சிறகடிக்க ஆசை: ரோகிணி விஷயத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்தது.. கடைசியில் மாஸ் காட்டிய முத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஏப்ரல் 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரைக்கும் ஆன ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. இதில் ரோகிணியின் அப்பா ஜெயிலில் இருந்து வெளியே வரவேண்டும் என்று ரோகிணியை வைத்து விஜயா கோவிலில் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்.

இதுவரைக்கும் ரோகிணிக்கு மட்டும் எந்த கஷ்டமும் இயக்குனர் கொடுக்க மாட்டேன் என்கிறார். அவர் மட்டும் இன்னும் வீட்டில் மாட்டாமலே இருக்கிறார். அதனால் ரோகிணிக்கு இயக்குனர் சில சலுகைகளை செய்து கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் தொடர்ச்சியாக கமாண்ட் போட்டு வந்திருந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் விஜயாவிடம் மாட்டிக்கொண்டு ரோகிணி படாத பாடுபடுகிறார்.

Siragadikka aasai serial April 23th to 27th promo and fans reaction

அந்த வகையில் விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் கதை விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. அதனால் ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியல் நல்ல வரவேற்பு பெற்றுக் கொண்டிருக்கிறது. சண்டைக்காட்சிகள் ஒரு பக்கம் இருந்தாலும், காமெடி காட்சிகளும் இந்த சீரியலில் பஞ்சமில்லாமல் இருப்பதால்தான் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறுகிறது.

ஆனாலும் சமீபத்தில் இந்த சீரியலில் ரோகிணி மட்டும் தப்பு மேல தப்பு செய்தாலும் வீட்டில் இன்னும் மாட்டாமல் இருக்கிறார் என்பது ரசிகர்களின் வருத்தமாக இருந்தது. மனோஜ் சில இடங்களில் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் ஒரு சில நாட்களிலே வீட்டில் மாட்டி விடுகிறார். ஆனால் ரோகிணி ஏற்கனவே ஒரு கல்யாணம் நடந்து குழந்தை இருப்பதை மறைத்து இருக்கிறார். அதை தொடர்ந்து அவருடைய அப்பா வெளிநாட்டில் இருக்கிறார் என்றும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.

Siragadikka aasai serial April 23th to 27th promo and fans reaction

ஆனாலும் ரோகிணி வீட்டில் எப்போதுமே மாட்டவில்லையே என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் விஜயாவிடம் மாட்டி அல்லோல பட்டு கொண்டிருக்கிறார். ஒரு பக்கத்தில் ரோகிணி தன்னுடைய அப்பா மலேசியாவில் ஜெயிலில் மாட்டிக் கொண்டிருக்கிறார் என்று நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர் சொன்ன பொய்யே அவருக்கு வினையாக வந்திருக்கிறது.

ரோகிணியின் அப்பா ஜெயலில் இருந்து வெளியே வர வேண்டும் என்றால் கோவிலில் நேர்த்தி கடன் செய்ய வேண்டும் என்று ரோகிணியின் தலையில் தண்ணியை ஊற்றி கோவில் முழுக்க அங்கப்பிரவேசம் விஜயா செய்ய வைக்கிறார். அதோடு கையில் சூடம் ஏற்றி வழிபாடு செய்யவும் வைக்கிறார். அடுத்ததாக கோலம் போட வேண்டும் என்று சொல்ல ரோகிணி கோலம் போட தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்.

Siragadikka aasai serial April 23th to 27th promo and fans reaction

மறுபக்கத்தில் மனோஜிடமிருந்து 27 லட்சம் ரூபாயை ஏமாற்றிக் கொண்டு போன ஜீவாவை கண்டுபிடிக்க வேண்டும் என்று ரோகிணி மற்றும் மனோஜ் முயற்சி எடுத்து இருக்கும் நிலையில் ஜீவா முத்துவிடம் வசமாக சிக்கி இருக்கிறார். ஆனால் முத்துவிற்கு தன்னுடைய வண்டியில் சவாரியாக வந்து கொண்டிருக்கும் பெண்தான் ஜீவா என்பது தெரியாமல் இருக்கும் நிலையில் நாளைக்கு எபிசோடில் மனோஜ் இருக்கும் இடத்திற்கு முத்து கோவிலுக்கு கூட்டிட்டு வந்திருப்பதால் மனோஜை ஜீவா பார்க்கிறார்.

Siragadikka aasai serial April 23th to 27th promo and fans reaction

ஆனால் ஜீவாவை மனோஜ் பார்க்கிறாரா? இல்லையா? என்று நாளைக்கு தான் தெரிய வரும். ஆனாலும் ஒரு பக்கத்தில் ரசிகர்கள் ரோகிணி கஷ்டப்பட வேண்டும் என்று நினைத்திருந்த மாதிரியே இன்று வெளியான ப்ரோமோவில் நடந்திருக்கிறது. இந்த கலகலப்பான ப்ரோமோ இப்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று அதிகமான லைக்குகளை குவித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+