சிறகடிக்க ஆசை: இது என் வீடு! விஜயாவிற்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ருதி.. ரோகிணியால் அவமானப்படும் சீதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஆகஸ்ட் 29ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ரோகிணியால் சீதாவின் வேலை பறிபோக இருக்கிறது. அதே நேரத்தில் விஜயாவிற்க்கும் மனோஜ்க்கும் ஸ்ருதி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மீனா, சீதா வேலை பார்க்கும் ஹாஸ்பிடல்க்கு வந்திருக்கிறார். அங்கு இருவரும் டீ கொடுத்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது சீதா ரோகிணி விஷயம் பற்றி வீட்டில் பேசினீங்களா? என்று கேட்க, அதற்கு சீதா ஆமாம் அதனால வீட்ல பிரச்சனை ஆகிடுச்சு என்று நடந்த விஷயத்தை சொல்கிறார்.

Siragadikka aasai serial

அதற்கு சீதா, ஸ்ருதி டப்பிங் பேசுவாங்கன்னு பார்த்தா சரியான ரேடியோவா இருக்காங்களே என்று பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கு மீனா இனி ரோகிணி விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று அறிவுரை கூறிவிட்டு போகிறார். அப்போது ஹாஸ்பிடல் HR சீதாவிற்கு ஃபோன் பண்ணி கூப்பிடுகின்றனர். பிறகு சீதாவிடம் நீங்க எதற்கு ரோகிணி என்ற கிளைன்ட் டீடைல் பற்றி வெளியே சொன்னிங்க? அவங்க இனி ஹாஸ்பிடலுக்கு வரமாட்டேன் என்று சொல்லிட்டாங்க.

அதனால உங்களுக்கு இங்க வேலை இல்லை என்று மிரட்ட, அதற்கு சீதா அவங்க என்னுடைய ரிலேட்டிவ். அதனாலதான் நான் அவங்களுடைய டீடைல்ஸ் பற்றி விசாரிச்சேன். இனிமே இதை பண்ண மாட்டேன் என்று சொல்லி தன்னுடைய குடும்ப கஷ்டத்தை பற்றியும் சொல்ல, அதற்கு HR இனிமே இப்படி பண்ணாதீங்க ஆனா இந்த மாதத்தில் உங்களுக்கு பாதி சம்பளம் தான் வரும் என்று வார்னிங் கொடுக்கிறார்.

Siragadikka aasai serial

மறுபக்கத்தில் மீனாவுடன் பூ கட்டுபவர்கள் வீட்டிற்கு வெளியே வந்து மீனாவை போன் போட்டு கீழே வா என்று கூப்பிட, கீழே வந்த மீனா என்ன ஆச்சி என்று விசாரிக்க பெரிய ஆர்டர் வந்திருக்கு நைட்டு முழுக்க பூ கட்டணும் போலாமா என்று கேட்க, அதற்கு மீனா வீட்டில் இருக்கும் வேலைகள் பற்றி லிஸ்ட் போட்டுக் கொண்டே இருக்க வந்தவர்கள் போதும் நிறுத்துமா என்று கிண்டல் செய்கிறார்கள்.

பிறகு அவர்களிடம் வரவில்லை என்று சொல்லி விடுகிறார். ஆனால் கொஞ்ச நேரம் கழிச்சு முத்து போன் போட்டு நைட்டு நான் வீட்டுக்கு வரமாட்டேன் வேலூருக்கு சவாரிக்கு போறேன் என்று சொல்ல, நீங்க எப்போ சாப்பிடுவீங்க எப்படி சாப்பிடுவீங்க என்று மீனா முத்து விடவும் கேள்வி மேல் கேள்வி கேட்க அதற்கு முத்து நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன் என்று போனை வைத்து விடுகிறார்.

Siragadikka aasai serial

பிறகு மீனா பூ கட்டுபவர்களுக்கு போன் போட அவர்கள் நீ வரவில்லை என்றதும் நாங்க வேற ஒருவரிடம் பேசி விட்டோம் என்று சொல்லிவிடுகிறார்கள். அதைத்தொடர்ந்து ஸ்ருதி ரவிக்கு போன் செய்து வெளியே போலாமா என்று கேட்க அதற்கு ரவி இன்னைக்கு நைட்டு நான் வரமாட்டேன் லேட் ஆகும் நீ சாப்பிட்டு தூங்கு என்று சொல்லி விடுகிறார். பிறகு ஸ்ருதியும் மீனாவும் பேய் படம் பார்க்கலாம் என்று சொல்லி பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது படத்தை பார்த்து மீனாவும் ஸ்ருதியும் கத்தி கொண்டு இருக்க அங்கு வரும் விஜயா இருவரையும் திட்டுகிறார். அதற்கு ஸ்ருதி நீங்க பேய் படம் பார்த்து பயப்பட மாட்டீங்களா? என்று கேட்க, நான் பேய்க்கு பயப்பட மாட்டேன். பேய் வந்தால் ஓங்கி ஒரே அடி பேய் சுருண்டு விழுந்துரும் என்று சொல்லிவிட்டு போய்விடுகிறார்.

Siragadikka aasai serial

இதனால் ஸ்ருதி ஆன்ட்டிக்கு பேய் பயத்தை காட்டறோம் என்று பிளான் போடுகிறார். ஒரு ஸ்பீக்கரை எடுத்து வந்து பேயை போல சத்தம் போட அந்த சத்தத்தை கேட்டு விஜயா பயந்து போய் இருக்கிறார். அண்ணாமலை விஜயா சிரிக்காம தூங்கு என்று சொல்ல நான் இல்லங்க வேற யாரோ சிரிக்கிறாங்க என்று பயத்துடன் இருக்கிறார். அந்த நேரத்தில் ஸ்பீக்கர் பட்டத்தை கேட்டு மனோஜ் ரோகிணியை எழுப்புகிறார்.

அப்போது ஸ்ருதி குரலை மாற்றி விஜயா... என்று கூப்பிட விஜயா பயந்து போய்விடுகிறார். யாரு யாரு என்று விஜயா கேட்க, ஸ்ருதி இது என் வீடு என்று சொல்ல அதற்கு மனோஜ் இதற்கு முன்னாடி இந்த வீட்டில் தூக்கு மாட்டி செத்துப் போய் இருப்பாங்க போல என்று பயப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+