மனோவின் மகனை.. அந்த பொண்ணோட பார்த்தேன்.. பாடகர் மனோவுக்கு மன உளைச்சல்.. வந்தாச்சு பயில்வான் ரங்கநாதன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாடகர் மனோ மகன்கள் குறித்து, மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கும் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. மனோ தற்போது மனஉளைச்சலில் இருப்பதாக கூறும் பயில்வான் ரங்கநாதன், இந்த சம்பவம் குறித்த சில கேள்விகளையும் எழுப்பியிருக்கிறார்.

White Horse Media என்ற யூடியூப் சேனலில் பாடகர் மனோவின் மகன்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.. "பாடகர் மனோவின் மகன்கள் தாக்கப்பட்டதாக, அவரது அம்மா செய்தியாளர்களிடம் சொல்கிறார்.. ஆனால், மனோ மகன்களால்தான் இளைஞர்கள் தாக்கப்பட்டதாக போலீஸ் சொல்கிறது.. இதில் எது உண்மை" என்று கேட்டதற்கு பயில்வான் ரங்கநாதன் தந்த பதில்தான் இது:

television singer mano

"போலீஸ் சொல்றதுதான் உண்மை.. அதுதான் சட்டப்பூர்வமாக நிக்கும்.. கோர்ட்டிலும் போலீஸ் சொல்வதுதான் நிக்கும்..
எப்ஐஆர் பைல் பண்ணிட்டாங்க. இது சம்பந்தமா நான் வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிட்ட பேசினேன். அவரும் என்கிட்ட விஷயத்தை சொன்னார்.

9 தையல் : "ஆமா சார்.. ஃபுட்பால் விளையாட போன பசங்களை போட்டு மனோவின் மகன்கள் அடிச்சிருக்காங்க. தலையில் ரத்தம் கொட்டியது.. அடிபட்டவருக்கு 9 தையல் போட்டிருக்கிறோம். ஆனால், இதை ஒரு கொலை குற்றமா நினைச்சு 2 பேரும் பயந்துபோயிட்டாங்க.. இப்ப வந்தால்கூட அவங்களுக்கு பெயில் கிடைக்கும். ஆனால், அவங்களாகவே தலைமறைவாகி, இந்த விஷயத்தை பெரிசு பண்ணிட்டாங்க"ன்னு சொன்னார்.

அதனால்தான் தலைமறைவு தலைமறைவு என்று மீடியாக்களில் செய்தி வர துவங்கிவிட்டது. இவர்கள் மீது நியாயம் இருந்தால், இங்கேயே நின்னு பேசணும் இல்லை.. மொத்தம் 4 பேர் சேர்ந்து, விளையாடிட்டு வந்த பசங்களை தாக்கியிருங்காங்க.. எப்பவுமே இதே தான் இவங்களுக்கு வழக்கம் போல இருக்கு.. தண்ணி அடிச்சால் தலைகால் புரியறது இல்லை..

தாய் சப்போர்ட்: காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு தானே? எந்த தாய்தான், தன்னுடைய மகன் தப்பு செய்தான் என்று சொல்லுவாள்? தன்னுடைய மகன்கள் தாக்கப்பட்டது உண்மை என்றால், அதுக்கு வீடியோ இருக்கா? அல்லது தாக்கப்பட்ட தன்னுடைய மகன்களின் மெடிக்கல் ரிப்போர்ட்டை போலீஸில் தர வேண்டியதுதானே?

மனோவுக்கு தன்னுடைய பசங்களை பத்தி நல்லாவே தெரியும், நிறைய மன உளைச்சலில் இருக்காரு.. அப்பா நல்லா சம்பாத்தியம் செய்து வைத்தால், பசங்க இப்படி செலவு செய்றாங்க.. பிள்ளைகளை காப்பாற்ற வேண்டுமே என்பதற்காக அவங்கம்மா இப்படி சொல்றாங்க.. போலீஸ் விசாரிக்கும்போது, இந்தம்மா எங்கே போனாங்க? எங்க மேனேஜரை அடிச்சிட்டாங்கன்னு போலீஸ் கிட்ட ஏன் சொல்லல?

பாதிக்கப்பட்டவர்கள்: செய்தியாளர் பேட்டியைகூட, குறிப்பிட்ட நபர்களை கூப்பிட்டுதான் தந்திருக்காங்க.. விவரம் தெரிந்தவர்களை அழைக்கவில்லை.. பொதுவாக, இதுபோல சம்பவம் நடந்தால், பாதிக்கப்பட்டவர்களை கூப்பிடடு நஷ்ட ஈடு தருவாங்க. ஆனால், இந்த பசங்க எப்பவுமே இப்படித்தான் தகராறு செய்வாங்க போல.

திருச்சி ஓட்டலில் ஒருமுறை மனோ பையனை ஒரு பொண்ணோட பார்த்தேன்.. யாருப்பா இதுன்னு கேட்டேன்.. என் கேர்ள் பிரண்டு, கல்யாணம் பண்ண போறேன்னு சொன்னார்.. இதை மனோகிட்டயே நான் கேட்டேன். அதுக்கு அவர், "ஆமாண்ணா, லவ் பண்றேன்னு சொல்றான்.. கல்யாணம் பண்ணி வெச்சிடலாம்னு இருக்கேன்னு சொன்னார்.

4 பங்களா: அந்த காலத்துல கஷ்டப்பட்டு, சிரமப்பட்டு, இளையராஜா கிட்ட எடுபிடி செய்து உழைத்து மேலே வந்தவர்தான் மனோ.. இப்போ 4 பங்களா வாங்கி வைத்திருக்கிறார்.. ஷூட்டிங்கிற்கு விட்டிருக்கிறார்.. பணம் கொட்டுது. அதான் பசங்க இப்படி ஜாலியா செலவு பண்ணிட்டு இருக்காங்க" என்றார் பயில்வான் ரங்கநாதன்.

2 பேர் கைது: இதனிடையே நேற்றைய தினம், இந்த விவகாரத்தில் தொடர்புடைய தலைமறைவாக இருந்த போரூர் பகுதியை சேர்ந்த கிருபாகரன் (20) மற்றும் 16 வயது சிறுவனை வளசரவாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம், மேலும் தலைமறைவாக உள்ள 6 நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்கண்ட இளைஞர்கள், தங்கள் வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக ஜமீலா புகார் கூறியிருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில்தான், தற்போது 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.,.. அதாவது, "மனோவின் மகன்கள் எங்களை தாக்கினர்" என புகார் கொடுத்த இளைஞர்கள் மீது, மனோ குடும்பத்தினர் திருட்டு புகார் கொடுத்துள்ளனர். இந்த திருட்டு புகாரில் அந்த இளைஞர்கள் நேற்று கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+