அன்னைக்கு மட்டும் எஸ்.பி.பி லேட்டா வரலன்னா..இது நடந்திருக்காது..உருக்கமாக மனம் திறந்த மனோ
சென்னை: பாடகர் மனோ ஆரம்ப காலகட்டத்தில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் பாடகர் எஸ்.பி.பியால் அவருடைய வாழ்க்கை மாறியது எப்படி என்பது குறித்து பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
முப்பது ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மனோ ஒரு நாள் பாடல் பாடுவதற்கு எஸ்பிபி வராததால் அவருக்கு பதிலாக இவர் பாடி பிறகு எஸ்.பி.பியின் அசிஸ்டன்ட் ஆக மாறி இருக்கிறாராம்.
அந்த சுவாரசியமான கதையைப் பற்றி சமீபத்தில் உருக்கமாக பேட்டி ஒன்றில் மனோ பேசி இருக்கிறார்.

பாடகர் மனோ தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பழமொழி பாடல்களில் பாடிக்கொண்டிருக்கிறார். அப்படியே இவருடைய பாடல்களை கண்மூடி கேட்டால் தத்ரூபமாக பாடகர் எஸ்.பி.பி பாடியது போன்றே இருக்கும். அதை பலரும் பீல் பண்ணி இருப்பார்கள்.
ஆனால் அதே எஸ்பிபி எதிர்பாராமல் செய்த செயலால் மனோ தன்னுடைய திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பாடகர் மனோ பாடிய பல பாடல்கள் ஹிட் அடித்தது அனைவருக்கும் தெரிந்ததுதான். இப்ப வரைக்கும் சின்னத்தம்பி திரைப்படத்தில் அவர் பாடி இடம்பிடித்த "தூளியிலே" பலருடைய ஃபேவரிட் ஆக இருந்து வருகிறது.
அது மட்டுமல்லாமல் எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படத்தில் இடம்பெற்ற செண்பகமே எனும் பாடல் மதுரை மரிக்கொழுந்து வாசம் எனும் பாடல் அதுபோல நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேலைக்காரன் திரைப்படத்தில் வா வா கண்ணா வா என்ற பாடல், அதோடு காதலன் திரைப்படத்தில் முக்காலா முக்காப்புலா என பல பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
அந்த அளவிற்கு இவர் அதிகமான பாடல்கள் பாடி ஹிட் அடித்து இருந்தாலும் இவருடைய ஆரம்ப காலம் அதிகமான கஷ்டம் நிறைந்ததாக தான் இருந்திருக்கிறது. ஆரம்பத்தில் சென்னைக்கு சினிமாவில் நடிப்பதற்காக தான் வாய்ப்பு தேடி மனோ வந்திருக்கிறார். அப்போது ஒரு ஹோட்டலில் 30 ரூபாய் சம்பளத்தில் பாட்டு பாடிட்டு இருந்திருக்கிறார்.
அதோடு நடிப்பிற்கும் வாய்ப்பு தேடிக் கொண்டே இருந்திருக்கிறார். அந்த நேரத்தில் ஒரு தெலுங்கு படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக மனோவிற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் பாடுவது போன்று இருந்து இருக்கிறது. அப்போ மனோவின் குரலுக்கு பாடுவதற்காக எஸ்.பி.பியை தான் புக் பண்ணி இருக்கிறார்கள்.

ஆனால் எஸ்பிபி அன்று வராமல் இருந்திருக்கிறார். அந்த படத்திற்காக இசையமைப்பாளராக எம்.எஸ்.வி தான் இருந்தாராம். அவரிடம் மனோ, சார் எனக்கு கொஞ்சம் பாட தெரியும் என்று சொல்லவும் அவர் பாடலை சொல்லிக் கொடுத்து பாடுங்க பார்ப்போம் என்று கேட்டிருக்கிறார். அப்போ அவரே வியந்து பார்க்கிற மாதிரி மனோ பாடி முடித்திருக்கிறார்.
அதை பார்த்த எஸ்பிபி பிறகு மனோவை அவரது உதவியாளராக சேர்த்திருக்கிறார். தற்போது எஸ்பிபி மறைந்த நிலையிலும் அதை நினைவு கூர்ந்து பாடகர் மனோ உருக்கமாக பேசியிருக்கிறார். அன்னைக்கு மட்டும் எஸ்பிபி லேட்டா வரலன்னா எனக்கு ஒரு பாடகராக வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கும்னு கூறியிருக்கிறார்.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications