அறிவுக் கெட்ட முட்டாள் பீசுங்க! அத போடுறது என் இஷ்டம்! சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி கொந்தளிப்பு
சென்னை: அறிவுக் கெட்ட முட்டாள் பீசுகள், அந்த உடையை போடுறது என் இஷ்டம் என நெட்டிசன்களுக்கு சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி பதிலடிக் கொடுத்துள்ளார்.
சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ்- ராஜலட்சுமியை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவர்கள் இருவருமே நாட்டுப்புற பாடல்கள் மீது பற்றுக் கொண்டவர்கள். இவர்களை ஒன்றிணைத்ததே இந்த நாட்டுப்புறப் பாடல்கள்தான்.

அழியும் விளிம்பில் இருக்கும் கலைகளுக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கும் விதமாக ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக போராடி வருகிறார்கள். அந்த வகையில் ராஜலட்சுமியும் செந்தில் கணேஷும் சூப்பர் சிங்கரில் கலந்து கொண்டனர். அங்கு அவர்கள் சினிமா பாடல்களை பாடாமல் நாட்டுப்புற பாடல்களை பாடினர்.
அந்த ஒட்டுமொத்த சீசனிலும் நாட்டுப்புற பாடல்களையே பாடி மக்களின் மனங்களை வென்றனர். விஜய் டிவியில் சூப்பர் சிங்கரில் வெற்றியாளரானார்கள். இதைத் தொடர்ந்து இவர்கள் வெளிநாடுகளில் கச்சேரி நடத்தும் அளவுக்கு பிரபலமாகிவிட்டார்கள். சினிமாவில் பாடவும் இருவருக்கும் தனித்தனியே வாய்ப்பு கிடைத்தது. இருவரது பாடல்களும் ஹிட்டடித்தன.
பாடகி அவதாரம் எடுத்த சிங்கர் ராஜலட்சுமி தற்போது கதாநாயகியாகவும் ஒரு படத்தில் ஒப்பந்தமாகினார். ஜேஆர்ஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் என். ஜீவானந்தம் தயாரிப்பில் உருவான லைசென்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ராதாரவி, என்.ஜீவானந்தம், விஜய் பாரத், பழ கருப்பையா, அபி நட்சத்திரா,வையாபுரி, நமோ நாராயணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ராஜலட்சுமியும் செந்திலும் இணைந்து வெளிநாடுகளுக்கும் செல்கிறார்கள். அங்கு இசைக் கச்சேரி நடத்தி வருகிறார்கள். இவர்கள் யூடியூப் சேனலையும் வைத்துள்ளனர். இவர்கள் அவ்வப்போது வீடியோக்களை வெளியிடுவார்கள். அந்த வகையில் வெளிநாடுகளுக்கு செல்லும் வீடியோக்களை வெளியிடுவார்கள். அந்த வகையில் அண்மையில் அமெரிக்காவில் பனிப்பொழிவு வீடியோ வெளியிட்டிருந்தனர்.
அத்துடன் அமெரிக்காவில் வசிக்கும் ஒரு இளைஞருடன் ராஜலட்சுமி ஆங்கிலத்தில் உரையாடும் வீடியோவையும் அவர் போட்டுள்ளார். எப்போதும் சேலையில் இருக்கும் ராஜலட்சுமி அந்த வீடியோவில் ஜீன்ஸ் பேன்ட் சர்ட்டில் இருந்தார். இதனால் நெட்டிசன்கள் மோசமான கமென்ட்டுகளை போட்டிருந்தனர்.
பணம் வந்துவிட்டதால் தலை கால் புரியாமல் ஆடுகிறார்கள். இந்த டிரெஸ்லாம் தேவையா, ஓவர் அல்டாப்பா இருக்கே என்றதோடு ஆபாசமான கருத்துகளையும் பதிவிட்டதாக தெரிகிறது. இதனால் ராஜலட்சுமிக்கு கடும் கோபம் ஏற்பட்டது. அதற்கு அவர் கூறியிருப்பதாவது ஆங்கிலம் மீது எனக்கு ஆசை இருந்தது. அதை கற்றுக் கொள்ள விரும்பினேன்.
அதனால் நான் கொஞ்சம் கொஞ்சமாக கற்று வருகிறேன். ஆங்கிலத்தை நமக்குள்ளேயே பேசாமல் பொது இடங்களில் பேசினால் தவறுகள் தெரியவரும் என்பதால் நான் அந்த வீடியோவில் பேசினேன். அதற்கு மோசமாக கமென்ட் செய்துக்கிட்டு இருக்காங்க, அடிப்படை அறிவு இல்லாதவங்கத்தான் இப்படி பேசுவாங்க.
என்னோட உடை குறித்தும் பேசி இருந்தாங்க, எது எனக்கு சரியா இருக்கோ அதை நான் போடுறேன். அதுல என்ன இருக்கு? எனக்குன்னு ஒரு சுய ஒழுக்கம் இருக்கு, அதை நான் கடைப்பிடிப்பேன், அந்த கமென்ட்டுகளை பார்த்துவிட்டு நான் அதே உடையில் நிறைய வீடியோக்களை போட்டேன் என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications