வாசுதேவனிடம் ரவி கேட்ட வார்த்தை! கடைசியில் முத்து இந்த முடிவு எடுத்துட்டாரு? விஜயாவா இப்படி பேசுறது?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஏப்ரல் மூன்றாம் தேதி எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் ரவி இனி நான் பழையபடி நம்ம வீட்டுக்கு வரணுமா? என்று குழப்பத்தில் இருக்கிறேன் என்று அண்ணாமலையிடம் சொன்னதால் அண்ணாமலை அதிர்ச்சியில் இருக்கிறார்.
அதே நேரத்தில் வீட்டிற்கு வந்த முத்து மற்றும் மீனாவிடம் விஜயா பிரச்சனை செய்ய கடைசியில் அவருக்கு ஏமாற்றம் கிடைக்கிறது. இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் அண்ணாமலை ரவியிடம் போன் பேசிவிட்டு வெளியே வர விஜயா, என்ன ஆச்சு? ரவி என்ன சொன்னான் என்று விசாரிக்க அதற்கு அண்ணாமலை அவன் வருவான் என்று சொல்லிவிட்டு போய்விடுகிறார். விஜயா இவர் சொல்லுவதை பார்த்தா எனக்கு நம்பிக்கை இல்லை என்று டென்ஷன் ஆகி கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்து முத்துவும் மீனாவும் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட போகின்றனர்.
மீனா எனக்கு எதுவும் வேண்டாம் நான் சாப்பிடுற நிலைமையில் இல்ல, வீட்டுக்கு போவோம் என்று சொல்ல அதற்கு முத்து வீட்டுக்கு போனா உங்க மாமியார் நம்மளை நிம்மதியா சாப்பிட கூட விட மாட்டாங்க. நான் காலையில் இருந்து எதுவுமே சாப்பிடல.. ரொம்ப பசிக்குது வா என்று கூப்பிட அதற்கு மீனா நீங்க எதுக்கு அவரை அடிச்சீங்க? உங்க கைய வச்சுக்கிட்டு கொஞ்சம் பொறுமையா இருந்து இருக்கலாம் என்று சொல்கிறார்.

அதற்கு முத்து உன்ன திருடினு சொன்னா நான் எப்படி கேட்டுகிட்டு அமைதியா இருக்க முடியும் என்று கோபப்படுகிறார். அதோட மீனா மீண்டும் எனக்கு சாப்பாடு வேண்டாம் என்று மறுப்பதால் முத்து உன்னை வீட்டில் விட்டுவிட்டு நான் சரக்கு அடிக்க போறேன் என்று மிரட்ட, பயந்து போன மீனா சாப்பிடுகிறார். அடுத்ததாக ரவி ஸ்ருதியை வீட்டுக்கு கூப்பிட ஸ்ருதி வர முடியாது நீ போறதா இருந்தா போ வேணாம்னு நான் தடுக்க மாட்டேன் என்று சொல்கிறார்.

ஆனா எங்க அப்பாவை அடிச்ச அந்த ஆளு இருக்கிற வீட்டுக்கு நான் வரமாட்டேன் என்று சொல்கிறார். அதற்கு ரவி உங்க அப்பா, அம்மா அண்ணி மேல வீண் பழி போட்டதால தானே முத்து அடிச்சான். இவங்க வாயை வச்சுட்டு சும்மா இருந்திருக்கலாமே என்று கேட்க அதற்கு ஸ்ருதி என்னவா இருந்தாலும் அந்த ஆளு எங்க அப்பாவை அடிச்சது தப்புதான் என்று கோபப்படுகிறார்.
அதை தொடர்ந்து ரவி வீட்டை விட்டு வெளியே கிளம்பி வர ஸ்ருதியின் அம்மா சுதா சாப்பிட்டு போங்க என்று சொல்ல ரவி எனக்கு பசிக்கல என்று சொல்கிறார். அதற்கு சுதா இப்படி நடந்துருச்சு மாப்பிள்ளை என்று பேச, அதற்கு ரவி நீங்க அண்ணி மேல பழி போட்டு பேசாம இருந்திருந்தா இவ்வளவு பிரச்சனை இல்ல... யாரு எப்படி பட்டவங்கன்னு தெரியாம உங்க இஷ்டத்துக்கு அவங்க மேல பழியை தூக்கி போட்டுட்டீங்க. அதனாலதான் இவ்வளவு பிரச்சனை என்று பதிலடி கொடுத்துவிட்டு கிளம்பி போகிறார்.
அதற்கு வாசுதேவன் கோபப்படுகிறார் என்ன இந்த பையன் இப்படி பேசிட்டு போறான் என்று சொல்ல, அதற்கு சுதா மாப்பிள நல்லவரு தான் அவருக்கு இப்ப கொஞ்சம் கோவமா இருக்காரு அவ்வளவுதான். பிறகு சரியாயிடுவார் என்று சமாளிக்கிறார். அடுத்த கட்டத்தில் முத்துவும் மீனாவும் வீட்டிற்கு வர கோபமாக இருந்த விஜயா அவர்களை வீட்டுக்குள் வரவிடாமல் தடுக்கிறார்.

எங்க வந்தீங்க? இந்த வீட்டுக்குள்ள கால் எடுத்து வச்சீங்கன்னா அவ்வளவுதான் என்று சொல்ல, அதற்கு முத்து ஏன் வீட்ட தொடச்சி வச்சிருக்கீங்களா? நான் வேணா அப்புறம் வரட்டுமா? என்று நக்கல் செய்கிறார். பிறகு இவங்க இருக்கிற வரைக்கும் இந்த வீட்ல யாரும் நிம்மதியா இருக்க முடியாது அவ்வளவு பெரிய மனுஷனை கை வைக்கிற உனக்கு அசிங்கமா இல்லையா என்று விஜயா முத்துவை திட்டுகிறார்.
அதற்கு முத்து யார் பெரிய மனுஷன் எல்லாத்தையும் மறந்துட்டு அந்த ஓடுகாளிகளை வீட்டுக்குள்ள சேர்த்துக்கிட்டாரு எங்க அப்பா தான் பெரிய மனுஷன் என்று முத்து திருப்பி பேசுகிறார். அதோடு அண்ணாமலையும் அவர் என்னதான் பேசி இருந்தாலும் அவர் மேல நம்ம கை வச்சிருக்கவே கூடாது என்று சொல்ல, அதற்கு முத்து என் பொண்டாட்டியை திருடினு சொல்லும் போது நான் எப்படிப்பா அமைதியா இருக்க முடியும்?

நான் எவ்வளவு பொறுமையா இருந்தேன் அந்த ஆளு ரொம்ப பேசிட்டான் என்று கூறுகிறார். அதற்கு விஜயா உன் பொண்டாட்டியை திருடினு சொன்னதும் அவ தேஞ்சிட்டாளா? என்று கேட்க அதற்கு முத்து இந்த வீட்டிலேயே பணத்தை திருடிட்டு ஓடினவன் எல்லாம் கௌரவமாக இருக்கும்போது என் பொண்டாட்டியை எப்படி அவன் திருடினு சொல்லலாம்? என்று பதிலடி கொடுக்கிறார்.
அதோடு விஜயா இனிமே இந்த வீட்டில் நீ இருக்கக் கூடாது... ஒன்னு நான் இருக்கனும் இல்ல இவங்க இருக்கணும் என்று அண்ணாமலை இடம் சொல்ல, அதற்கு முத்து அவ்வளவு ஆயிடுச்சா? சரி நான் இருக்கிறேன். அவங்கள போக சொல்லுப்பா என்று விஜயாவுக்கு அதிர்ச்சி கொடுக்கிறார். அதற்கு விஜயா இவங்க இந்த வீட்டில் இருந்தால் ஒவ்வொருத்தரா வெளியே போக வேண்டியது தான் என்று சொல்ல,

அதற்கு முத்து இப்ப என்ன நாங்க வெளியே போகணும் அவ்வளவு தானே? மீனா நீ போய் துணி எல்லாம் எடுத்து வை என்று சொல்ல இதைக் கேட்டு விஜயா சந்தோஷப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
Bharathiraja: "கூட இருப்பவர்களையே நம்ப முடியாது..." ரசிகர்களை கலங்க வைக்கும் பாரதிராஜாவின் கடைசி பேட்டி -
"பாசத்துக்குரிய உங்கள் பாரதிராஜா" பேசுகிறேன்.. தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய மாபெரும் இயக்குநர் -
பாரதிராஜா யார்? ஸ்டூடியோக்களில் முடங்கிய திரையுலகை கிராமத்து மண்வாசனைக்கு கூட்டிச்சென்ற கலை வித்தகன் -
பாரதிராஜாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு.. தீவிர மருத்துவ கண்காணிப்பு! இமய இயக்குனருக்கு என்ன ஆச்சு -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே!












Click it and Unblock the Notifications