வேலைக்கு போன மனோஜ்.. பார்லர் விஷயத்தை உளறிய ரோகினி.. அண்ணாமலை எடுத்த திடீர் முடிவு..முத்துவின் கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் பிப்ரவரி 5ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகியிருக்கிறது. இதில் முத்து வேலை இல்லை என்று மனோஜை அவமானப்படுத்தி இருந்ததால் மனோஜ் இன்று ஒரு வேலைக்கு சேர்ந்திருக்கிறார். ஆனால் இப்போது மறுபடியும் தான் என்ன வேலை பார்க்கிறேன் என்பதை குடும்பத்திடன் சொல்லாமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் விஜயாவின் நடவடிக்கையை பார்த்து அண்ணாமலை புது முடிவெடுக்கிறார். அதாவது மீனாவின் நகையால் வீட்டில் அடுத்த பிரச்சனை வெடிக்கிறது. இந்த நிலையில் இன்று என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோட்டில் ஆரம்பத்தில் முத்து மனோஜ் அவமானப்படுத்தியதால் ரோகிணி மனோஜை ரூமுக்கு கூட்டிட்டு போய் இந்த முத்து இப்படி பேசுறது எனக்கு சுத்தமா பிடிக்கல. நானும் எதிர்த்து பேசி இருப்பேன். ஆனால் அவரை மாதிரி மரியாதை இல்லாமல் என்னால் பேசத் தெரியாது அதனால்தான் நான் விட்டு வைத்திருக்கிறேன் என்று சொல்ல அதற்கு மனோஜ் சரி விடு, அவன் என்கூட பிறந்துட்டான் அதனால அவன் என்ன பேசினாலும் நான் தாங்கிக்கிறேன்
ஆனா உன்னை அவமானப்படுத்துவதை தான் என்னால தாங்கிக்க முடியல என்று சொல்லிக் கொண்டிருக்க, அதற்கு ரோகிணி பிடித்த வேலையை தான் பாக்கணும்னு சொன்னா முதலில் கஷ்டப்பட தான் செய்யணும். நானும் தான் இப்போது பார்லரில் வேலை செஞ்சுகிட்டு இருக்கேன் என்று உளர, அதைக் கேட்டு அதிர்ச்சியான மனோஜ் நீ வேலை பாத்துட்டு இருக்கியா? நீ ஓனர் தானே? என்று கேட்க, அதற்கு ரோகிணி இல்ல நான் ஓனரா இருந்தாலும் அங்கு வேலை பார்க்கிறேன் அல்லவா அதை சொன்னேன்.
ஆனால் ஆரம்பத்தில் நான் வீடு வீடாக சென்று தெரப்பி கொடுத்துட்டு இருந்தேன். அப்போ ரொம்பவே கஷ்டப்பட்டேன். அதனால இப்போ ஓனரா இருக்கிறேன். அது போல நீ இப்போ கிடைச்ச வேலையை செஞ்சா கண்டிப்பா உனக்கு புடிச்ச வேலை கிடைத்துவிடும். அதனால என்ன ஆனாலும் சரி இன்னைக்கு நீ ஒரு வேலையோட தான் வீட்டுக்கு வரணும். இதை நீ ரெக்யூஸ்டா எடுத்தாலும் சரி ஆர்டர் எடுத்துக்கிட்டாலும் சரி என்று சொல்ல மனோஜ் கண்டிப்பா வேலையோடு வரேன் என்று வீட்டை விட்டு கிளம்புகிறார்.

பிறகு மனோஜ் ஒவ்வொரு கம்பெனியாக ஏறி இறங்க அங்கு எல்லா இடத்திலுமே இவருக்கு ஓவர் குவாலிபிகேஷன் இருக்கிறது என்று எல்லோரும் ரிஜெக்ட் செய்து விடுகிறார்கள். இதனால் விரத்தியாக வந்து கொண்டு இருக்க ஒரு இடத்தில் மட்டும் வேலைக்கு ஆட்கள் தேவை என்று ஒரு போர்டு இருக்கிறது. அதை பார்த்து அங்கிருந்த ஹோட்டலுக்குள் நுழைகிறார். அங்கே ஹோட்டலில் இருப்பவரிடம் வேலைக்கு ஆள் தேவை என்று போர்டு போட்டு இருக்கே என்ன வேலை என்று விசாரிக்க,
அதற்கு அவர் சப்ளையர் வேலையும் இருக்கு ஆர்டர் எடுக்குற வேலையும் இருக்கு என்று சொல்ல, அதற்கு மனோஜ் இந்த ரெண்டு வேலைக்கு என்ன வித்தியாசம் இருக்கு என்று கேட்க அவர்களும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அந்த நபர் மனோஜிடம் உங்களுக்கு தெரிந்தவர் யாருக்காவது கேட்கின்றீர்களா? என்று கேட்க அதற்கு மனோஜ் இல்ல எனக்கு தான் வேலை வேண்டும் என்று சொல்ல சொல்கிறார்.
அதற்கு அந்த நபர் உங்களை பார்த்தால் நிறைய படிச்சவர் மாதிரி இருக்கீங்களே என்று கேட்க அதற்கு மனோஜ் இல்லைங்க நான் பத்தாம் வகுப்பு தான் படித்திருக்கிறேன் என்று பொய் சொல்கிறார். அதோடு மனதிற்குள் சப்ளையர் வேலை என்றால் கிச்சனுக்கு அங்கு இங்கும் ஓட வேண்டும். அதனால் ஆர்டர் எடுக்கிற வேலையே ஈசி என்று ஆர்டர் எடுக்கிற வேலையை கேட்கிறார்.

அதோடு வேலை டைம் என்ன என்று கேட்க, அவர்கள் 10 மணியிலிருந்து நைட் 10 மணி வரைக்கும் என்று சொல்கிறார்கள். அதற்கு சரி என்று மனோஜ் நாளையிலிருந்து நான் வேலைக்கு வருகிறேன் என்று சொல்ல அந்த நபர் அதுதான் வந்துட்டியே இன்னையில இருந்தே வேலைக்கு சேர்ந்துக்க. சாயங்காலம் நிறைய கஸ்டமர் வருவாங்க என்று சொல்லி அனுப்புகிறார்.
மறுபக்கத்தில் வீட்டுக்கு வந்த முத்து மீனாவை கூப்பிட்டு இன்னும் கடையில் ஆள் இல்லாமல் இருக்கு என்று கேட்க அதற்கு மீனா நான் டிபனுக்கு மாவாட்டி கொண்டு இருக்கிறேன் என்று சொல்ல, அதற்கு முத்து நீ போய் கடையில் இருக்கிறாயா இல்லை நான் போய் நிற்க வா என்று கேட்கிறார். அதற்கு மீனா அதற்கு மீனா நான் கொடுத்தால் ஒரு முழம் பூ அதுவே உங்க கையால் போட்டா ஒன்றரை முழம் போகும். அதனால சீக்கிரமா பூ தீர்ந்திடும் நீங்க ஒன்னும் பண்ண வேண்டாம் என்று சொல்கிறார்.
அந்த நேரத்தில் மனோஜ் அல்வாவோடு வீட்டிற்கு வர, முத்து என்னடா சீக்கிரம் வந்துட்ட பார்க்கை மூடிட்டாங்களா என்று கேட்கிறார். ஆனால் மனோஜ் எல்லாரையும் கூப்பிட்டு தனக்கு வேலை கிடைத்து விட்டதாகவும் முதல் நாள் சம்பளத்தில் அல்வா வாங்கிட்டு வந்ததாகவும் ரோகிணிக்கு கொடுக்கிறார். அதை பார்த்து ரோகினியும் விஜயாவும் சந்தோஷப்பட அப்போதும் முத்து முதல் நாள் சம்பளம் கூலி வேலைக்கும், அப்புறம் கூலிக்கு தான் டெய்லி சம்பளம் தருவாங்க.

கம்பெனியில் மாச கடைசியில் தானே சம்பளம் தருவாங்க. இது எங்கேயோ இடிக்குது என்று பிரச்சனையை கிளப்ப அதற்கு மனோஜ் எங்க கம்பெனி கொஞ்சம் வித்தியாசமான கம்பெனி என்று சொல்ல, ரோகிணி மனோஜ் ரூமிற்கு கூட்டிட்டு போகிறார். அங்கு ரோகினி என்ன வேலை என்று கேட்க அதற்கு மனோஜ் பெரிய வேலை கிடையாது. ஆனால் நான் யாரையும் ஏமாத்தல பொய் சொல்லல என்று மனோஜ் என்ன வேலை என்பதை சொல்லாமல் மறைத்துவிடுகிறார்
மறுநாள் காலையில் மீனா கடையில் பூ வாங்க வந்த ஒரு பெண் நீ சந்தோஷமா தானே இருக்க, உன்னை முத்து தம்பி நல்லா தானே பாத்துக்குறாரு? ஆனா உன் கழுத்துல தாலி செயின் என்ன ஆச்சு? மாமியார் எதுவும் வாங்கி வச்சுக்கிட்டாங்களா என்று கேட்க அதற்கு மீனா இல்ல தாலி செயின் அறுத்துப் போச்சு அதனால அதை சரி பண்ண கொடுத்து இருக்கேன் என்று சமாளிக்கிறார்.
அந்த நேரத்தில் அங்கு வரும் விஜயா உன்னை நான் எவ்வளவு நேரமா கூப்பிட்டு இருக்கேன். டிபன் செய்ய வேண்டாமா? அவங்க எல்லாரும் வேலைக்கு கிளம்பிட்டு இருக்காங்க. நீ இந்த பூக்கடையை பிடிச்சிட்டு இங்கேயே நின்னுகிட்டு இருக்க முதலில் இந்த கடையை தூக்கணும் என்று கோபமாக கத்தி விட்டு போக அதை அந்த பெண் பார்த்து உங்க மாமியார் இப்படி எல்லாம் பேசுறாங்க என்று கேள்வி கேட்க,

அதற்கு மீனா கடைக்கு வந்ததால் வீட்டில் வேலையை மறந்துட்டேன். அதான் ஞாபகப்படுத்திட்டு போறாங்க என்று சமாளிக்கிறார். இதை எல்லாம் அண்ணாமலை தள்ளி நின்று கேட்டுக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications