சீரியல் நடிகையின் வீடியோ.. ஆன்லைன் ஆடிஷன் ஆபாசம்.. எதிர்முனை கயவன் சுளுக்கை எடுங்க: பிரபலம் கோரிக்கை
சென்னை: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் வீடியோவின் உண்மைத்தன்மை தெரியவில்லை.. அந்த நடிகை இதில் சம்பந்தப்படவில்லையென்றாலும்கூட, இந்த விவகாரத்தை காவல்துறை தானாக முன்வந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடியோவின் உண்மைத்தன்மை என்ன? வீடியோவில் எதிர்முனையிலிருந்து அந்த பெண்ணை ஏமாற்றிய கயவன் யார்? என்பதை சைபர் கிரைம் கண்டுபிடிக்க வேண்டும்.. இதுபோன்ற கயவர்களின் சுளுக்கு எடுக்கணும். அப்போதுதான் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தடுக்கப்படும் என்று மூத்த பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன், தமிழக காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Valaipechu Anthanan தன்னுடைய யூடியூப் சேனலில் பேசும்போது, "டிவி சீரியல்கள் பெரும்பாலும் நான்சென்ஸ்களாக உள்ளன.. மனித வன்மத்தை தூண்டக்கூடியதாக இருக்கிறது.. உறவுகளுக்குள் சிக்கலை தரக்கூடிய சீரியல்களாக இருக்கின்றன.. ஆனால், வீடுகளில் அனைத்து உறவுகளும் சேர்ந்துதான், அந்த சீரியல்களை பார்க்குறாங்க.,.. எனினும், சினிமாவைவிட சீரியல்கள் ஒன்றும் மோசம் கிடையாது.

சிறகடிக்க ஆசை என்ற தொடரை மட்டும் நான் சமீபகாலமாகவே பார்த்து வருகிறேன். அந்த சீரியலில் மனோஜ் கேரக்டரில் நடிப்பவர் என்னுடைய நெருங்கிய நண்பர் என்பதால், அதை பார்த்து வருகிறேன். சில சீரியல்கள் நம்மை உட்கார வைத்து பார்க்க வைக்கும். அப்படி திடீர் திருப்பங்கள் நிறைந்த சீரியல்தான் சிறகடிக்க ஆசை.
முக்கியத்துவம் பெருகும் கேரக்டர்
அந்த சீரியலின் ஹீரோயினின் தோழியாக நடிக்கிறார் அந்த துணை நடிகை.. சமீபகாலமாக அந்த சீரியலில் முக்கியத்துவம் அவருக்கு தரப்படுகிறது. அந்த நடிகை தொடர்புடைய போட்டோக்களை என்னுடைய நண்பர் எனக்கு அனுப்பி வைத்து, நீங்களெல்லாம் இதை பேசினால்தான், இதுபோன்ற அயோக்கியத்தனத்தை தடுக்க முடியும் என்று கண்ணீருடன் என்னிடம் கூறினார்.
வாய்ப்பு கொடுப்பதற்காக நேரில் வரச்சொல்லி ஆடிஷன் நடத்தப்படுவது சினிமா, சீரியலில் வழக்கமான ஒன்று.. முன்பெல்லாம் மிகவும் நேர்மையான முறையில் ஆடிஷன்கள் நடத்தப்பட்டன.. இப்போதெல்லாம் தவறான வேலைகளுக்கு உடந்தையாக ஆடிஷன்கள் அமைந்து வருகின்றன.. நேர்மையானவர்கள் ஆடிஷன் செய்தால், அவர்களுக்கு தேவையான , பொருத்தமாக உள்ள கேரக்டர்களை நடிக்க சொல்லி, அவர்களை தேர்ந்தெடுத்து கொள்வார்கள்.
ஆன்லைன் ஆடிஷன் அயோக்கியர்கள்
ஆனால், சில சமூக விரோதிகள், ஆடிஷன் என்ற பெயரில் அயோக்கியத்தனங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படியான அயோக்கியத்தனத்தில் துணை நடிகையும் சிக்கிவிட்டார் என்று என்னுடைய நண்பர் என்னிடம் வருத்தத்துடன் கூறினார்.
நடிகையின் போட்டோக்களை நான் பார்த்தேன். அதாவது வீடியோவிலிருந்து ஸ்கிரீன் ஷாட் எடுத்து எனக்கு அனுப்பியிருந்தார்கள். அது AI மூலம் உருவாக்கப்பட்டதா? அது அந்த நடிகை இல்லையா? என தெரியவில்லை.
ரத்தம் கக்கி சாவீங்க
ஆனால், அதிலுள்ள கமெண்ட்களை படிக்கும்போது, ரொம்ப மோசமாக இருக்கிறது.. வீடியோ பார்க்க தவியாய் தவிக்கிறார்கள்.. "யாராவது ஒருத்தர் லிங்க் அனுப்புங்க, இல்லாட்டி ரத்தம் கக்கி செத்துருவீங்க" என்றெல்லாம் கமெண்ட்டில் சாபம் விடுகிறார்கள். லிங்க் கிடைத்துவிட்டால், பிறந்ததற்கான பலனை அடைந்துவிடுவோம் என்றெல்லாம் என்பது போல கமெண்ட்கள் பதிவு செய்கிறார்கள்.
இந்த விஷயத்தில் அந்த பெண்ணின் மனநிலைமையை யோசித்து பாருங்கள். இதில் அந்த பெண் சம்பந்தப்பட்டிருக்கலாம், சம்பந்தப்படாமலும் இருக்கலாம்.. ஆனால், எதிர்முனையில் டைரக்டர் என்று சொல்லி கொண்டவன் போலி ஆசாமி போல..
நீங்கதான் என் படத்துக்கு ஹீரோயின் என்று சொல்லி, இதை, பண்ணு, அதை பண்ணு என்று சொல்லவும், அந்த பெண்ணும் எல்லாவற்றையுமே செய்துள்ளார்.. படிக்காத பெண்கூட இப்படியொரு காரியத்தை செய்ய மாட்டார். ஒரு படத்தில் நடிப்பதற்கு, இதெல்லாம் எதுக்கு கேட்கிறான் என்று தோன்ற வேண்டாமா?
படிக்காத பெண்கூட இதை செய்ய மாட்டாள்
ஆபாச வீடியோக்கள் எடுப்பவர்கள்தான் இதை சொல்வார்கள்.. கதாநாயகி கேரக்டர் என்று சொல்லிவிட்டு, இப்படி ஏன் செய்ய சொல்லணும்? படிக்காத பெண்களே உஷாராக இருக்கும்போது, படித்த பெண்ணே எப்படி இதற்கு உடன்பட்டார் என்பது ஆச்சரியமாக உள்ளது.
விகடன் நிறுவனம் தயாரிக்கும் சீரியல் இதுவாகும்.. தமிழர்களின் உணர்வுகளில் ஒன்றிப்போன நிறுவனம்.. விகடன் ஒருபோதும் ஆபாசத்தை விரும்பியதில்லை.. அவர்கள் எடுக்கும் சீரியல்களில் ஆபாசமே இருக்காது. இப்படிப்பட்ட நடிகை எப்படி நடிக்க வந்தார்? என்று யாராவது கேள்வி எழுப்பினால், பல எண்ணங்கள் தோன்றும்..
காவல்துறைக்கு வேண்டுகோள்
படக்குழுவில் எந்த முகத்துடன் நடிகை பேசுவார்? என்ற சிக்கலும் உள்ளது.. ஒருவேளை அதிக மனஉளைச்சலுக்கு ஆளாகி, அந்த பெண், ஏதாவது முடிவெடுப்பதற்குள் காவல்துறை இதற்கு உடனடியாக ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். காவல்துறை தானாக முன்வந்து, இந்த விஷயத்தை கையில் எடுக்க வேண்டும்.
நடிகையின் வீடியோவின் உண்மைத்தன்மை தெரியவில்லை.. அந்த நடிகை இதில் சம்பந்தப்படவில்லையென்றாலும்கூட, இந்த விவகாரத்தை காவல்துறை தானாக முன்வந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடியோவின் உண்மைத்தன்மை என்ன? வீடியோவில் எதிர்முனையிலிருந்து அந்த பெண்ணை ஏமாற்றிய கயவன் யார்? என்பதை சைபர் கிரைம் கண்டுபிடிக்க வேண்டும்.. இதுபோன்ற கயவர்களின் "சுளுக்கு " எடுக்கணும். அப்போதுதான் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தடுக்கப்படும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications