சிறகடிக்க ஆசை: ஷோரூம்க்கு வந்த பிரச்சனை.. முத்துவிடம் வசமாக சிக்கிய ரோகிணி.. செம சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 பிப்ரவரி 15ஆம் தேதிக்கான எபிசோடில் மனோஜ் ஷோரூமிற்கு பெரிய பிரச்சனை வருகிறது. அதே நேரத்தில் ரோகிணியின் அம்மா லட்சுமி முத்துவிடம் மாட்டுகிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்து மீனாவிற்கு அக்கவுண்ட் ஓபன் பண்ணி செக் புக்கை வாங்கி கொடுக்கிறார். நீ கொடுத்த காசையும் அக்கவுண்ட்ல போட்டுட்டேன் என்று முத்து சொல்கிறார். அதோடு முதல் செக் யாருக்கு கொடுக்கப் போற என்று முத்து கேட்கிறார். அதற்கு மீனா மாமாவுக்கு தான் என்று சொல்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

அண்ணாமலை எனக்கு எதுக்கு நீங்க நல்லா இருந்தா போதும் என்னோட ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும் என்று சொல்கிறார். அடுத்ததாக மீனா ரவியும் ஸ்ருதியும் நமக்கு காசு கொடுத்தாங்க அதனாலதான் இந்த ஆர்டரை நம்மளால் செய்ய முடிந்தது. அதனால அவங்களுக்கு முதல் செக் கொடுத்துடலாம் என்று சொல்கிறார்.

அதற்கு ரவியும் ஸ்ருதியும் இப்ப வேண்டாம் என்று சொல்கிறார்கள். ஆனால் மீனா நமக்கு ஒருத்தங்க கிட்ட கடன் கேட்டதும் கிடைச்சிடுச்சுன்னா அவங்க கேட்குறதுக்கு முன்னாடியே கொடுக்கிறது தான் நல்லது. அப்போதான் உறவு நிலைக்கும் என்று சொல்லி செக் புக்கில் எழுதிக் கொண்டிருக்கிறார். அப்போது ரவியிடம் மனோஜ் டேய் நீ வட்டி போட்டு வாங்குடா என்று சொல்ல ஸ்ருதி நாங்க என்ன பைனான்ஸ் கம்பெனியா நடத்திட்டு இருக்கோம் என்று மனோஜ்க்கு பல்பு கொடுக்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

பிறகு செக் புக்கை மீனா ரவி ஸ்ருதியிடம் கொடுத்து போட்டோ எடுத்து சந்தோஷப்பட்டு கொண்டிருக்க அதை பார்த்து விஜயா கடுப்பாகி போய்விடுகிறார். மறுபக்கத்தில் ரோகிணி ஷோரூம் ஃபைல் பார்த்துக் கொண்டிருக்கிறார். அதில் ஜிஎஸ்டி கட்டாமல் இருப்பதால் பத்து நாளைக்குள் கட்ட வேண்டும் என்று வார்னிங் லெட்டர் இருக்கிறது.

அதை பார்த்து மனோஜை கூப்பிட்டு ரோகினி திட்டுகிறார். எதற்கு இதை கட்டாமல் இருந்த என்று கேட்க மனோஜ் மறந்துட்டேன் என்று அசால்டாக பதில் சொல்கிறார். என்கிட்டயாவது சொல்லி இருக்கலாமே என்று பேசிக் கொண்டிருக்கும்போது ஜிஎஸ்டி ஆபீஸில் இருந்து அதிகாரிகள் வருகிறார்கள்.

Siragadikka aasai serial vijay tv

அவர்கள் நீங்க எதுக்கு வரி பணத்தை இன்னும் கட்டாம இருக்கீங்க என்று கேட்க, மனோஜ் மறந்துட்டோம் என்று சொல்ல, நீங்க படித்தவர் தானே இப்படி பதில் சொல்றீங்க என்று திட்டுகிறார். அதற்கு ரோகிணி மன்னிச்சிடுங்க சார் நான் ஒரு இடத்தில 30 லட்சம் கொடுத்து ஏமாந்துட்டோம் உடனே கட்டிவிடுகிறோம் கொஞ்சம் டைம் கொடுங்க என்று கேட்க, எங்களுக்கு தெரியாது நாங்க கடைக்கு சீல் வைக்க போறோம் என்று ஜிஎஸ்டி ஆபீஸர்ஸ் கறாராக பேசுகிறார்கள்.

பிறகு ரோகிணி அவர்களிடம் கெஞ்சி கேட்க அதற்கு அவர்கள் இப்போதைக்கு மூன்று லட்சம் கொடுங்க அதுவும் மூணு மணி நேரத்திற்குள் கொடுக்கணும் நாங்க போயிட்டு வரதுக்குள் நீங்க ரெடி பண்ணி வச்சிடுங்க இல்லன்னா ஷோரூமை சீல் வைத்து விடுவோம் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்கள்.

மறுபக்கத்தில் அண்ணாமலையை ஸ்கூலுக்கு விட வந்த முத்து அண்ணாமலை இடம் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ரோகிணியின் அம்மா லட்சுமி க்ரிஷை கூட்டிக்கொண்டு வருகிறார். அதை முத்து பார்த்து விடுகிறார். பிறகு க்ரிஷிடம் வந்து நீங்க இங்கதான் இருக்கீங்களா என்று முத்து கேட்க, அதற்கு லட்சுமி ஆமா தம்பி என் பொண்ணு வந்து எங்களை இங்க கூட்டிட்டு வந்துட்டா என்று சொல்ல உங்க பொண்ணு எங்க இருக்கா என்று முத்து கேட்கிறார்.

அதற்கு உண்மையை சொல்லாமல் லட்சுமி மறைக்கிறார். அந்த நேரத்தில் ரோகிணி ஃபோன் செய்கிறார். இதனால் போனை எடுக்காமல் லட்சுமி முத்துவிடம் சமாளித்துக் கொண்டிருக்கிறார். பிறகு கிரிஷுக்கு சாக்லேட் வாங்கிட்டு வரேன் என்று முத்து கிளம்பி போனதும் லட்சுமி ஃபோனை எடுத்து முத்து வந்த விஷயத்தை ரோகிணி இடம் சொல்ல ரோகிணி அதிர்ச்சி ஆகிறார்.

Siragadikka aasai serial vijay tv

எதற்காக இவன் அங்கு வந்தான் என்று திட்டிக்கொண்டு வீட்டில் இருக்கும் நகைகளை எடுத்துக்கொண்டு நான் சொல்ற இடத்துக்கு வந்துரு என்று சொல்லிவிட்டு போனை வைக்கிறார். அடுத்ததாக வித்யாவை பார்ப்பதற்காக முருகன் வருகிறார். அவர் தன்னுடைய நண்பர் பிரியாணி கடை வைத்திருப்பதாகவும் அதனால் நீங்கள் பிரியாணியை டேஸ்ட் பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க என்று பிரியாணியை கொடுக்கிறார்.

சிறகடிக்க ஆசை: முத்து வீட்டுக்கு வந்த நபர்.. உடைந்த ரகசியம்! மாட்டிய ரோகிணி! பரிதாப நிலையில் விஜயா
பிறகு இருவரும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள் அப்போது உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று முருகன் சொன்னதும் எனக்கு உங்களை எதுவும் பத்தி எதுவுமே தெரியாது என்று வித்யா சொல்கிறார். அதற்கு முருகன் நான் என்னை பத்தி உங்களுக்கு தெரிய வைக்க என்ன பண்ணனும் என்று கேட்க, உங்க போனை என்னிடம் கொடுங்க என்று அவருடைய போனை வாங்கி வைத்துக் கொள்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+