சிறகடிக்க ஆசையில் நாளை: விஜயாவிடம் பண விஷயத்தில் மீண்டும் சிக்கும் ரோகிணி.. எதிர்பாராத திருப்பம்
சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்கஆசை சீரியலில் நாளைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரோகிணியின் ஏடிஎம்கார்டை தன்னிடம் கொடுக்குமாறு விஜயா மிரட்டுகிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே ரோகிணி பற்றிய ஒரு உண்மை குடும்பத்திற்கு தெரிய வந்திருக்கிறது. ரோகிணி பணக்கார வீட்டு மகள் இல்லை என்பது தெரிந்து வந்ததும் விஜயா அவருடைய இன்னொரு முகத்தை ரோகிணியிடம் காட்டிக் கொண்டிருக்கிறார். ரோகிணியை மனோஜின் ஷோரூமுக்கு போகக்கூடாது என்று ரூல்ஸ் போட்டு இருக்கிறார். அதோடு ரோகிணிக்கு தேவையானதை இனி அவரே தான் சமைத்து சாப்பிட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

பழி போடும் ரோகிணி
இவ்வளவு பட்டும் திருந்தாத ரோகிணி இத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம் முத்து மற்றும் மீனா தான் இவர்கள் இருவரும் தான் எங்க பிரச்சனையில் மீண்டும் மீண்டும் தலையிடறாங்க. இவங்களால தான் எங்களுடைய வாழ்க்கை நிம்மதி இல்லாமல் இருக்கிறது என்று புலம்பி கொண்டிருக்கிறார். ரோகிணி உடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் மனோஜும் இந்த விஷயத்தில் மொத்த பழியையும் மீனா மற்றும் முத்து மீது போட்டு இருக்கிறார்.
மீண்டும் நடிக்கும் ரோகிணி
இதுவரைக்கும் மீனா மற்றும் முத்துவை திட்டிக் கொண்டிருந்த விஜயா முத்து மற்றும் மீனா செய்த செயலை பாராட்டி இருக்கிறார். இது ஒரு பக்கம் இருந்தாலும் ரோகிணி மீண்டும் விஜயாவிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று விஜயாவிற்கு ஐஸ் வைப்பது போன்று பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் இதற்கெல்லாம் இனி நான் ஏமாறமாட்டேன் என்று தற்போது வெளியான ப்ரோமோவில் விஜயா காட்டியிருக்கிறார்.

விஜயா சொன்ன வார்த்தை
அதாவது ஸ்ருதி தன்னுடைய பிரண்டு கல்யாணத்தில் ரோகிணிக்கு மேக்கப் ஆர்டர் வாங்கி கொடுத்திருக்கிறார். அதற்கு போகலாமா வேண்டாமா என்று ரோகிணி விஜயாவிடம் பெர்மிஷன் கேட்க, அதைக் கேட்டு அண்ணாமலை விஜயாவை திட்டி இருந்தார். பிறகு என்னுடைய மகன் ஷோரூம்க்கு மட்டும் ரோகிணி போகக்கூடாது வேற எங்க வேணாலும் போகலாம் என்று சொல்லி இருந்தார்.

ரோகிணி நிலைமை
இந்த நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் கல்யாண வீட்டு ஆர்டரை முடித்துவிட்டு ரோகிணி வீட்டிற்கு வருகிறார். அப்போது விஜயா அவரிடம் எங்க போயிட்டு வர என்று கேட்க, ஒரு மேக்கப் ஆர்டர் இருந்தது அதை முடிச்சுட்டு வரேன் என்று ரோகிணி சொல்கிறார். எவ்வளவு பணம் கொடுத்தாங்க என்று கேட்க 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தாங்க என்று ரோகிணி சொல்ல, அந்த பணத்தை என்கிட்ட கொடு என்று விஜயா மிரட்டுகிறார்.
மிரட்டும் விஜயா
அதற்கு ரோகிணி அந்த பணத்தை அக்கவுண்டில் தான் கொடுத்து இருக்காங்க என்று சொல்ல அதற்கு விஜயா இனி உன்னுடைய ஏடிஎம் கார்டு என்கிட்ட தான் இருக்கும். அதை கொடுத்துட்டு உள்ள போ என்று மிரட்டுகிறார். இதற்கு ரோகிணி என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதுதான் நாளைய எபிசோடில் தெரியவரும். ஏற்கனவே கடந்த வாரத்தில் சில சொதப்பல்கள் இருந்தது இனியாவது அதற்கு விடை கிடைக்குமா? அல்லது அந்த காட்சிகளை அப்படியே விட்டுவட்டு அடுத்தது போய்விடுவார்களா என்பது தெரியவில்லை.
விடை தெரியாத காட்சி
அதாவது ரோகிணியின் அம்மா தன்னுடைய பிறந்தநாளுக்கு வீட்டிற்கு கூப்பிட்டு இருந்தார். ஆனால் ரோகிணி அதற்கு போனதை காட்டவே இல்லை. அது போல ரோகிணி பற்றிய உண்மை குடும்பத்திற்கு தெரிய வந்திருக்கிறது. ஆனால் இது பற்றி மீனா ரோகிணியின் பிரண்டு வித்யாவிடம் இந்த விஷயத்தை பற்றி கேள்வி கேட்காமல் இருக்கிறார். இதுவும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. இனி நாளைக்கு எபிசோட்டில் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications