சிறகடிக்க ஆசை சீரியலுக்கு என்னாச்சு? லாஜிக்கே இல்லாத கதை! ஆனால் சூப்பராக கவுண்டர் கொடுத்த அண்ணாமலை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நாளைக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மீனாவை காதலிக்கும் நபர் முத்து வீட்டிற்கு வந்திருக்கிறார். அவரிடம் அண்ணாமலை என்ன சொன்னார் என்று பார்க்கலாம்.
விஜய் டிவியில் டிஆர்பியில் சிறகடிக்க ஆசை சீரியல் தான் முதலிடத்தில் இருக்கிறது. ஆனால் இப்போது இந்த கதை லாஜிக் அல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. அதாவது மீனாவை ஒரு நபர் ஒரு தலையாக காதலித்துக் கொண்டிருக்கிறார். அவர் முத்துவிடமே சென்று நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன் அவரிடம் எப்படி பேச வேண்டும் என்று அட்வைஸ் கேட்க, அதற்கு முத்துவும் அந்த நபருக்கு ஒரு வாரமாக அட்வைஸ் கொடுத்து கொண்டிருக்கிறார்.

அந்த பெண்ணிடம் நேராக சென்று பெயர் என்ன என்று கேட்க சொல்லியிருந்தார். இப்போது அந்த பெண்ணுடைய வீட்டிற்கு நேரில் சென்று அந்த பெண்ணின் அப்பாவிடம் உங்க பொண்ணை நான் கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று சொல்லிவிடு, உண்மையா காதலிக்கும் நபர் வீட்டில் வந்து பெண் கேட்டால் அந்த அப்பாவும் சரி என்று சொல்லிவிடுவார் என்றெல்லாம் ஐடியா கொடுத்திருக்கிறார்.
ஆனால் மீனா கழுத்தில் மஞ்சள் தாலி போட்டு இருக்கிறார், நெற்றிவகிட்டில் குங்குமம் வைத்திருக்கிறார். ஆனால் அவரைப் பார்த்ததும் ஒரு நபர் காதலிக்கிறாராம்... காதலில் விழுந்த நபருக்கு மீனாவிற்கு கல்யாணம் முடிந்தது பார்க்கும்போது தெரியாதது போல கதையை கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே இந்த சீரியலில் ரோகிணி எவ்வளவு தப்பு செய்தாலும் ஒரு முறை கூட வீட்டில் மாட்டாமல் தப்பித்துக் கொண்டே இருக்கிறார் என்று ரசிகர்களுக்கு அதிருப்தி இருக்கிறது. இந்த நிலையில் இப்போது கதை லாஜிக் இல்லாமல் போய்க் கொண்டிருப்பது பார்க்கும் ரசிகர்களை சலிப்பு அடைய வைத்திருக்கிறது.
சிறகடிக்க ஆசை சீரியலில் எப்போதும் பிரச்சினைகளில் மட்டுமே இல்லாமல் சில காமெடி காட்சிகளும் எதார்த்தமாக இருப்பதை ரசிகர்கள் விரும்புகிறார்கள். ஆனால் இப்படி லாஜிக் இல்லாத காமெடி பார்ப்பதற்கு ரசிக்கும் தன்மையில் இல்லை என்பது தான் உண்மை.

ஆனாலும் தற்போது வெளியான ப்ரோமோவில் மீனாவை பாலோ செய்யும் நபர் வீட்டுக்கு வந்து அண்ணாமலையிடம் உங்க பொண்ணை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. நான் ஐடியில் வேலை பார்க்கிறேன் எனக்கு கல்யாணம் செய்து தாங்க என்று சொல்ல, எந்த பொண்ணை என்று அண்ணாமலை அதிர்ச்சி அடைகிறார்.
அப்போது முத்துவும் வீட்டிற்கு வந்துவிடுகிறார். அப்போது முத்துவிடம் அந்த நபர், அண்ணே.. இது உங்க வீடா என்று கேட்க, அந்த நேரத்தில் மீனா அங்கிருந்து வந்ததும் இந்த நபரை பார்த்து டேய் நீ இங்கேயே வந்துட்டியா? என்று கோபப்படுகிறார். அதற்கு முத்து உனக்கு இவனை ஏற்கனவே தெரியுமா என்று கேட்கிறார்.

அப்போது அந்த நபர் நான் சொன்ன பொண்ணு இவங்க தான் இவங்களதான் நான் காதலிக்கிறேன் என்று சொல்ல ஸ்ருதி மற்றும் ரவி அண்ணாமலை எல்லோரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அதோடு எனக்கு காதலிக்க ஐடியா தந்தது எங்க அண்ணன் தான் என்று சொன்னதும், அண்ணாமலை உங்கள் நொண்ணன் யார் என்ற கேட்க, முத்து அண்ணன் தான் என்று அந்த நபர் சொல்கிறார்.
அதோடு உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி தருவீங்களா? என்று மீண்டும் அண்ணாமலையிடம் அந்த நபர் கேட்க அதற்கு முத்து இதில் முடிவெடுக்க வேண்டியது அவன்தான் அவன்கிட்டயே பேசிக்க என்று சொல்ல, மீனா முத்துவை முறைத்து பார்க்கிறார். இதனால் முத்துவிற்கு அடி விழுந்தாலும் விழுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.












Click it and Unblock the Notifications