அன்றும் இன்றும்.. ரவி மோகன் போட்டோ போட்டு கெனிஷா வெளியிட்ட பதிவு.. குவியும் கமெண்ட்ஸ்
சென்னை: பாடகி கெனிஷா நடிகர் ரவி மோகன் உடன் எடுத்த சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அவர் சமீபத்தில் பாடிய "அன்றும் இன்றும்" என்ற ஆல்பம் பாடலின் ப்ரோமோஷனில் ரவி மோகனும் கலந்து கொண்டிருக்கிறார். அதோடு பல பாடகர்களும் கலந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் ரவி மோகன் குடும்ப பிரச்சனை சில மாதங்களாகவே இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ரவி மோகன் தன்னுடைய மனைவி ஆர்த்தியை பிரிய போகிறேன் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு மறுப்பு தெரிவித்து ஆர்த்தியும் அறிக்கை வெளியிட்டிருந்தார். பிறகு ஆர்த்தி மற்றும் ரவி மோகன் இருவருமே தங்கள் தரப்பு நியாயங்களை தெரிவிக்கிறோம் என்று மாறி மாறி அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருந்தனர்.

நீதிமன்ற அறிக்கை
ஒரு கட்டத்தில் நீதிமன்றம் இவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்த குற்றச்சாட்டு அறிக்கைகளை நீக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. ஆனாலும் இவர்களுடைய பஞ்சாயத்தில் பாடகி கெனிஷாவின் பெயரும் இடம் பிடித்தது. கெனிஷா மற்றும் ரவி மோகன் இருவரும் நெருங்கி பழகுவதால் தான் ரவி மோகன் அவருடைய மனைவியை விவாகரத்து செய்கிறார் என்ற வதந்திகளும் பரவி வந்தது. அதற்கு ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் மறுப்பு தெரிவித்து இருந்தனர்.
ரவி மோகன் குடும்ப பிரச்சனை
பாடகி கெனிஷா பற்றி தமிழ் ரசிகர்களுக்கு ஆரம்பத்தில் பெரிதாக தெரியவில்லை என்றாலும் ரவி மோகன் குடும்பப் பிரச்சனையில் இவருடைய பெயர் வெளியே தெரிய ஆரம்பித்தது. அதற்கு பிறகு ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் எடுத்த புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் ட்ரெண்டானது. இந்த நிலையில் தன்னை பற்றி எந்த வதந்திகள் வந்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளவே மாட்டேன். நான் அடுத்தவர்கள் பேசும் வார்த்தைகளை என்னுடைய சிந்தனையில் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கெனிஷா கூறி இருந்தார்.

கெனிஷா பதிலடி
அதோடு அடுத்தவர்கள் நிம்மதி இல்லாமல் இருக்கிறார்கள் அதனால் தான் அவர்கள் மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சந்தோஷமாக இருந்தால் மற்றவர்களை பற்றி கவலைப்பட மாட்டார்கள். நான் எனக்கு தேவையில்லாதவர்கள் என்ன சொன்னாலும் அதை கண்டு கொள்ளாமல் என்னுடைய மனசுக்கு என்ன படுகிறதோ அதையே நான் செய்வேன் என்று கெனிஷா கூறியிருந்தார்.
சர்ச்சைகள்
இந்த நிலையில் சமீபத்தில் கெனிஷா பாடிய அன்றும் இன்றும் என்ற ஆல்பம் பாடல் வெளியாகியிருக்கிறது. இந்த பாடலுக்கு கெனிஷாவே டான்ஸ் ஆடி இருந்தார். அப்போது மார்டனாக உடை அணிந்திருக்கிறார். இது இணையத்தில் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அதே நேரத்தில் கெனிஷா இன்று வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வருகிறது.

பாடகி கெனிஷா பதிவு
அதில் ரவி மோகனுடன் எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்திருக்கிறார். அதோடு மேலும் சில பாடகர்களும் இருக்கிறார்கள். அவர்களும் கெனிஷா பற்றி பெருமையாகவே தங்களுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார்கள். இந்த பதிவில் அன்றும் இன்றும் உருவாக்கிய அனைவருக்கும் ரொம்பவும் நன்றி என்று கெனிஷா பதிவு வெளியிட்டிருக்கிறார். அதோடு இந்த மாலை நேரம் வேடிக்கையாகவும், அற்புதமாகவும், மாஸாகவும் இருந்தது. ஆனால் மிக முக்கியமாக வந்த ஒவ்வொருவருக்கும் ஒரு அழகான பரஸ்பர பாராட்டுகளின் மாலையாக இது அமைந்தது. எங்கள் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து நாங்கள் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்" என்று அந்த பதிவில் கெனிஷா தெரிவித்திருக்கிறார். இதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications