சிறகடிக்க ஆசை: விஜயாக்கு ஆப்பு வைத்த மீனா.. முத்துக்கு தெரிய வந்த உண்மை.. ரசிகர்கள் கேட்டது நடந்தது
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 பிப்ரவரி பத்தாம் தேதிக்கான எபிசோடில் மீனாவை வேலை செய்ய விடாமல் தடுத்த விஜயாவிற்கு கடைசியில் ஏமாற்றம் கிடைத்தது. அதே நேரத்தில் முத்துவிற்கு விஜயா பற்றிய உண்மைகளும் தெரிய வந்திருக்கிறது.
சிறகடிக்க ஆசை சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்த்த தருணம் இந்த வாரத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ரோகிணி எப்பொழுது மாட்டுவார் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு இந்த வாரத்தில் சர்ப்ரைஸ் இருக்கிறது. அதாவது நேற்று வெளியான 2 ப்ரோமோக்களில் ரோகிணியின் மகனை முத்து பார்த்திருக்கிறார்.

அதுபோல ரோகிணி மலேசியா மாமாவாக நடிக்க கூட்டிட்டு வந்த நபரும் முத்துவிடம் சிக்குகிறார். ஏற்கனவே அவர் அப்பா இறந்துவிட்டார் என்று வீட்டிற்கு நடிக்க வந்தபோது நான் இனிமேல் உன் விஷயத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார். இதனால் அவர் உண்மையை சொன்னால் ரோகிணியின் நிலைமை அவ்வளவு தான்.
அதுபோல இன்றைய எபிசோடில்
மீனாவை முன்னேற விடாமல் தடுத்த விஜயாவிற்கு ஏமாற்றம் கிடைத்திருக்கிறது. அதாவது மீனா மண்டபத்துக்கு போய் வேலை பார்க்க விடக்கூடாது என்பதற்காக சிந்தாமணி உடன் சேர்ந்து விஜயா ப்ளான் போடுகிறார். அதன்படி தனக்கு கையை அசைக்க முடியவில்லை என்று நடித்து மீனாவிடம் தொடர்ச்சியாக வேலை வாங்கிக் கொண்டு இருக்கிறார்.

அப்போது முத்து போன் பண்ணுகிறார். முத்துவிடம் அத்தைக்கு உடம்பு முடியல. அவரை விட்டுட்டு என்னால வர முடியாது. ஆனால் நான் இங்கிருந்து வீடியோ காலில் எல்லாத்தையும் சொல்றேன். நீங்க அதை சரியா செஞ்சிடுங்க என்று வீடியோ காலில் மீனா சொல்ல முத்து, சீதா மற்றும் அங்குள்ள பெண்கள் இணைந்து மீனா சொன்ன மாதிரி டெக்கரேஷன் பண்ணி முடிக்கிறார்கள்.
இறுதியில் டெக்ரேசன் முடிந்ததை பார்த்து எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். மீனா டெக்கரேஷன் பண்ணி முடித்து விட்ட விஷயம் சிந்தாமணிக்கு தெரிய வருகிறது. அந்த நேரத்தில் விஜயாவுக்கு சுடுதண்ணி எடுத்துட்டு மீனா போகும்போது அங்கு விஜயாவுக்கு போன் பண்ணிய சிந்தாமணி உங்களை நம்பி ஒன்றுமே செய்ய முடியாது.

உங்க மருமக உங்களுக்கு மேல தந்திரகாரியா இருக்கா. வீட்டில் இருந்தே திருமண ஆர்டரை நடத்தி நன்றாக முடித்து விட்டா என்று சொன்னதும் அதைக் கேட்ட விஜயா அது எப்படி முடியும்? நான் அவளிடம் தொடர்ச்சியாக வேலை மேல் வேலை வாங்கிக் கொண்டே இருக்கிறேன் என்று சொல்ல, கிழிச்சீங்க என்று விஜயாவை திட்டிவிட்டு சிந்தாமணி போனை வைக்கிறார்.
இதையெல்லாம் வெளியில் இருந்து மீனா கேட்டு விடுகிறார். கடைசியாக முத்து வீட்டிற்கு வந்து எல்லாம் சிறப்பாக நடந்து முடிந்து விட்டது என்று மீனாவை பாராட்டுகிறார். அப்போது மீனா அத்தைக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னது போய். அவர் சிந்தாமணி உடன் சேர்ந்துதான் இந்த காரியத்தை செய்திருக்கிறார் என்று சொன்னதும் முத்து உண்மையா? என்று அதிர்ச்சி அடைகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications