Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறகடிக்க ஆசை அப்டேட்: மீனாக்கு கத்திக்குத்து.. அண்ணாமலை எடுத்த முடிவு! அதிர்ச்சியில் முத்து! பெரிய சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரயலில் 2026 ஏப்ரல் ஏழாம் தேதிக்கான எபிசோடில், சிந்தாமணியின் ஆட்கள் மீனாவை கத்தியால் குத்தி விடுகிறார்கள். ஆனால் அதற்குப் பிறகு எதிர்பாராத பெரிய சம்பவமும் நடைபெற்று இருக்கிறது என நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

Siragadikka Aasai serial Vijay TV

சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோடு

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், தேர்தலில் மீனாவுக்கு அதிகமாக சப்போர்ட் இருக்கிறது என்று பார்த்து சிந்தாமணி பயப்படுகிறார். அதனால் காருக்குள் சென்று ஒரு ரெளடிக்கு போன் பண்ணி, எல்லாம் ரெடியா என்று கேட்டு, நீ வந்து முத்துவை கத்தியால் குத்திவிடு என்று சொல்லுகிறார். இதைப் பார்த்து மீனா பயந்து இந்த எலெக்‌ஷனிலேயே நிற்கக்கூடாது என்று நினைக்க வேண்டும் என்பதற்காகவே இப்படிச் செய்கிறார்.

மீனாவுக்கு கத்திக்குத்து

வெளியே முத்துவும் மீனாவும் சந்தோஷமாக டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது முகத்தில் கர்சிப் கட்டிக் கொண்டு கத்தியுடன் ஒருவர் வந்து, முத்துவை குத்த முயற்சி செய்கிறார். அதை கவனித்த மீனா உடனே முத்துவுக்கு முன் நிற்கிறார். அதனால் அந்த நபர் மீனாவை குத்திவிடுகிறார்.

முத்து கண்ட காட்சி

மீனா வலியால் கத்துகிறார். முத்து உடனே அந்த நபரை பிடிக்க முயற்சி செய்கிறார். அவர் கர்சிப்பை விலக்கி முகத்தை பார்க்கிறார். ஆனாலும் அந்த நபர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிடுகிறார்.

மீனா காயமடைந்ததால் ஆஸ்பத்திரிக்கு போவார் என்று சிந்தாமணி நினைக்கிறார். ஆனால் மீனா முதலில் நாமினேஷன் தாக்கல் செய்யப் போகிறார். ரத்தக் காயத்துடனே சென்று நாமினேஷன் தாக்கல் செய்கிறார். அதன் பிறகுதான் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்கிறார்கள். டாக்டர் காயத்திற்கு கட்டு போட்டு ரெஸ்ட் எடுக்க சொல்லுகிறார்.

Siragadikka Aasai serial Vijay TV

வீட்டுக்கு வந்த மீனா

பிறகு முத்து, மீனாவை வீட்டுக்கு அழைத்து செல்கிறார். அப்போது விஜயா இதற்கு தானே நான் ஆரம்பத்தில் இருந்து தேர்தலில் நிற்க வேண்டாம்னு சொன்னேன். இவ தேர்தலில் நிற்க போறேன்னு, இப்போ எழுந்து நிற்க கூட முடியாமல் படுத்து கிடக்கா என்று வழக்கம்போல திட்டிக் கொண்டிருக்க, அதற்கு அண்ணாமலை விஜயா திட்டுகிறார். அதோடு இனி இந்த விஷயத்தில் நீ தலையிட விடக்கூடாது என்றும் மிரட்டுகிறார்.

அப்போது மீனா, என்னால் உங்க உயிருக்கு ஆபத்து வருகிறது, அதனால் நாமினேஷனை வாபஸ் வாங்கிவிடலாம், இந்த தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன் என்று சொல்லுகிறார். முத்து அதை கேட்டு கோபப்படுகிறார். இது எல்லாம் சிந்தாமணியின் வேலை, நம்மை பயமுறுத்தவே இப்படி பண்ணுற, நீ தேர்தலில் ஜெயித்து அவளுக்கு பதில் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார். அண்ணாமலையும் வாபஸ் வாங்க வேண்டாம் என்று சொல்கிறார்.

Siragadikka Aasai serial Vijay TV

முத்து கண்டுபிடிக்கும் உண்மை

பின்னர் முத்து, செல்வத்துக்கு போன் செய்து அந்த ரெளடி பற்றி கேட்கிறார். அவன் தப்பிச்சு போயிட்டான், இதெல்லாம் சிந்தாமணியின் வேலைதான் இருக்கும் என்று செல்வம் கூறுகிறார். மற்றபக்கம் மீனாவை பார்க்க அவருடைய அம்மா, சீதா, ஸ்ருதி, ஸ்வேதா எல்லோரும் வீட்டுக்கு வருகிறார்கள். அவர்களை பார்த்ததும் மீனா அழுகிறார். அவர்கள் மீனாவை சமாதானப்படுத்தி, நீ கண்டிப்பாக இந்த எலெக்‌ஷனில் போட்டியிட வேண்டும் என்று சொல்லுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+