நான் ரொம்ப எதிர்பார்த்தேன்.. ஆனால் இமான் ஏமாற்றிவிட்டார்.. பாடகி விஜயலட்சுமி பகீர் குற்றச்சாட்டு
சென்னை: பாடகி வைக்கம் விஜய லட்சுமி பேட்டி ஒன்றில் பேசும் போது இசை அமைப்பாளர் இமான் குறித்து குற்றச்சாட்டு வைத்திருக்கிறார். அதோடு தன்னுடைய வாழ்க்கையில் சில ஆசைகள் இருக்கிறது, அது இப்போ வரைக்கும் நிறைவேறவில்லை என்று உருக்கமாகவும் பேசி இருக்கிறார்.
ஒரு சில பாடல்கள் கேட்கும் போது நம்முடைய மனதிற்குள் இருக்கும் சந்தோஷங்கள், கவலைகள், பாசம் உட்பட எல்லா உணர்வுகளும் நம்மை மீறி வெளிப்படும் அதுபோல பாடல்களை பாடும் பாடகர்கள் மக்கள் மனதில் தனக்கென்று ஒரு இடம் பிடித்திருக்கிறார்கள். அந்த வரிசையில் வைக்கம் விஜயலட்சுமியும் ஒருவர்.

இவர் தமிழில் வெளியான குக்கூ என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற "கோடை மழை போல" என்ற பாடல் மூலமாகத்தான் சினிமாவில் அறிமுகமானார். அதற்குப் பிறகு கேட்பவர்களை ஆட வைக்கும் "சொப்பன சுந்தரி நான்தானே", "காக்...கா முட்டை... காக்கா முட்டை கண்ணால" என்ற பாடல்களை இவர் பாடி பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானது.
அதுபோல "மண்ணிலே ஈரம் உண்டு" என்ற பாடல் பலருடைய பெருந்தன்மையை பறைசாற்றும் இடமாக பாடியிருந்தார். அதற்கு பிறகு பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடி இருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் பல பாடல்கள் பாடி இருக்கிறார்.

வைக்கம் விஜயலட்சுமி பார்வை திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் பலருக்கும் முன்மாதிரியாக தன்னுடைய குரல் மூலம் தனித்து நிற்கிறார். இவருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் ஆனது ஆனால் மாப்பிள்ளை வீட்டினர் போட்ட கண்டிஷன் தனக்கு செட் ஆகவில்லை என்று திருமணத்திற்கு மறுத்துவிட்டார்.
பிறகு குடும்பத்தினரின் வற்புறுத்தலினால் 2018 ஆம் ஆண்டு மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண பங்க்ஷனில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தனர். ஆனாலும் இவர்களுடைய திருமண வாழ்க்கை சில வருடங்களில் முடிவுக்கு வந்துவிட்டது.

அப்போது தன்னுடைய கணவர் குறித்து பல குற்றச்சாட்டுகளை விஜயலட்சுமி கூறியிருந்தார் அது பெரிய அளவில் பேசப்பட்டது. அதற்கு பிறகு தொடர்ந்து சினிமாக்களில் பாட்டு பாடி கொண்டிருக்கிறார். அதுபோல விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கெஸ்ட் ஆகவும் கலந்து கொண்டு வருகிறார்.

இதன் நிலையில் பேட்டி ஒன்றில் அவர் பேசும் போது தன்னுடைய வாழ்க்கையில் நிறைவேறாத ஆசை குறித்து பேசி இருக்கிறார். அதில் தனக்கு இளையராஜா, ஏ ஆர் ரகுமான், வித்யாசாகர் கூடவும் பாட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் அதற்கான வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.
அதோடு தன்னை பார்ப்பதற்காக ஜெயச்சந்திரன், மலையாள டைரக்டர் கமல் என பலர் வந்ததாகவும் தெரிவித்திருந்தார். அதுபோல இமான் சார் தன்னை பார்க்க வருகிறேன் என்று சொன்னார் ஆனால் அவர் இப்போ வரைக்கும் என்னை பார்க்க வரவே இல்லை என்று ஏக்கமாகவும் பேசி இருக்கிறார்.

-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications