வெள்ளி தட்டில் "கோலம்".. ஊற்றி தரும் நடிகர்களின் மனைவிகள்.. பொடிக்கு 30 நொடி போதும்: பாடகி சுசித்ரா
சென்னை: சினிமாவில் உள்ள அனைவரையுமே நாம் குற்றஞ்சாட்டி விட முடியுமா? என்றால், அனைவருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.. எனக்கும் கொக்கைன் பயன்படுத்துவதற்கு வாய்ப்புகள் வந்தது, ஆனால் நான் வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். கலப்பட கொக்கைன் ஒரு கிராம் ரூ.12,000க்கும், ஒரிஜினல் கொக்கைன் ரூ.65,000 வரைக்கும் விற்பனையாகிறது என்ற பகீர் பேட்டி ஒன்றை தந்துள்ளார் பாடகி சுசித்ரா.
கொகைன் போன்ற போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. ஸ்ரீகாந்தை புழல் சிறையில் வரும் ஜூலை 7-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைத்துள்ளார்கள். அதேபோல மேலும் சில பிரபலங்கள் போதைப்பயன்படுத்திய வழக்கில் சிக்கக்கூடும் என்று சொல்கிறார்கள்.. அதுகுறித்த விசாரணையை போலீசார் நடத்தி வருகிறார்கள்.

நடிகர் ஸ்ரீகாந்த் கைது
ஸ்ரீகாந்த் கைதான சம்பவம் திரையுலகம் உட்பட பொதுமக்களையும் சேர்த்தே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.. இதுகுறித்து விஜய் ஆண்டணி உள்ளிட்ட பலரும் கருத்து கூறி வருகிறார்கள். அந்தவகையில், சேனல் ஒன்று பிரபல பாடகி சுசித்ராவும் பேட்டி தந்துள்ளார்.. அதுகுறித்த சுருக்கம்தான்:
"ஸ்ரீகாந்த்துக்கு திடீரென முளைத்துள்ள ரசிகர்கள், அவருக்கு இத்தனை காலம் சான்ஸ் இல்லாதபோது எங்கே போயிருந்தார்கள்? கவுரவ வேடம், ஐட்டம் பாட்டுக்காக இங்கே நடிக்க வரும் நடிகர்கள் போதைப்பொருள் கலாச்சாரத்தை தமிழ் திரைத்துறைக்குள் புகுத்திவிட்டனர்.. அவர்கள் இங்கே வெறும் நடிப்பதற்காக மட்டும் வருவதில்லை.
ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்
இங்கு வந்து எதை வேண்டுமானாலும் செய்துவிட்டு, மும்பைக்கு போய்விடுகிறார்கள்.. ஆனால், இதை பற்றியெல்லாம் யாருமே பேசுவதில்லை.. நான் மீடியாவில் பணிபுரிந்தபோதே இப்படியெல்லாம் செய்திகள் வந்தாலும், அவைகளை பப்ளிஷ் செய்ய முடியாத நிலைமை இருக்கும்.
தற்போது சோஷியல் மீடியா வந்துவிட்டது. செய்திகள் ஒவ்வொன்றும் வேகமாக பரவுகின்றன.. சினிமாவிலுள்ள எல்லாரையுமே இப்படி குற்றஞ்சாட்டி விட முடியுமா என்று கேட்டால் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று தான் சொல்ல முடியும். எனக்கும் கொக்கைன் பயன்படுத்துவதற்கு வாய்ப்புகள் வந்தது, ஆனால் மறுத்துவிட்டேன். கலப்பட கொக்கைன் விற்கப்படுகின்றன.. ஒரு கிராம் ரூ.12,000,ஒரிஜினல் கொக்கைன் ரூ.65,000 என்றெல்லாம் விற்பனையாகிறது.
சென்னையின் ரிசார்ட்கள்
சென்னையில் ரிசார்ட்கள், பப்கள், பார்களில் இதெல்லாம் சர்வ சாதாரணமாக நடக்கிறது. பார்களிலுள்ள பாத்ரூம்களிலும் போதை பொருட்களை பயன்படுத்துகிறார்கள்.. 1 கிராம் கொக்கைனை எடுத்து 30 நொடி போதும். 'கங்குவா' படத்தில் கூட ஒரு சீனில் இப்படி சூர்யா செய்திருப்பார்..
முன்பெல்லாம், குடிப்பழக்கத்துக்கு ஆளான தங்களது கணவர்களை மீட்க நடிகைகள் மேற்கொண்ட முயற்சிகளை பார்த்திருப்போம் ஆனால் இப்போது நடிகர்களின் மனைவிகளே பார்ட்டிகளில் ஊற்றிக் கொடுக்கிறார்கள்.. வெள்ளி தட்டுகளில் போதைப்பொருளை வைத்து, கோலம் வரைந்து கொண்டு வருவது போன்ற செயல்களிலும் மறைமுகமாக ஈடுபடுகிறார்கள்.
பக்க விளைவுகள்
கொகைனை பயன்படுத்துவதால் சில பக்க விளைவுகள் உண்டு.. அதை கூகுளில் நீங்களே சென்று தேடிப்பார்க்கலாம்.. அந்த பக்க விளைவுகளுடன், எந்த நடிகர்களின் தோற்றம் ஒத்துப்போகிறதோ அவர்கள் எல்லாருமே கொக்கைனை பயன்படுத்துகிறார்கள் என்று அர்த்தம்.. இதுவரை தான் என்னால் சொல்ல முடியும். இதுக்கு மேல் அவர்களின் பெயர்களை எல்லாம் சொல்ல முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
சுசித்ரா தந்துள்ள இந்த பேட்டிதான் இணையத்தில் மீண்டும் பரபரப்பை கிளப்பி விட்டுள்ளது.. ஆனால், சுசித்ரா கருத்தை ஏற்க முடியாது என்று ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறியிருக்கிறார்.
700 கோடி கலெக்ஷன்
"ஒருகாலத்தில் பாலிவுட் என்பதை அண்ணாந்து பார்த்தோம். இன்று கோலிவுட்டில்தான், ஆகச்சிறந்த டெக்னிஷியன்கள், ஆகச்சிறந்த படங்கள் வர ஆரம்பித்து விட்டன. 500 கோடி ரூபாயில் பெரிய வியாபாரம் செய்கிறோம், 700 கோடி கலெக்ஷனை எடுக்க ஆரம்பித்துவிட்டோம்.
எனவே உலக அளவில் தமிழ் படங்களுக்கு பெரிய மார்க்கெட் உள்ளது. அப்படியிருக்கும்போது, பாலிவுட்டில் இருந்துதான், இந்த போதையை அறிமுகப்படுத்தி விட்டார்கள் என்று சொல்லிவிட முடியாது. ஒரு சிலர் அங்கிருந்து வந்து நடிப்பதால், இதை தெரியப்படுத்தியிருக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications