenisha Ravi Mohan

பரபரப்பு அறிக்கை

இதற்கிடையில் நடிகர் ரவிமோகன் பாடகி கெனிஷாவுடன் திருமண விழாவில் பங்கேற்றிருந்தது மிகப்பெரிய சலசலப்பை உண்டுபண்ணி வருகிறது..

இதுகுறித்து ஆர்த்தி பரபரப்பு அறிக்கை வெளியிட, உடனே ரவிமோகனும் பதில் அறிக்கை வெளியிட, இதற்கு நடுவில் ஆர்த்தியின் அம்மா சுஜாதா விஜயகுமார் கண்ணீர் அறிக்கை வெளியிட, இவர்களுக்குள் மாறி மாறி அறிக்கை போர்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

40 லட்சம் ஜீவனாம்சம்

ரவி தன்னை பிரிய மூன்றாவது ஒரு நபர் தான் காரணம், மாதம் 40 லட்சம் ஜீவனாம்சம் தேவை என ஒவ்வொரு அதிரடியையும் ஆர்த்தி கிளப்பி வரும் நிலையில், இதற்கு கெனிஷா பதிலளித்து இன்ஸ்டாவில் சில பதிவுகளை போட்டிருக்கிறார்.

"நான் நல்ல குடும்பத்தில் இருந்து வந்த பெண். நடந்ததற்கு நான் தான் காரணம் என உறுதியாக இருந்தால், என்னை நீதிமன்றத்திற்கு வர வையுங்கள். எனக்கு எதிராக வெறுப்பை மட்டுமே நீங்கள் மீடியாவில் பரப்பினால், தயவுசெய்து அதை நிறுத்துங்க.

நான் ரொம்ப நல்ல குடும்பத்தில் இருந்து வந்த பெண். உண்மை என்னவாக இருக்கும் என்பதை ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறீர்கள்? நீங்கள் எனக்கு கொடுக்கும் கமெண்டுகள், சாபம், கொலை மிரட்டல் போன்ற விஷயங்களால் என்ன நிலையில் இருக்கிறேன் என யாராவது யோசித்தீர்களா?

தைரியம் இருந்தால்

கர்மா பற்றி பேசி என்னை குறை சொல்கிறீர்கள். ஆனால் உண்மை வெளியில் வரும்போது உங்களுக்கு எல்லாம் என்ன நடக்கும் என நான் பார்க்க விரும்பவில்லை. நான் எனது கமெண்ட் செக்‌ஷனை ஆஃப் செய்யப்போவது கிடையாது. மேலும், நான் எங்கேயும் ஓடிப்போக மாட்டேன். யார் பின்னாலும் நான் சென்று ஒளிந்து கொள்ளவும் போவதில்லை. நான் இங்கே தான் இருக்கப் போகிறேன்.

நீங்கள் என் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் உண்மை என்றால் என்னை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். நான் நீதிமன்றத்திற்கு வரத் தயாராக இருக்கிறேன். நீதிமன்றம் சொல்லட்டும் என் மீது தவறு என்று. உங்களுக்கு தைரியம் இருந்தால் என் முகத்தைப் பார்த்து என் மீதான விமர்சனத்தை முன் வையுங்கள், நான் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அதற்கு முன்னர் எனது தரப்பில் சொல்வதையும் கேட்டுவிட்டு விமர்சியுங்கள்.

உருவகேலி பொய்கள்

அதை விட்டுவிட்டு உருவக்கேலி செய்வது, பொய்களைப் பரப்புவது, அவதூறுகள் பரப்புவது, கொலை மிரட்டல் விடுவது போன்றவற்றை தவிருங்கள். நான் நல்ல குடும்பத்தில் இருந்து வந்தவள். என்னை கர்மா தண்டிக்கும் என்று கூறுகிறார்கள். நான் உண்மை ஒருநாள் அனைவருக்கும் தெரியவரும். உண்மைதான் நிகரில்லாதது.

என் மீது வைக்கப்படும் வசை சொற்கள் மற்றும் குற்றச்சாட்டுகளை நான் கடவுளிடம் கொடுத்துவிடுகிறேன். கடவுள் பார்த்துக் கொள்ளட்டும்" என்று கெனிஷா பதிவிட்டு இருக்கிறார். மேலும் இந்த விஷயத்தில் கடவுளிடம் தான் சரணடைவதாக அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+