சிறகடிக்க ஆசை: மனோஜ்க்கு மீனா கொடுத்த செம அடி! ரோகிணிக்கு வசமாக ஆப்பு வைத்த முத்து! இன்றைய எபிசோடு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் செப்டம்பர் 23ஆம் தேதிக்கான எபிசோடில் தன்னுடைய வாழ்க்கைக்காக புதிய முடிவு எடுத்திருக்கிறார். அதுபோல ரோகிணியின் நடவடிக்கைகளை பார்த்து மீனாவிற்கு சந்தேகம் வருகிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

முத்துவின் புது கனவு
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், முத்து கார் செட்டுல அவரோட நண்பர்களோட பேசிட்டு இருக்காரு. அங்க செல்வம் கிட்ட, "எங்கேயும் சவாரிக்கு போகலையா?"ன்னு கேட்கறாரு. அதுக்கு செல்வம், "இப்பதான் போயிட்டு வந்தேன்"னு சொல்ல, முத்து "நம்ம இந்த சவாரி மட்டும் இல்ல, அடுத்த வாரத்துல இருந்து ஸ்கூல் சவாரியும் எடுக்கப் போறோம்"னு ஒரு புது முடிவைச் சொல்றாரு. அதைக் கேட்டதும், அங்க இருந்தவங்க எல்லாரும் ஆச்சரியமா பார்க்குறாங்க.
முன்னாடி எல்லாம் இந்த மாதிரி கமிட்மெண்ட் எல்லாம் வச்சுக்க மாட்டீங்க, என்ன புதுசா இருக்குன்னு செல்வம் கேட்க, முத்து வெட்கப்பட்டுக்கிட்டே, "ஆமா, மேல ரூம் கட்டாம இருக்க முடியாது. அதுக்காக கொஞ்சம் கஷ்டப்பட்டு உழைச்சுதான் ஆகணும்"னு சொல்றாரு.
அதைக்கேட்டதும், "என்ன திடீர்னு ரூம் எல்லாம்?"னு செல்வம் கேட்கறாரு. முத்து சிரிச்சுக்கிட்டே, "நீங்கதான் அன்னைக்கு ஃபியூச்சர் பத்தி பேசினீங்களா? அதுதான் யோசிச்சு பார்த்தோம்"னு சொல்ல, அவங்க எல்லாரும் "சரி, சரி"னு கிண்டல் பண்றாங்க. உடனே இன்னொரு நண்பர், "வட்டிக்கு வாங்கித் தரட்டுமா?"ன்னு கேட்க, முத்து அதெல்லாம் வேண்டாம், நாங்க உழைச்சு கட்டிக்கிறோம்னு சொல்லி முடிவெடுக்கறாரு.
கொஞ்ச நேரத்துல, அங்க சத்யா வர்றாரு. அவர் முத்துகிட்ட ஒரு கவர் கொடுத்து, "எங்க ஓனர் வீட்ல துபாய் போயிருந்தாங்க, அங்க பேரீச்சம்பழம் வாங்கிட்டு வந்ததுனால எல்லாருக்கும் கொடுத்தாங்க. கிரிஷ் நம்ம வீட்ல இருந்தப்போ பேரீச்சம்பழம் சாப்பிட்டது இல்லன்னு சொன்னான், அதனாலதான் உனக்கு எடுத்துட்டு வந்தேன். நீங்க அவன்கிட்ட போய் கொடுக்கறீங்களா மாமா?"ன்னு கேட்கறாரு. அதைக்கேட்டதும், முத்துவும், "நாங்களும் அவனைப் பார்த்து ரொம்ப நாளாச்சு. நானும் மீனாவும் போயிட்டு வர்றோம்"னு சொல்றாரு.
ரோகிணியின் தந்திரம்
மறுபக்கம், மீனா வண்டில வந்துட்டு இருக்க, ஒருத்தர் பூக்களை குப்பைத் தொட்டியில போடுறதை பார்க்கறாரு. "ஏங்க, நல்லா இருக்குற பூவெல்லாம் குப்பைத் தொட்டியில போடுறீங்க?"னு மீனா கேட்க, அதுக்கு அந்த நபர், "முன்னாடியெல்லாம் பணக்கார வீட்டு விசேஷத்துலதான் இந்த பூங்கொத்து கொடுப்பாங்க. ஆனா இப்போ நார்மலா இருக்குறவங்க வீட்டுக்கும் குடுக்குறாங்க. இதனால என்ன பிரயோஜனம்? ஏதாவது காசு கொடுத்தா அது எங்களுக்கு நல்லா இருக்கும்"னு சொல்றாரு. அதைக் கேட்டதும், மீனாவும் இதுமாதிரி வேஸ்ட் ஆகாம ஏதாவது பூவை வெச்சு பண்ணலாம்னு யோசிக்க ஆரம்பிக்கிறாரு.
அதே நேரம் பார்த்து, முத்து போன் பண்ணி, கிரிஷைப் பார்க்கப் போகும் விஷயத்தைச் சொல்லி, மகேஸ்வரி வீட்டுக்கு வரச் சொல்றாரு. அங்க ஏற்கனவே ரோகிணி, கிருஷ் பார்க்க ஸ்நாக்ஸ் வாங்கிக்கொண்டு வந்து கொடுத்து, எல்லாரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். இப்போது முத்துவை மீனாவும் அங்கு வருகின்றனர். மகேஸ்வரி ரோகிணியிடம் கண்ணைக் காட்ட, ரோகிணி உள்ளே சென்று ஒளிந்து கொள்கிறார். முத்துவும், மீனாவும் உள்ளே வர, கிரிஷ் ஓடி வந்து முத்துவை கட்டிப் பிடித்துக் கொள்கிறான். முத்து அவனிடம் பேரீச்சம்பழத்தைக் கொடுக்க, அவன் விரும்பி சாப்பிடுகிறான். கொஞ்ச நேரம் முத்துவும், கிரிஷும் விளையாடிக் கொண்டிருக்க, ரோகிணி உள்ளே இருந்து அம்மாவிடம் "போக சொல்லு" என்று சைகை காட்டிக்கொண்டே இருக்கிறாள்.
உடனே பாட்டி, மகேஸ்வரி இடம், "நீ கோவிலுக்குப் போகணும்னு சொன்னேன்ல?" என்று கேட்க, "நான் எப்ப சொன்னேன்?"னு மகேஸ்வரி கேட்க, பிறகு சமாளிச்சு "ஆமாம்"னு சொல்றாங்க. இதை கவனித்த மீனா, இவர்கள் பேசுவதை புரிந்துகொண்டு முத்துவிடம், "நம்ம போகலாம்"னு சொல்றாரு. "கொஞ்ச நேரம் விளையாடலாமே" என்று முத்து சொல்ல, "தேவையில்ல, உங்களுக்கு வேலை இருக்குல, போகலாம்"னு கோபமா அழைத்து வெளியில வர்றாங்க.
வெளியில வந்ததும், மீனா முத்துவிடம், "ஏன் அவங்கள கூப்பிட்டு இருக்கீங்க? அவங்க வந்தவங்கள வாங்கனு சொல்லல, ஒரு காபி குடிக்கிறீங்களானு கேட்கல, நம்மளை இங்க இருந்து அனுப்பவே பாக்கறாங்க. அதுகூட உங்களுக்கு புரியலையா?"னு கேட்கிறாரு. அதுக்கு முத்து, "நேரா சொல்லியிருந்தா புரியும். மறைமுகமா சொன்னா எனக்கு எப்படி புரியும்?"னு அப்பாவித்தனமா கேட்கிறாரு.
ரோகிணியின் மனபோராட்டம்
முத்துவும், மீனாவும் கிளம்பிப் போனதும், ரோகிணியும் வெளியே வர்றாரு. அப்போ ரோகிணியோட அம்மா, அவங்க கிட்ட "முத்துவும், மீனாவும் கிரிஷ் மேல ரொம்ப பாசமா இருக்காங்க. உண்மை தெரிஞ்சாக்கூட அவங்க உன்னை பிரச்சினையிலிருந்து காப்பாத்துவாங்க"னு சொல்ல, ரோகிணி, "கொஞ்சம் வாயை மூடுறியா? நான் என் வாழ்க்கையைக் காப்பாத்திக்கிறதுக்காக போராடிட்டு இருக்கேன். நீ அவங்களைப் பத்தி பெருமையா பேசிக்கிட்டு இருக்க. நான் சொல்றதை மட்டும் செய், அதுவே போதும்"னு எரிச்சலோடு சொல்றாரு.
மீனாவின் புது முயற்சி
மறுபக்கம், மீனா பழத்தால் பொக்கே ஒன்று ரெடி பண்ணி முத்துவுக்குக் காட்ட, "சூப்பரா இருக்கு"னு சொல்லி, குடும்பத்தினரிடம் காட்டுவதற்காக அனைவரையும் கூப்பிட, மீனா, "வேணாங்க, அவங்ககிட்ட எல்லாம் எதுக்கு?"னு கேட்கிறாரு. அதுக்கு முத்து, "பிடிச்சா சொல்லட்டும், குறை சொல்றவங்க குறை சொல்லிட்டு போகட்டும். அதெல்லாம் நாம் கவலைப்படக் கூடாது"னு சொல்லி அனைவரையும் கூப்பிட்டு காட்டுகிறாரு.
அண்ணாமலை, "நல்ல ஐடியா அம்மா" என்று பாராட்ட, மனோஜ், "இதெல்லாம் ஏற்கனவே வந்திருச்சு, பழைய ஐடியா" என்று கிண்டல் பண்றாரு. ரோகிணியும், "நானும் பெரிய கிளைன்ட் வீட்ல எல்லாம் பார்த்திருக்கிறேன்"னு சொல்றாங்க. உடனே ரவி, "டிவி வந்திருச்சு அதுக்குன்னு விக்காம இருக்கியா? மீதி பேர் செய்றது எல்லாமே தப்புன்னு சொல்லுவியா?"னு சொல்லிவிட்டு, "சூப்பரா செய்து இருக்கீங்க அண்ணி. நீங்க எனக்கு ஒரு மாடல் பண்ணி கொடுங்க, நான் அதை வெச்சு வர்றவங்க கிட்ட சொல்லி ஆர்டர் கேட்டுப் பார்க்கிறேன்"னு சொல்றாரு. மீனாவும் "சரி"னு சொன்னதும், ரவி போட்டோ எடுத்துக்கிறாரு. இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications