அசிங்கப்படுத்திய விஜயாவை அதிர்ச்சி அடைய வைத்த மீனா.. கண் கலங்கிய முத்து.. உடைந்த குடும்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் டிசம்பர் 20 முதல் 23ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ஸ்ருதியின் அம்மா செயலால் மீனாவை விஜயா அவமானப்படுத்த அதற்கு கோபத்தில் மீனா தன்னுடைய நகைகளை கழட்டி கொடுத்திருக்கிறார்.

அதோடு இனி என்னுடைய புருஷன் சம்பாத்தியத்தில் வாங்குற நகையை தான் நான் போட்டுக்குவேன் என்று மீனா எடுத்த முடிவை பார்த்து முத்து கண்கலங்கி இருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம். அந்த வகையில் ஸ்ருதி ரூம் இல்லாமல் மொட்டை மடியில் தூங்கினோம் என்று சொன்னதை கேட்டு தப்பாக புரிந்து கொண்ட சுதா வீட்டிற்கு வந்து சண்டை போட்டு இருந்தார். பிறகு அண்ணாமலை நாங்க தான் எங்க ரூமை ஸ்ருதி, ரவிக்கு கொடுத்திருக்கோம் என்று உண்மையை சொன்னதும் சுதா சமாதானம் ஆகி இருந்தார். அதைத்தொடர்ந்து அடுத்த நாள் மீனா ரவி ஸ்ருதிக்காக சமைத்து வைத்திருந்தார். ஆனால் அவர்கள் வெளியேவே சாப்பிட்டு விட்டு வந்து விட்டேன் என்று சொன்னதும், முத்து மீனா உங்களுக்காக கஷ்டப்பட்டு சமைச்சிருக்கா, ஆனா நீங்க ஒரு வார்த்தை கூட சொல்லாம வெளியே சாப்பிட்டு வந்துட்டேன்னு சொல்றீங்களே என்று கேட்டிருந்தார். அதோடு முத்து குடித்து விட்டு இப்படி எல்லாம் பேசுகிறார் என்று சொல்லி ஸ்ருதி வம்பு இழுக்க அதைத் தொடர்ந்து மீனா முத்துவிடம் இதற்கு முன்னாடி ரோகினி மட்டும்தான் இப்படி என்ன அசிங்கப்படுத்தினாங்க. இப்போ ஸ்ருதியும் என்னை அசிங்கப்படுத்துறாங்க இப்படி புதுசா வீட்டுக்கு வந்த பொண்ணு முன்னாடி நீங்க குடிச்சிட்டு வந்து சண்டை போடுரிங்க. இது எனக்கு தான் அவமானமா இருக்கு என்று வருத்தப்பட்டு இருந்தார். இந்த நிலையில் வரும் வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதை சுதா அண்ணாமலை வீட்டிற்கு வந்து இதுல 50 பவுன் நகை இருக்கு இத வச்சுக்கோங்க என்று விஜயாவிடம் கொடுக்கிறார். அதற்கு அண்ணாமலை இது வரதட்சணை வாங்குற மாதிரி இருக்கு என்று சொல்ல சுதா உங்க மூத்த மருமகளும் வரும்போது நிறைய நகை நகை போட்டு வந்திருப்பாங்க இல்ல....
உங்க ரெண்டாவது மருமகளுக்கு என்ன செஞ்சாங்க? என்று கேட்க, உடனே விஜயா மீனாவை அவ எங்க நகை போட்டுட்டு வந்தா அவளுக்கு நாங்க தான் நகை செஞ்சு போட்டு கூட்டிட்டு வந்தோம் என்று அவமானப்படுத்துகிறார். அதற்கு மீனா ஏழை வீட்டில் பிறந்தா அவ்வளவு தப்பா என்று கேட்க, அதற்கு விஜயா உங்க அப்பா உனக்கு நகை சேர்த்து வச்சுட்டா போனாரு என்று கேவலப்படுத்துகிறார்.
அதைக் கேட்டு மீனாவால் தாங்கிக்கொள்ள முடியாமல் தன்னுடைய ரூமுக்கு போய் விஜயா போட்ட தாலி செயினை கழட்டி வந்து கொடுக்கிறார். பிறகு விஜயா தாலி, குண்டுமணி எல்லாமே நாங்க போட்டோம் என்று சொல்ல மீனா அதையும் கழட்டி கொடுத்துவிட்டு கழுத்தில் மஞ்சள் கயிறு போட்டுக்கொண்டு இதுக்கு மேல என் உடம்புல நகை என்று ஒன்று ஏறுனா அது என்னோட புருஷன் சம்பாதித்தது தான் இருக்கணும் என்று சொல்ல அதற்கு முத்து அதிர்ச்சியாகி நிற்கிறார். இப்படியாக ப்ரோமோ முடிவடைந்து இருக்கிறது. ஏற்கனவே மீனாவை கூப்பிட்டு வைத்து ஸ்ருதி மற்றும் ரோகிணி இருவரும் தங்களுடைய கணவரை பெருமையாக பேசி முத்துவை மட்டம் தட்டி இருந்ததால் மீனா கோபத்தில் இருந்த நிலையில் இப்போது விஜயாவும் மீனாவை அவமானப்படுத்தியதால் மீனா பொங்கி எழுந்திருக்கிறார். இனி முத்து என்ன முடிவெடுக்கப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications