சிறகடிக்க ஆசை: முத்து நிலைமைக்கு விஜயா தான் காரணம், அண்ணாமலை சொன்ன வார்த்தை! முத்து எடுத்த முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜூலை 10ஆம் தேதிக்கான எபிசோடில் அருண் மற்றும் சீதா திருமணம் நடைபெறுகிறது. ஆனால் மீனாவை இனி வீட்டிற்கு வரக்கூடாது என்று முத்து மிரட்டுகிறார். அதேபோல முத்துவின் இந்த நிலைமைக்கு காரணம் விஜயா தான் என்று அண்ணாமலை விஜயாவை திட்டிக் கொண்டிருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் சீதா அருணுடன் சொல்லாமல் மண்டபத்தை விட்டு வெளியே போனதால் அவர் கோபப்பட்டு இனி இந்த கல்யாணம் நடக்குமானு எனக்க தெரியல என்று சத்தம் போட்டு கொண்டிருக்கிறார். அதற்கு ரவி இந்த பிரச்சனைக்கு காரணம் நீங்கதானே என்று கேட்கிறார். அதை பேசுற நேரமா என்று அருண் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

பிறகு கீதா வராததால் ஒரு கட்டத்தில் மண்டபத்தை விட்டு கிளம்ப அண்ணாமலை சீதாவை கல்யாணம் செய்துட்டீங்க இப்ப கழட்டி விட்டுட்டு போறது நியாயமே இல்லை.. எல்லாத்துலயும் அவசரமாகதான் முடிவெடுப்பீங்களா? வீட்டில் இருக்கிற பெரியவங்க கிட்ட பேசாம உங்க இஷ்டத்துக்கு கல்யாணத்தை பண்ணி இருக்கீங்க? அப்புறம் குடும்பத்தை எல்லாத்தையும் அனுசரிச்சு போகாம இப்பவும் உங்க முடிவில் தான் சுயநலமாய் இருக்கிறீங்க என்று அண்ணாமலை கேட்டதும் அருணும் அவருடைய அம்மாவும் அமைதியாக இருக்கிறார்கள்.

அந்த நேரத்தில் சீதா மற்றும் மீனா மண்டபத்துக்கு வருகின்றனர். முத்து முழு போதையில் இருக்க அவரை செல்வம் கைத்தாங்கலாக கூட்டிக்கொண்டு வருகிறார். அதை பார்த்ததும் எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது முத்து தடுமாறி வருவதை பார்த்ததும் போலீஸ்காரர்கள் என்ன குடிச்சிட்டு வந்திருக்கிறான் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். பிறகு சீக்கிரமாக கல்யாணத்தை முடித்து விடலாம் என்று எல்லோரும் சொன்னதும் அருண் மற்றும் சீதா மேடையில் உட்காருகின்றனர்.

ஐயர் மந்திரம் சொல்ல சீதாக்கு அருண் தாலி கட்டி விடுகிறார். பிறகு எல்லோரும் ஆசிர்வாதம் செய்கின்றனர். அப்போது முத்துவை ஆசீர்வாதம் செய்ய மீனா கூப்பிடுகிறார். அதற்கு என்னால உன் தங்கச்சி அழக்கூடாது என்று தான் நான் இங்கே வந்தேன், இனிமே எனக்கும் உன் குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நான் உன் வீட்டுக்கு வர மாட்டேன் நீயும் என் வீட்டுக்கு வரக்கூடாது என்று சத்தமாக சொல்லிவிட்டு போகிறார். அதனால் மீனா அழுது கொண்டிருக்கிறார்.

அடுத்த கட்டத்தில் அண்ணாமலை வீட்டில் எல்லோரும் உட்கார்ந்து இருக்கின்றனர். அப்போது மனோஜ் முத்துவை இனி வீட்டுக்குள்ள விடாதீங்க என்று சொல்கிறார். விஜயாவும் கோபமாக முத்துவை திட்டி கொண்டு இருக்கிறார். அதற்கு அண்ணாமலை முத்துவின் நிலைமைக்கு காரணம் நீதான் உன்னால தான் அவன் இப்படி ஆகிவிட்டான். அம்மா கிட்ட பாசமா வளர்ந்து இருந்தா ஒரு குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியும், ஆனால் நீ அவனை அப்பவே விட்டதால தான் அவன் இப்படி மாறிட்டான்.

அவனால ஏமாற்றத்தை ஏத்துக்க முடியல. அவன் இந்த கல்யாணத்தை நல்லபடியா நடத்தணும்னு ஒவ்வொரு விஷயமும் பார்த்து பார்த்து பண்ணுனான். ஆனால் கடைசியில் அவனுக்கு பெரிய ஏமாற்றம் கிடைச்சிருக்கு. அதனால தான் அவன் இப்படி பண்ணிட்டான் என்று சப்போர்ட் பண்ணி பேசிக் கொண்டிருக்கும்போது முத்து வீட்டிற்கு வந்து அனைவரிடமும் என்ன திட்டுங்க திட்டுங்க என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார். ஆனால் எல்லோரும் முத்துவை திட்டாமல் இருக்கின்றனர். அதற்கு முத்து என் பொண்டாட்டியும் என்ன ஏமாத்திட்டா, நீங்களும் யாரும் என்னை திட்ட மாட்டேங்கறீங்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு நான் என்ன பண்ணட்டும் என்று புலம்பிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+