Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பல வருட உழைப்பை குழிதோண்டி புதைக்காதீர்கள் நான் அப்படி சொல்லவே இல்ல! உணர்ச்சிபூர்வமாக பேசிய சத்யன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில வாரங்களாக சமூக வலைத்தளங்களில், பழைய இசை நிகழ்ச்சியின் வீடியோ ஒன்று பெரும் புயலைக் கிளப்பி வருகிறது. 26 வருடங்களுக்கு முன்பு பாடகர் சத்யன் மகாலிங்கம் பாடிய, ரோஜா ரோஜா பாடல் தற்போது ட்ரெண்டிங் ஆகி, அவரை ஒரே இரவில் மீண்டும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. இந்த திடீர் புகழ் குறித்து அவர் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ள நிலையில், தன்னைப்பற்றிப் பரவும் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு அவர் பதிலடி கொடுத்திருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

Sathyan Mahalingam Roja Roja zee tamil

யார் இந்த சத்யன் மகாலிங்கம்

சின்ன வயதிலிருந்தே இசை மீது பெரும் ஆர்வம் கொண்ட சத்யன் மகாலிங்கம், தனது 15 வயதிலேயே இசைக்குழுவில் சேர்ந்து பாடி வருகிறார். இதுவரை 2,500-க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் பாடியுள்ள அவர், தனது குரலால் லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்றுள்ளார்.

வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படத்தில் இடம்பெற்ற கலக்கப்போவது யாரு என்ற பாடலின் மூலம் பின்னணி பாடகராகத் திரையுலகில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, சரோஜா படத்தில் தோஸ்த், பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் பாஸு பாஸு, கழுகு படத்தில் ஆம்பளைக்கும் பொம்பளைக்கும், மாற்றான் படத்தில் தீய தீயே உட்பட, 200-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இவ்வளவு திறமையிருந்தும், அவருக்குத் தொடர்ந்து சினிமாவில் பெரிய வாய்ப்புகள் அமையவில்லை. இருப்பினும், தனது திறமையை வளர்த்துக்கொள்வதில் அவர் சோர்வடையவில்லை.

26 வருடங்களுக்குப் பிறகு அங்கீகாரம்

26 வருடங்களுக்கு முன்பு சத்யன் மகாலிங்கம் இசை நிகழ்ச்சியில் பாடிய ரோஜா ரோஜா பாடல், சமூக வலைத்தளங்களில் திடீரென வைரலானது. இதைப் பார்த்த பலரும், அவரது குரலால் ஈர்க்கப்பட்டு, அவரைப் பற்றித் தேட ஆரம்பித்தனர்.

இந்த அங்கீகாரம் குறித்துப் பேசிய சத்யன், "26 வருடங்களுக்குப் பிறகு எனக்கு இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைத்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. என்னுடைய சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை. பாதம் தொட்ட நன்றிகள்" என்று உணர்வுபூர்வமாகப் பேசியது, ரசிகர்களைக் கவர்ந்தது.

நெகட்டிவ் விமர்சனங்களுக்குப் பதிலடி

திடீர் புகழ் கிடைத்ததால், சத்யன் பல்வேறு ஊடகங்களுக்குப் பேட்டி அளித்து, தனது சினிமா பயணத்தில் தனக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதை எமோஷனலாகப் பகிர்ந்துகொண்டார். இதைப் பார்த்து, தற்போது இருக்கும் இசையமைப்பாளர்கள் அவருக்கு மீண்டும் வாய்ப்புகள் தர வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால், இதற்கிடையில், அவரைப் பற்றிச் சில நெகட்டிவ் விமர்சனங்களும், வதந்திகளும் சமூக வலைத்தளங்களில் பரவ ஆரம்பித்தன. இதற்குப் பதிலளித்த சத்யன் மகாலிங்கம், "என் மீது அக்கறையுள்ள ரசிகர்களுக்கு நன்றி. உள்ளதை உள்ளபடி சில ஊடகங்கள் வெளியிடுகிறது. ஆனால், சில மீடியாக்கள் அவர்களுடைய சுயநலத்திற்காகத் தவறான தகவல்களையும், செய்திகளையும் பரப்புகிறார்கள். நான் சொல்லாததை எல்லாம் சொன்னதாக வதந்திகள் பரவுகின்றன. இது இத்தனை ஆண்டு காலம் உழைத்து முன்னேறிய ஒருவனைக் குழி தோண்டிப் புதைப்பது மாதிரி இருக்கிறது. தயவுசெய்து இதைச் செய்யாதீர்கள். நல்ல விஷயங்களுக்குக் காலம் எடுக்கும். ஆனால், கெட்டவை உடனே பரவும். ஆகவே அடிப்படை அறத்துடன் நடந்து கொள்ளுங்கள்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இசையின் மீதான தீராத காதலும், பல ஆண்டு உழைப்பும், சத்யன் மகாலிங்கத்தை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. ஆனால், இந்த புகழ் அவருக்கு ஒரு புதிய போராட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+