சிறகடிக்க ஆசை: பாசத்தால் பிரிந்த முத்து - விஜயாவின் கண்டிப்பால் அரங்கேறிய அதிர்ச்சி! மனோஜின் சூழ்ச்சி
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் மக்களின் பேராதரவைப் பெற்றுவரும் சிறகடிக்க ஆசை சீரியலில், முத்துவின் கடந்த கால வாழ்க்கை பற்றிய ரகசியங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து, ரசிகர்களை நெகிழ்ச்சியிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தி வருகின்றன. இந்த வார எபிசோடுகளில் முத்துவும் விஜயாவும் பிரிந்து வாழ நேர்ந்ததற்கான காரணம் தெளிவாக விளக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய எபிசோடில் (586) முத்துவின் வாழ்க்கையில் நடந்த துயரமான சம்பவங்கள் உணர்வுபூர்வமாகக் காட்டப்பட்டுள்ளன.

விஜயாவின் பயமும், பாசத்தின் பிரிவும்
சாமியார் சொன்ன பேச்சைக் கேட்டு, தனது மகன் முத்துவைப் பிரிய முடிவு செய்த விஜயா, அவனை ரகசியமாகச் சந்திக்க விரும்புகிறார். ஆனால், சாமியார், "அவனைப் பார்க்கக் கூடாது" என்று உறுதியாகச் சொல்லிவிடுகிறார். ஒருகட்டத்தில், "சரி, அவன் உங்களைப் பார்க்காமல் இருந்தா மட்டும் போதுமா?" என்று விஜயா கேட்க, சாமியார் அதற்கும் சம்மதிக்கிறார்.
அடுத்ததாக முத்துவைக் காண ஆவலுடன் சென்ற விஜயா, அவன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருப்பதைக் காண்கிறார். அப்போது ஒரு பையன், மற்றொரு பையனை அடித்ததால், பாதிக்கப்பட்ட பையனுக்காக, முத்து கோபப்பட்டு அடிக்கும் காட்சியைக் கண்டு விஜயா அதிர்ச்சியடைகிறார்.
உடனே தனது மாமியாருக்கு போன் செய்து, "முத்துவை ரகசியமாகப் பார்த்தேன், ஆனால் அவன் ஒரு பையனை அடித்துவிட்டான்" என்று வருத்தத்துடன் சொல்கிறார். அதற்கு முத்துவின் பாட்டி, "அவன் தவறு செய்யவில்லை. நடந்ததை விசாரித்தேன், அவன் சரியானதைத்தான் செய்திருக்கிறான்" என்று உறுதியாகக் கூறுகிறார். மேலும், "நான் தப்பா வளர்க்கிறேன்னு சொல்றியா?" என்று பாட்டி கேட்கும்போது, விஜயாவுக்குத் தனது தாயின் கோபத்தைக் கண்டு பயம் ஏற்படுகிறது.
முத்துவின் கண்ணீர்
ஒருபக்கம், அண்ணாமலை மற்றும் விஜயாவின் பாசத்தில் மனோஜ் மகிழ்ச்சியாக வளர, முத்து கிராமத்தில் பாட்டியின் வீட்டில் ஜாலியாக விளையாடுகிறான். ஆனால், மாலை நேரங்களில் மற்ற குழந்தைகளை அவர்களின் அம்மாக்கள் வந்து அழைத்துச் செல்லும்போது, முத்து மட்டும் தனியாக நிற்பது மனதைக் கலங்கச் செய்கிறது. ஊஞ்சலில் படுத்து, அம்மா இல்லாத குறையை எண்ணி முத்து கண்ணீர விடுகிறான்.
ஆறு வருடங்களுக்குப் பிறகு
இப்படியே ஆறு வருடங்கள் கழிந்து, விஜயாவும் அண்ணாமலையும் மனோஜுடன் முத்துவை அழைத்துச் செல்ல பாட்டி வீட்டிற்கு வருகின்றனர். வெளியே விளையாடிக்கொண்டிருந்த முத்து, அண்ணாமலையைக் கண்டதும் சந்தோஷமடைகிறான். ஆனால், விஜயாவைப் பார்த்ததும் அமைதியாக இருக்கிறான். விஜயா அவனை வீட்டிற்கு அழைத்துச் செல்ல முயல, முத்து, "நான் வரமாட்டேன். பாட்டி கிட்டதான் இருப்பேன்" என்று பிடிவாதமாகச் சொல்கிறான்.
"இந்த ஆறு வருடத்தில் ஒருமுறை கூட நீங்க என்னை பார்க்க வரவில்லை. உங்க முகமே எனக்கு மறந்துவிட்டது. ஏன் பார்க்க வரவில்லை?" என்று முத்து கேட்டபோது, விஜயா மௌனமாக இருந்தார். அண்ணாமலை, "அங்க வந்தா உன்னை மனோஜ் கூட அதே பள்ளியில் சேர்த்துவிடுகிறேன்" என்று சொல்ல, "இங்கு நான் நன்றாகத்தான் படிக்கிறேன்" என்று முத்து மறுத்துவிடுகிறான். ஒரு கட்டத்தில், விஜயா அவனை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்கிறார்.
விஜயாவின் கண்டிப்பு
முத்து விஜயாவின் வீட்டிற்குச் சென்றாலும், அவனுக்கு அங்கு இருக்கப் பிடிக்கவில்லை. விஜயா சாப்பாடு வைக்கும்போது, மனோஜ், "எனக்கு ஆம்லெட் வேண்டும்" என்று கேட்க, விஜயா முத்துக்கு பரிமாறாமல் அங்கிருந்து செல்கிறார். இதனால் கோபப்பட்ட முத்து, உணவைத் தூக்கி எறிகிறான். இதைப் பார்த்த விஜயா, "இனிமே இப்படிப் பண்ணுவியா? பாட்டி வீட்டில் இருந்து ரவுடியாகிவிட்டாயா?" என்று கோபத்துடன் முத்துவுக்குச் சூடு வைக்கிறார்.
மன உளைச்சலுக்கு ஆளான முத்து, பாட்டிக்கு போன் செய்து, "எனக்கு இங்க இருக்கப் பிடிக்கவில்லை. அம்மா எனக்குச் சூடு வைத்துவிட்டார்கள்" என்று சொல்கிறான். இந்தச் சம்பவம், பாசத்தால் ஒரு தாயின் கண்டிப்பு, ஒரு குழந்தையின் மனதில் எவ்வளவு ஆழமான காயத்தை ஏற்படுத்தும் என்பதைக் காட்டுகிறது. இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது












Click it and Unblock the Notifications