இந்த நபர் மட்டும் இல்லன்னா என் வாழ்க்கையே முடிந்திருக்கும்.. மனம் திறந்த கே.எஸ் சித்ரா
சென்னை: பாடகி கே.எஸ் சித்ராவின் பாடல்கள் சோகத்தில் இருக்கும் பலருக்கும் மனதிற்கு ஆறுதல் கொடுத்து வருகிறது.
ஆனால் பாடகி சித்ரா மன சோர்வில் இருக்கும் போது அவருக்கு ஆறுதல் கொடுத்தது ரேகா ராமச்சந்திரன் என்ற நபர் தானாம்.
தான் மீண்டும் பாடல் பாடுவதற்கு காரணமும் ரேகா ராமச்சந்திரன் தான் என்று கூறி அதற்கான காரணத்தையும் சித்ரா பகிர்ந்து இருக்கிறார்.

சின்ன குயில் சித்ரா, மெலடி குயின், நைட்டிங்கேல், வானம்பாடி, சங்கீத சரஸ்வதி, புன்னகை அரசி என பல பெயர்களால் அழைக்கப்படும் பாடகி சித்ரா பாடிய பாடல்கள் பலருடைய ஃபேவரைட் வரிசையில் இடம் பிடித்து இருக்கும். 80ஸ் ஹிட்ஸ் களாக இருந்தாலும் சரி 2கே கிட்ஸ்களாக இருந்தாலும் சரி சித்ராவின் பாடலுக்கு பலர் அடிமைகளாகவே இருக்கின்றனர்.
தூக்கம் வரவில்லையா? அப்பவும் சித்ராவின் பாடல் தான். இல்லை மனது சந்தோஷமாக இருக்கிறதா? அப்போதும் சித்ராவின் பாடல் தான். தத்துவமா அப்போவும் சித்ராவின் பாடல் இருக்கு, பயபக்தியும் தோன்றி விட்டால் அங்கேயும் சித்ராவின் பாடல் இருக்கு என விதவிதமாக இதுவரைக்கும் 12 ஆயிரம் பாடல்களுக்கு மேலே பாடிய சித்ரா தற்போது எஸ்பிபி சரண், விஜய் யேசுதாஸ் போன்ற அடுத்த தலைமுறை பாடகர் ஓடும் பாடிக்கொண்டிருக்கிறார்..
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சோகங்கள், சந்தோஷங்கள் போன்றவற்றை பகிர்ந்து இருக்கிறார். அதில் நான் சில இடங்களில் பாட்டு பாட போகும்போது என்னிடம் உருக்கமாக சிலர் பேசுவார்கள். அதுவும் ஆட்டோகிராப் திரைப்படத்தில் இடம் பெற்ற "ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே" எனும் பாடல்களை பலரும் பாராட்டுவார்கள். அந்த பாடலால் எங்களுடைய வாழ்க்கை மாறி இருக்கிறது என்றெல்லாம் கூறி இருக்கிறார்கள்.

ஆனால் அதற்க்கு எனக்கு கிரீடிட் கிடையாது. அந்த பாடலை எழுதியது பா விஜய் தான். அவர்தான் அந்த கிரீடிட்க்கு சொந்தமானவர். ஆனால் என்னுடைய வாழ்க்கையில் அப்படி ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர் என்றால் சென்னையை சார்ந்த ரேகா ராமச்சந்திரன் தான். இவர் சென்னையில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கான பள்ளி மற்றும் ஹாஸ்டலை நடத்தி வருகிறார். இவர் தான் எனக்கு ஒரு ஹாட் பாதர் என்று சொல்லும் வகையில் இருப்பவர்.
நான் என்னுடைய வாழ்க்கையில் மொத்தமாக உடைஞ்,சு இவ்வளவுதான் என்று சோகத்திற்குள் உறைந்த நேரத்தில் எனக்கு ஒரு வழிகாட்டியாகவும் தைரியம் கொடுத்தவர் என்றால் அது ரேகா ராமச்சந்திரன் தான். அவர் அவ்வளவு பிஸியாக இருந்தாலும் தினமும் அந்த நேரத்தில் என்னை நேரில் சந்தித்து ஆறுதலாக பேசுவார். எப்போதும் நேர்மறையான சிந்தனையோடு பேசிக் கொண்டிருப்பார். அதை பார்த்து தான் நான் என்னுடைய சோகங்கள் எல்லாம் மறந்து வெளியே வந்தேன்.
மீண்டும் பாடகியாக வந்ததற்கு முக்கிய காரணமும் அவர்தான். அந்த நேரத்தில் இனி எனக்கு எதுவுமே தேவையில்லை என்று நான் மனதொடிந்து போயிருந்த நேரத்தில் வாழ்க்கையின் இன்ப துன்பங்கள் மற்றும் எதிர்காலங்கள் கடந்த காலங்கள் பற்றி தெளிவாக எடுத்துக் கூறினார் என்று உருக்கமாக பேசியிருக்கிறார். இந்த நிலையில் நேற்று தான் சித்ராவின் ஒரே மகளின் இறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடகி கே.எஸ் திருமணத்திற்கு பிறகு 15 ஆண்டுகளுக்கு பிறகு தான் நந்தனா எனும் பெண் பிறந்து இருக்கிறார். ஆட்டிசம் பாதித்த அவர் குழந்தை மீது சித்ரா அதிகமான பாசமாக இருந்திருக்கிறார். அதனால்தான் எங்கே சென்றாலும் குழந்தையும் கூட்டிக் கொண்டே சென்றாராம். அப்போதுதான் துபாயில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தன்னுடைய குழந்தையோடு சித்ரா சென்று இருந்த இந்நிலையில் அங்கே உள்ள நீச்சல் குளத்தில் எதிர்பாராத விதமாக விழுந்து குழந்தை நந்தனா மரணம் அடைந்திருக்கிறார்.
இது சித்ராவின் வாழ்க்கையில் ஏற்பட்ட பெரிய துயரம்தான். புத்திர சோகம் பெரும் சோகம் என்று பலரும் சொல்வார்கள். அந்த மாதிரி தான் ஒரு நிலைமையில் சித்ரா இருந்தாலும், பலருக்கும் தன்னம்பிக்கை கொடுக்கும் பாடல்களை பாடிக்கொண்டு எப்போதும் அவருடைய முகத்தில் புன்னகை தழும்ப விட்டு பார்க்கும் நபர்களுக்கும் அவருடைய பாசிட்டிவ் எனர்ஜி வந்துவிடும் அளவில் வலம் வருகிறார். இந்த நிலையில் தற்போது சித்ரா பேசிய கருத்துக்கு ரசிகர்கள் ஆறுதல்கள் கூறி வருகிறார்கள்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications