சிறகடிக்க ஆசையில் இனி இதுதான் நடக்க போகுதா? மனோஜை ரவுண்டு கட்டிய ஜீவா, வித்யா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் கேரக்டரில் நடிக்கும் ஸ்ரீதேவா வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக கருத்து பெற்று வருகிறது. அந்த புகைப்படத்தில் ஜீவா மற்றும் வித்யாவும் மனோஜை சுற்றி நிற்கின்றனர்.
விஜய் டிவியில் டிஆர்பியில் முதலிடத்தில் இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்று தெரிந்து கொள்வதற்காக ரசிகர்கள் ஆர்வத்தோடு இருக்கின்றனர். ஆனால் ஞாயிற்றுக்கிழமையான இன்று விஜய் டிவியில் அடுத்த வாரத்திற்கான எல்லா ப்ரோமோவும் வந்துவிட்டது. இன்னும் (மதியம் 2:40 வரைக்கும்) சிறகடிக்க ஆசை சீரியலின் ப்ரோமோ மட்டும் வரவில்லை.

இதனால் ஒவ்வொரு சீரியலின் ப்ரோமோவிற்கும் கீழே ரசிகர்கள் சிறகடிக்க ஆசை சீரியலின் ப்ரோமோ எங்கே இன்னும் வரவில்லையே என்று அட்மினிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த சீரியலில் அடுத்த வாரத்தில் பல அதிரடியான சம்பவங்கள் நடக்க இருக்கிறது என்று தெரிகிறது.
ஏற்கனவே ஜீவாவிடம் இருந்து மனோஜ் மற்றும் ரோகிணி 30 லட்சம் வாங்கிய விஷயம் முத்து மூலமாக வீட்டிற்கு தெரிய வந்திருக்கிறது. இந்த நிலையில் இப்போது மனோஜ் கேரக்டரில் நடிக்கும் மனோஜின் முன்னாள் காதலி ஜீவாவும் ரோகிணியின் தோழி வித்தியாவும் நிற்கிறார்கள். இந்த புகைப்படத்தை பார்த்ததும் ஜீவா இனி முத்து வீட்டிற்கு வரப் போகிறாரா? என்ற கேள்விகள் எழுகிறது.
ஏற்கனவே ஜீவா தான் ரோகிணியை பற்றிய உண்மைகளை தெரிந்து கொண்டு அவரை மிரட்டி முத்துவிடம் மாட்ட வைக்க வேண்டும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கும் நிலையில், பண விஷயம் மாட்டிய பிறகு ஜீவா காணாமல் போய்விடுவார் என்று நினைத்து நிலையில் இப்போது மீண்டும் இவர் மனோஜோடு இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கும் நிலையில் அப்போ இவருடைய காட்சிகள் இன்னமோ வரப்போகிறதா என்ற கேள்விகளும் வருகிறது.
அதே நேரத்தில் அடுத்த வாரத்திற்கு என்று நேற்று வெளியான ப்ரோமோவில் கோவிலில் முத்துவும் மீனாவும் ஒரு வயதான தம்பதிகளை பார்க்கின்றனர். அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக் கொள்கிறார்கள். அப்போது அவர்களை முத்து தான் வீடியோ எடுக்கிறார்.
பிறகு அவர்கள் நாங்கள் மலேசியாவில் இருந்து வந்தோம் என்று சொல்கிறார்கள். அதனால் மீனா இவர்களை நம்முடைய வீட்டிற்கு அழைத்து சென்று அவர்களுக்கு விருந்து வைத்து கவனிப்போம். பிறகு ரோகிணியின் அப்பா மலேசியாவில் ஜெயிலில் இருப்பது பற்றி விசாரிக்கலாம் என்று ஐடியா கொடுக்கிறார்.
இதனால் அடுத்த வாரத்தில் ரோகிணியின் அப்பா விஷயம் தெரியவருமா என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனாலும் கடந்த வாரத்தில் ரோகிணி பண விஷயத்தில் வீட்டில் மாட்டிய போது விஜயா ரோகினியை அடித்து மிரட்டி இருக்கிறார்.
அதோடு ஷோரூம் உரிமையை அண்ணாமலை பெயரில் எழுதி இருப்பதால் இந்த நிலையை மாற்ற வேண்டும் என்றால் ரோகிணியின் அப்பாவிடம் இருந்து 27 லட்சம் ரூபாய் பணத்தை வாங்க சொல்லி ரோகிணியிடம் சொல்லி இருக்கிறார். இதனால் ரோகிணி இனி பணத்திற்கு என்ன செய்யப் போகிறார் என்பதும் அடுத்த வாரத்தில் தெரியவரும்.
இதற்கிடையில் இப்போது ரோகிணிக்கு மேலும் பிரச்சனை கொடுக்கும் விதமாக இரண்டு நபர்கள் வந்திருக்கிறார்கள். இதனால் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications