சிறகடிக்க ஆசை: 5 லட்சத்தால் சீதா வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனை! மீனா செய்த செயல்.. முத்துவின் பெருந்தன்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் 'சிறகடிக்க ஆசை' சீரியலில், சீதா, மீனா இருவருக்கும் இடையேயான சண்டை ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, சீதாவுக்கு நேர்ந்த பண இழப்பு சம்பவம் மொத்தக் குடும்பத்தையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சீதாவின் ஈகோ, அவரை ஒரு பெரிய ஆபத்தில் சிக்க வைத்ததுதான் இன்றைய எபிசோடின் உச்சகட்டத் திருப்பம்!

Siragadikka aasai serial vijay tv

முத்துவின் சமாதான முயற்சி

சந்திரா அம்மா மயக்கம் போட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், அவரை யார் கவனித்துக் கொள்வது என்பதில் மீனாவுக்கும் சீதாவுக்கும் இடையே போட்டி வந்தது. மீனா, தானே அம்மாவைக் கவனிப்பதாகச் சொல்ல, மறுபுறம் சீதாவும் அம்மாவைத் தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று கவனித்துக் கொள்வதாகக் கூறுகிறார்.

இந்தச் சண்டையை முடிவுக்குக் கொண்டு வர நினைத்த முத்து, "அம்மா இப்போ சீதா வீட்டுக்கே செல்லட்டும்" என்று முடிவெடுக்கிறார். "அங்குச் சென்றாலாவது உன் மீதுள்ள கோபம் சீதாவுக்குக் குறையும் என்பதால்தான் அப்படிச் சொன்னேன்" என மீனாவிடம் சொல்லிச் சமாதானப்படுத்துகிறார். வேறு வழியின்றி மீனா சம்மதித்து, தன் அம்மா சந்திராவைச் சீதாவின் வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றார்.

பிடிவாதம் பிடித்ததால் நேர்ந்த விபரீதம்

ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் சீதாவிடம், மேனேஜர் 5 லட்சம் பணத்தைக் கொடுத்து பேங்கில் டெபாசிட் செய்துவிட்டு வரச் சொல்கிறார். துணையாக ஒரு செக்யூரிட்டியையும் அனுப்புகிறார். பணத்துடன் சீதா ஆட்டோ ஏறச் செல்லும் போது, செக்யூரிட்டிக்கு வீட்டில் இருந்து அவசரப் போன் வருகிறது. மகனை நாய் கடித்துவிட்டதாகச் செய்தி வர, செக்யூரிட்டி பதறிப் போகிறார். அவர் "வேலையை முடித்துவிட்டு மகனைப் பார்க்கச் செல்கிறேன்" என்று சொன்னாலும், அதற்குச் செவி சாய்க்காத சீதா, "நீங்க போய் உங்க பையனைப் பாத்துக்கோங்க, நான் பத்திரமா பணத்தை டெபாசிட் செய்துவிடுகிறேன்" என்று கூறி, துணிச்சலாகத் தனியாக ஆட்டோவில் செல்கிறார்.

பணம் பறிப்பு

சீதா செல்லும் வழியில் ஆட்டோவை மறித்த இரண்டு ரவுடிகள், டிரைவரை அடித்துவிட்டு, சீதாவிடம் இருந்து 5 லட்சம் பணத்தைத் திருடிச் செல்கிறார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் சீதா நடுரோட்டில் நின்று அழுதுகொண்டிருக்க, அந்த வழியாக மீனா வருகின்றார். சீதாவிடம் "என்ன ஆச்சு?" என்று கேட்க, முதலில் தனது ஈகோவால் பேசாமல் இருக்கும் சீதா, பின்னர் வேறு வழியின்றி நடந்ததை மீனாவிடம் கண்ணீருடன் கூறுகிறார். ஆட்டோ டிரைவரும் இதை உறுதிப்படுத்துகிறார்.

ஆறுதல்

பணம் திருடு போனதால் அதிர்ச்சியடைந்திருந்தாலும், மீனா சீதாவைக் கண்டு மனதுருகி, உடனடியாக அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்கிறார். ஆஸ்பத்திரிக்குச் சென்றதும் சீதா மேனேஜரிடம் நடந்தவற்றைச் சொல்கிறார். ஆனால் மேனேஜர் எதையும் நம்பும் மனநிலையில் இல்லை.

சீதா மீது பழி

5 லட்சத்தைத் தொலைச்சிட்டு வந்து நிக்குற எனத் திட்டுவதோடு, அவரை வேலையை விட்டு நீக்குவதாகவும் சொல்கிறார். அதுமட்டுமின்றி, "நீயே ஆள் வச்சு அந்தப் பணத்தைத் திருடிட்டியா?" எனக் கேட்டு சீதாவை அசிங்கப்படுத்துகிறார். இதைக் கேட்டுச் சீதா கதறி அழுகிறார். அப்போது மீனா அந்த மேனேஜரைத் திட்ட, "நீயும் கூட்டுக் களவாணியா?" எனக் கேட்கிறார் அந்த மேனேஜர். "இவ்வளவு நாள் பணத்தை எடுத்துச் சென்றிருக்கிறோம். இன்று இவளிடம் கொடுத்து அனுப்பியபோது தான் இப்படி ஆகி இருக்கிறது. என்ன செய்வியோ தெரியாது, எனக்கு அந்த 5 லட்சம் பணம் வரணும்" என மேனேஜர் கறாராகச் சொல்லிவிடுகிறார்.

அதைத்தொடர்ந்து வீட்டிற்கு வந்த மீனா சோகமாக அமர்ந்திருக்கும் போது விஜயா வேலை மேல் வேலை சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் மீனா எனக்கு கால் வலிக்கிறது என்று சொன்னாலும் விஜயா கேட்கவில்லை. அப்போது அங்கு வரும் முத்து விஜயாவை திட்டிவிட்டு வேலைகளை எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்.

பணத்தையும் வேலையையும் இழந்த சீதாவை, அவரது மீனா இனி எப்படிச் சமாளிக்கப் போகின்றார்? இந்தச் சம்பவம் அக்கா தங்கை சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+