சிறகடிக்க ஆசை: முத்துவால் மாட்டும் ஜீவா.. போலீஸ் ஸ்டேஷனில் இப்படி ஆகிடுச்சே.. மனோஜ் சொன்ன வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரோகிணியின் பார்லருக்கு வந்த ஜீவா ரோகிணி மற்றும் மனோஜிடம் மாட்டி இருக்கிறார்.
அதே நேரத்தில் ஜீவாவை பிடித்து வைத்திருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு முத்துவும் வந்திருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது இனி என்ன நடக்கப் போகிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் தற்போது வெளியான ப்ரோமோ ரசிகர்களுக்கு செம என்டர்டெயின்மென்ட் கொடுத்திருக்கிறது. அதில் ரசிகர்கள் எதிர்பார்த்தப்படியே முத்து காரில் சுற்றிக் கொண்டிருக்கும் ஜீவா முத்துவிடம் நான் ரிஜிஸ்ட்ரேஷனுக்கு போவதற்கு முன்பாக பார்லர்க்கு போக வேண்டும் என்று சொல்ல,
அதற்கு முத்து எனக்கு தெரிஞ்சவங்க ஒருத்தவங்களோட பார்லர் இங்கே தான் இருக்கிறது. நீங்க அங்கேயே போய்க்கோங்க என்று ரோகினி பார்லரில் ஜீவாவை இறக்கி விடுகிறார். அப்போது பார்லருக்கு வந்த ஜீவாவை முதலில் யார் என்று தெரியாமல் ரோகிணி வரவேற்க, பிறகு ஜீவாவை பார்த்ததும் அதிர்ச்சியாகி ஜீவாவிடம் இது ஜீவா தானா? இல்லையா? என்று உறுதிப்படுத்த உங்களுடைய பெயர் என்ன என்று கேட்க அதற்கு அவரும் ஜீவா தான் என்று சொல்கிறார்.
உடனே அலார்ட் ஆன ரோகிணி மனோஜ்க்கு போன் போட்டு பியூட்டி பார்லருக்கு வர சொல்கிறார். மனோஜ் வழக்கம்போல எதற்காக அங்கே இப்ப வரவேண்டும் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டு இருக்க, அதற்கு ரோகிணி சீக்கிரமா பியூட்டி பார்லருக்கு வா இங்கேதான் அந்த ஜீவா வந்து இருக்கா என்று சொல்கிறார். அதே நேரத்தில் ஜீவாவிற்கு எந்த சந்தேகமும் வராமல் பியூட்டி பார்லரில் அவருக்கு மேக்கப் செய்வது போன்று பாவனை காட்டிக் கொண்டே இருக்கிறார்.
அங்கு மனோஜ் வந்துவிடுகிறார் முதலில் ஜீவாவிடம் மனோஜ் பணத்தை கேட்க அதற்கு ஜீவா பணத்தை தர முடியாது என்று மறுத்ததால் போலீசுக்கு போன் போட்டு ஜீவாவை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போகின்றனர். அங்கு வைத்து என்னுடைய பணத்தை வாங்கி தாங்க சார் என்று மனோஜ் சொல்ல அதற்கு ஜீவா நான் இவர்கிட்ட பணம் ஏமாத்துன ஆளே கிடையாது என்று முதலில் நடிக்கிறார்.
பிறகு அந்த பணத்தை தர முடியாது என்று பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார். ஆனால் அதே நேரத்தில் முத்து மீனாவுக்கு வாங்கிக் கொடுத்த பைக்கை மீனா நோ பார்க்கிங்கில் பார்க்செய்ததால் போலீஸ் அந்த பைக்கை தூக்கிக்கொண்டு வந்து விட்டனர். அதற்காக முத்துவும் மீனாவும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வெளியே காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தன்னுடைய காரில் சுற்றிக்கொண்டு இருந்தது தன்னுடைய அண்ணனை ஏமாற்றிய பெண் தான் என்ற உண்மை முத்துக்கு தெரியவரும்போது என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.
அதே நேரத்தில் வீட்டிற்கு தெரியாமல் மனோஜ் மற்றும் ரோகிணி இருவரும் ஜீவாவிடம் இருந்து பணத்தை வாங்க வேண்டும் என்று தான் முயற்சிசெய்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் அவர்களுக்கு பணம் கிடைக்குமா? இல்லையா? என்றும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் இந்த பணம் கிடைத்தால் இதை வைத்து மனோஜ் கனடா போவதற்கு முயற்சி செய்வாரா? அல்லது நான் மனோஜை கனடாவுக்கு கூட்டிட்டு போறேன் என்று மீண்டும் ஜீவா ஏமாற்றுவாரா என்று வரும் எபிசோடில் தெரியவரும்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
சிறகடிக்க ஆசை: முத்துக்கு இவ்வளவு பெரிய சோதனையா? பைனான்சியர் சொன்ன கண்டிஷன்.. நெஞ்சுவலியில் அண்ணாமலை -
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications