Exclusive: சரிகமப எமோஷனல் டிராமாவா? அங்கு நடப்பது இதுதாங்க! வெளிப்படையாக பேசிய பாடகர் ஸ்ரீநிவாஸ்
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியில் டிஆர்பிக்காக எமோஷனல் டிராமா போடுவதாக சில விமர்சனங்கள் வந்தது. இது குறித்து நாம் அந்த நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் பாடகர் ஸ்ரீனிவாஸிடம் தொடர்பு கொண்டு கேட்டோம். அதற்கு அவர் அந்த நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது? தாங்கள் எப்படி ரியாக்சன் செய்கிறோம்? என்பது பற்றி வெளிப்படையாக விளக்கம் கொடுத்திருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
சரிகமப நிகழ்ச்சி இப்போது சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் இப்போது சினிமாவில் பின்னணி பாடகர்களாக மாறி இருக்கிறார்கள். அடிமட்டத்தில் இருக்கும் போட்டியாளர்களின் திறமையும் வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டும் நிகழ்ச்சியாக சரிகமப நிகழ்ச்சி இருந்து வருகிறது. சாமானியரும் சாதனையாளராக மாற்றுவதற்காக சரிகமப எடுத்து இருக்கும் முயற்சியை பலரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

விமர்சனங்கள்
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் மிகவும் எளிமையான சூழ்நிலையில் இருப்பதாகவும், அதே போல சிலருடைய கதைகளை கேட்கும் போது அங்கிருக்கும் நடுவர்கள் கண்கலங்கி அழுது இருக்கிறார்கள். இதுவெல்லாம் டிராமா, மக்களை ஏமாற்றி டிஆர்பி பெறுவதற்காக இதுபோன்று காட்சிகள் வைத்திருக்கிறார்கள் என்ற விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதுகுறித்து நாம் சரிகமப சீனியர் சீசன் 6 நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் பாடகர் ஸ்ரீனிவாஸிடம் பேசி இருந்தோம்.
எமோஷனல் டிராமா
அதற்கு ஸ்ரீனிவாஸ் பல சுவாரஸ்யமான சம்பவங்களை பேசியிருந்தார். அதாவது "சரிகமப நிகழ்ச்சியில் எமோஷனல் டிராமா என்பது எந்த இடத்திலும் தெரியவில்லை. எல்லாமே உண்மையாக நடக்கிறது. சில இடங்களில் எமோஷனல் வெளிப்படுகிறது என்றால் அது அந்த நிகழ்ச்சியில் சில சம்பவங்கள் நடைபெறுகிறது. சரிகமப நிகழ்ச்சியில் எமோஷனல் டிராமா நடக்காது. தன்னிச்சையாக ஒரு எமோஷனல் வரும் போது ஹியூமன் ரியாக்ஷன் தான் அது.
பாடகர் ஸ்ரீனிவாஸ் விளக்கம்
ஒரு ஹியூமன் ஸ்டோரி வரும்போது அனைவருக்குள் இருக்கும் ஹியூமன் ரியாக்ஷன் வெளியே வரும். இது டிராமா கிடையாது, நிஜம். இந்த ஸ்டேஜ்ல நீங்க வந்து நின்றால் தெரியும். இந்த சூட்டிங்கை நீங்க நேர்ல பார்த்தால் இது டிராமா கிடையாது என்பது உங்களுக்கு தெரியும். நீங்க வீட்ல உட்கார்ந்து கொண்டு வேறொரு மூடுல இந்த நிகழ்ச்சியை பார்க்கும்போது உங்களுக்கு தவறாக கூட தெரியலாம். ஏன்னா இப்போதைய காலகட்டத்தில் யாரையும் நம்ப முடியல. ஆனா நம்புங்க. மனுஷங்களை நம்பனும். எல்லாரையும் நம்பனும். நம்பி அந்தநிகழ்ச்சியை பார்த்தால் உங்களுக்கு அங்கு நடக்கும் எதார்த்தம் புரியும். அதை உணரவில்லை என்றால் அது உங்களுக்கு தான் லாஸ் என்று சொல்லுவேன்" என்று பாடகர் ஸ்ரீனிவாஸ் கூறி இருக்கிறார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications