சிறகடிக்க ஆசை: உனக்கு குழந்தை பிறந்திருக்கா? ரோகிணியிடம் விஜயா கேட்ட கேள்வி.. மீனாவால் உடைந்த உண்மை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரைக்குமான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரோகிணி இரண்டாவது குழந்தைக்கு மருத்துவமனையில் செக் பண்ணி இருக்கும் விஷயம் மொத்தம் குடும்பத்திற்கும் மீனா மூலம் தெரிய வந்திருக்கிறது.
அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக இருக்கிறது. ஏற்கனவே ரோகிணி விஷயத்தில் முத்துவிற்கு சந்தேகம் இருக்கிறது. இந்த நிலையில் இப்போது ரோகிணி மருத்துவமனையில் இரண்டாவது குழந்தைக்கு செக் பண்ணி இருக்கும் விஷயம் சீதா மூலமாக மீனாவிற்கு தெரிய வந்திருக்கிறது.

இதைப்பற்றி மீனா வீட்டில் சொல்லப் போகிறாரா? அல்லது வழக்கம் போல குடும்பத்திற்கு பிரச்சனை வந்துவிடும் என்று மீனா இருக்கப் போகிறாரா? என்ற குழப்பம் எல்லோருக்கும் இருந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் மீனா குழப்பமாக இருப்பதை பார்த்த ஸ்ருதி என்ன ஆச்சு? ஏன் நீங்க டல்லா இருக்கீங்க? எதையோ யோசிச்சிட்டு இருக்கீங்களே என்று கேட்க,
அதற்கு மீனா, சீதா வேலை பார்க்கும் ஹாஸ்பிடலில் ரோகிணியை பார்த்ததாகவும் அங்கு ரோகிணி இரண்டாவது குழந்தைக்கு செக் பண்ண வந்திருப்பதாக நர்ஸ் சொன்ன விஷயத்தை சொல்லிவிடுகிறார். அதோடு இந்த விஷயத்தை வேறு யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று மீனா வேண்டுகோள் வைத்திருக்கிறார். ஆனால் ஒரு ரகசியம் ஒருவருக்கு தெரிந்து விட்டால் அது ரகசியமாக இருக்காது என்பதற்கு உதாரணமாக ஸ்ருதிக்கு தனக்கு தெரிந்த உண்மையை ரவி இடமும் சொல்லிவிடுகிறார்.

ரவி அதை அப்படியே முத்துவிடம் சொல்ல, முத்து அண்ணாமலையிடம் சொல்கிறார். அண்ணாமலை இது பற்றி விஜயாவிடம் சொல்லி, உண்மைய சொல்லு உனக்கு இந்த விஷயம் தெரியுமா? இல்ல தெரியாதா? என்று அண்ணாமலை கேள்வி கேட்டதும் கோபமான விஜயா நேரடியாக ரோகிணியிடமே இது பற்றி கேள்வி கேட்கிறார். நீ ஏற்கனவே உண்டாகி இருந்தியா? உண்மைய சொல்லு என்று ரோகிணியை பிடித்து உலுக்கி விஜயா கேட்கிறார்.
இப்படியாக ப்ரோமோ இருக்கும் நிலையில் ரோகிணி என்ன சொல்ல போகிறார் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. ஒரு வழியாக ரோகிணி தன்னுடைய பழைய வாழ்க்கையை பற்றி சொல்லப் போகிறாரா? இல்லை வழக்கம் போல இந்த முறையும் பொய் சொல்லி தப்பிக்க போகிறாரா? என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனாலும் ரோகிணி இந்த முறையில் தப்பித்துவிடுவார் என்று எதிர்பார்க்க முடிகிறது.

காரணம் ரோகிணி நான் ஒரு முறை கர்ப்பமாக இருந்தேன் ஆனால் அதை அபார்ஷன் செய்து விட்டேன் என்று சொல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் மனோஜ் நமக்கு இப்போதைக்கு குழந்தை வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அதை வைத்து இந்த முறை தப்பித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்து இருந்து பார்க்கலாம். நீங்கள் ரோகிணி இந்த முறை என்ன சொல்வார் என்று எதிர்பார்க்கிறீங்க கமெண்டில் தட்டி விடுங்க.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications