உப்புமா படத்தை தந்த ராஜகுமாரன் இதை பேசலாமா? சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் பழனியப்பன் எமோஷனல் வீடியோ
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் செல்வம் கேரக்டரில் நடித்து வருபவர் பழனியப்பன்.. இவர் ஏற்கனவே விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெங்கும் ஃபேமஸ் ஆனவர்.. இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வேதனையான வீடியோவை பகிர்ந்துள்ளார்.. அதில் தேவயானி கணவர் ராஜகுமாரனுக்கு தன்னுடைய கண்டனத்தையும் வலுவாக பதிவு செய்துள்ளார்.
சமீபகாலமாகவே ராஜகுமாரன் தன்னுடைய பேட்டிகளில் சர்ச்சையான கருத்துக்களை கூறி வருகிறார்.. ஒரு பேட்டியில் டைரக்டர் மகேந்திரனை விமர்சித்திருந்தார்.

அதில், "ராமநாராயணன் 100 படங்களை எடுத்திருக்கிறார். அவரைவிட குறைவாக ஒன்றிரண்டு படங்களை மகேந்திரன் எடுத்திருக்கிறார்.. அவரது படங்களை நான் பார்த்ததில்லை,
சமீபத்தில்தான் உதிரிப்பூக்கள் பார்த்தேன்.. என்ன கதை அது? மனைவியின் தங்கையை அடைய துடிப்பதை கதையாக எடுத்து வைத்திருக்கிறார். இதைப்போய் புகழ்ந்துட்டு இருக்கீங்க, உலகத்தரம் வாய்ந்த படமென்று சொல்கிறீர்களே" என்று ராஜகுமாரன் விமர்சித்திருந்தார்.
தேவயானி ராஜகுமாரன்
அதேபோல மற்றொரு பேட்டியில், "கமல் சாரை இந்தியாவின் மிகப்பெரிய நடிகர் என்கிறார்கள். ஆனால் நான் அப்படி சொல்ல மாட்டேன். மொத்தமே 4 படங்களில் மட்டுமே அவருக்கு நன்றாக அமைந்தது.. அவ்வை சண்முகியில் கமல்தான் தெரிவாரே தவிர, அவ்வை சண்முகி தெரியவில்லை.
அமிதாப் பச்சனைவிட கமல் சின்ன நடிகர்.. அதாவது அமிதாப் பச்சன் ஆறேகால் அடி உயரம், கமல் நாலே கால் அடி உயரம் மட்டும்தானே? அப்படியானால் கமல் சின்ன நடிகர்தானே? எனக்கு நடிகர்களிலேயே சரத்குமாரை மட்டும்தான் பிடிக்கும்.
வெற்றிமாறன் படத்தை இதுவரை நான் முழுதாக பார்த்ததே இல்லை. பெரிய டைரக்டர் பெரிய பெரிய ஹிட்கள் கொடுத்திருக்கிறார். ஆனால் அவரின் படங்களை 2 ரீல்களுக்கு மேல் பார்க்க முடியாது. ஒரே இரிட்டேஷனாக இருக்கும். படத்தில் இருக்கும் கேரக்டர்கள் ஒரே கொடூரமாக இருப்பார்கள்... இதுவரை அவரின் படங்களை முழுதாக பார்க்கவே இல்லை.
பா ரஞ்சித் படங்கள்
அதேபோல், பா.ரஞ்சித் இயக்கத்தில் அட்டக்கத்தி தவிர வேறு எதுவும் பார்த்ததில்லை.. பார்க்கிற அளவுக்கு, ஒரு மாதிரி என்ன சிந்தனை என்று தெரியவில்லை. அவர்களின் சிந்தனை கருப்பாக, கர்ண கொடூரமாக இருக்கிறது, அவற்றை பார்க்கும்போதே பயமாக இருக்கிறது" என்றெல்லாம் தெரிவித்திருந்தார்.
கடந்த 10 நாட்களாகவே ராஜகுமாரன் மேற்கூறிய கருத்துக்களுக்கு., தாறுமாறான விமர்சனங்கள் சோஷியல் மீடியாவில் எழுந்து வருகிறது. பல பிரபலங்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து, ராஜகுமாரனை சரமாரியாக திட்டி வருகிறார்கள்..
அந்தவகையில், சிறகடிக்க ஆசை பழனியப்பன் தன்னுடைய கருத்தை, வீடியோ வெளியிட்டு, தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி உள்ளார்.
சரத்குமார் சார்
அந்த வீடியோவில் பழனியப்பன், "தேவயானி ராஜகுமாரன் சார் அவர்களின் கவனத்திற்கு, சமீப காலமாகவே ஏன் இப்படி பேசி வருகிறார் தெரியவில்லை..
கமல் சார், 4 படங்களை தவிர மற்ற படங்களில் வெறும் கமர்ஷியலாகத்தான் நடித்துள்ளார்.. கமல் ஒன்றும் பெரிய ஆள் கிடையாது என்று ராஜகுமாரன் சார் சொல்லி உள்ளார். இப்படி பல ஹீரோக்களை தரக்குறைவாகவே பேசியிருக்கிறார்.. இதை நான் ஆரம்பத்தில் கடந்து சென்றுவிட்டேன்.
ஆனால், வாரிசு படத்தில் சரத்குமார் சாரை தவிர வேறு யாரும் சரியாக நடிக்கவில்லை, விஜய் நடித்தது எல்லாம் ஒரு நடிப்பா? என்று ராஜகுமாரன் சார் மீண்டும் பேசியிருக்கிறார்..
உப்புமா படம்
தயவுசெய்து நடிகர்களை இப்படி இன்டர்வியூ என்ற பெயரில் தரக்குறைவாக பேசாதீர்கள்.. நீங்கள் ஒரு நல்ல சினிமா நடிகராக, அல்லது ஒரு சினிமா இயக்குனராக இருந்தால், மற்ற நடிகர் நடிகைகளை பேசலாம்.. ஆனால், திருமதி தமிழ் என்ற உப்புமா படத்தை தந்துவிட்டு, மற்றவர்களை அவதூறாக பேசலாமா? திருமதி தமிழ் படத்தை பார்த்தவர்கள் எனக்கு தெரிந்து யாருமே இல்லை.
நீங்கள் என்னவோ 4 நேஷனல் அவார்டு, 20 சில்வர் ஜூப்ளி படங்களை தந்தது போல எல்லாரையும் தரக்குறைவாக பேசி கொண்டு இருக்கிறார்.. தயவுசெய்து ஒரு நல்ல ட்ரீட்மென்ட்டுக்கு ராஜகுமாரன் செல்வது நல்லது என்று நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications