சிறகடிக்க ஆசை: முத்து வீட்டுக்கு வந்த நபர்.. உடைந்த ரகசியம்! மாட்டிய ரோகிணி! பரிதாப நிலையில் விஜயா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 பிப்ரவரி பதினொன்றாம் தேதிக்கான எபிசோடில் விஜயா சிந்தாமணியோடு சேர்ந்து செய்த சூழ்ச்சிகள் மீனாவிற்கு தெரியவருகிறது. அதை முத்துவிடம் சொன்னதும் முத்து குடும்பத்தினர் எல்லார் முன்பும் வைத்து விஜயா பற்றிய ரகசியங்களை உடைக்கிறார்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்து சந்தோஷமாக மாலையோடு வீட்டிற்குள் ஓடி வருகிறார். பிறகு வீட்டில் எல்லாரையும் கூப்பிட்டு அவர்கள் முன்பு மீனாவிற்கு மாலை போட எல்லோரும் கைத்தட்டுகின்றனர். அப்போதும் ரவியும் அண்ணாமலையும் என்ன விஷயம் என்று கேட்க, அதற்கு மீனா ஒரு சாதனை படைத்திருக்கா. இன்னைக்கி மண்டபம் வராமலே டெக்ரேசன் ஆர்டரை சிறப்பா செய்து முடித்திருக்கிறாள் என்று சொல்ல எல்லோரும் பாராட்டுகின்றனர்.

Siragadikka aasai serial vijay tv

அப்போது அண்ணாமலை ஏன் மீனாவால் மண்டபத்துக்கு வர முடியாமல் போச்சு என்று கேட்க, அதற்கு முத்து அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் ஆயிடுச்சு. அதனால அம்மாவையும் கவனிச்சுக்கிட்டு வீடியோ கால் மூலமாக டெகரேசன் வேலையும் பார்த்து முடிச்சிட்டா என்று சொன்னதும் அண்ணாமலை விஜயாவிடம் உனக்கு உடம்பு சரியில்லையா? நீ என்கிட்ட சொல்லவே இல்லையே என்று கேட்கிறார்.

அப்போது ரோகிணி உடம்பு சரியில்லைன்னா என்கிட்ட சொல்லி இருக்கலாமே என்று கேட்க, அதற்கு விஜயா இது வழக்கமாக வர வலி தான் என்று சமாளித்து விடுகிறார். பிறகு மீனா முத்துவை கிச்சனுக்கு கூட்டிட்டு போய் அங்க வைத்து உங்க அம்மாவுக்கு நிஜமாலுமே வலி வரல. என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பாமல் இருப்பதற்கு அவங்க போட்ட பிளான்.

Siragadikka aasai serial vijay tv

அவங்களுக்கு எப்படியோ சிந்தாமணியை தெரிஞ்சிருக்கு. அவங்க சொல்லித்தான் இவங்க என்ன வீட்டை விட்டு வெளியே போக முடியாம தடுத்து இருக்காங்க. அவங்க ரெண்டு பேரும் போனில் பேசியதை நான் கேட்டேன் என்று சொன்னதும் முத்து ஹாலுக்கு வந்து நடந்த விஷயத்தை எல்லாரும் முன்பும் சொன்னதும் விஜயா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.

அப்போது அண்ணாமலை வயசுக்கு தகுந்த வேலையை பாரு. அடுத்தவங்க முன்னேறுவதை தடுப்பதற்கு இப்படி எல்லாம் சூழ்ச்சி பண்ணாத. நீ அமைதியா இருக்கறதை பார்த்தாலே உன் மேல தான் தப்பு இருக்குன்னு தெரியுது என்று திட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது முத்து நான் இன்னொரு விஷயத்தையும் சொல்ல போறேன், நான் டிரைவிங் ஸ்கூல் ஆரம்பிக்க போறேன் என சொல்கிறார்.

அதற்கு அண்ணாமலை சந்தோசம். எதாவது ஒரு தொழில் இல்லன்னா இன்னொரு தொழில் வச்சிகிறது நல்லது தான் என்று பாராட்டுகிறார். அப்போது ஒரு போர்டு வைக்கணும்பா என்று முத்து சொன்னதும் அதற்கு ரோகிணி அப்படி வச்சா இது கமர்சியலா ஆகிடும். அப்புறம் கரண்ட் பில் அதிகமாக வரும் என்றெல்லாம் சொல்ல, விஜயா இது என் வீடு இதற்கு நான் சம்மதிக்க மாட்டேன் என்று சொல்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

ஆனால் அண்ணாமலை இது என்னோட வீடும் கூட தான் என்று போர்டு வைப்பதற்கு சம்மதிக்கிறார். பிறகு மீனா முத்துவிடம் நீங்க இந்த விஷயத்தை இப்போது பேசுவீங்கன்னு எதிர்பார்க்கல என்று சொல்ல, இப்பதான் கரெக்ட்டான சமயம். அம்மா மேல ஒரு பழி விழுந்திருக்கு. இந்த சமயத்தில் அவங்க என்ன பேசினாலும் வேலைக்கு ஆகாது அதனால்தான் நான் இப்ப சொல்லி சம்மதம் வாங்கிட்டேன் என்று சொல்கிறார்.

சிறகடிக்க ஆசை மீனாவிற்கு குவியும் பிரபலங்களின் வாழ்த்து! இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் போட்டோஸ்
அதைத் தொடர்ந்து அடுத்த நாள் காலையில் முத்து பரபரப்பாக இருக்கிறார். அப்போது அங்கு வீட்டிற்கு ஒரு பேங்க் ஆபிசர் வருகின்றார். அவர் மீனாவிற்கு அக்கவுண்ட் ஓபன் பண்ணி கொடுக்கிறார். கையில் ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு என எல்லாவற்றையும் பேங்க் ஆபீஸர் கொடுக்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

அதோடு உங்க பிசினஸுக்கு இன்னும் லோன் தேவை என்றால் என்னை கூப்பிடுங்க நான் உங்களுக்கு அரேஞ்ச் பண்ணி தரேன் என்று சொல்கிறார். இதை எல்லாம் பார்த்து விஜயா முகத்தை திருப்பிக் கொண்டு இருக்கிறார். வழக்கம்போல முத்து விஜயாவை நக்கல் செய்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+