சிறகடிக்க ஆசை மீனாவிற்கு குவியும் பிரபலங்களின் வாழ்த்து! இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் போட்டோஸ்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா கேரக்டரில் நடிகை கோமதி பிரியா நடித்து வருகிறார். அவருக்கு இன்று சின்னத்திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். சமூக வலைதளத்தில் கோமதி பிரியாவின் புகைப்படங்கள் அதிகமாக பகிரப்படுகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் தான் டிஆர்பியில் முதல் இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறது. அதனால் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்திருக்கிறார்கள். இந்த சீரியலில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திருப்பம் வந்து கொண்டே இருக்கிறது.

இந்த சீரியலில் ரோகிணி எப்போது மாட்டுவார் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது ஆனால் அதற்கு இப்போ வாய்ப்பே இல்லை என்பது போல தான் கதை மாற்றப்படுகிறது. ஆனாலும் ரோகிணி மாட்டும் போது என்ன நடக்கப்போகிறது என்று தெரிந்து கொள்வதற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் பல சுவாரசியமான காட்சிகளும் வரும் வாரங்களில் வர இருக்கிறது.
டிராபிக் போலீஸ் ஆபீஸர் ஒருவர் புதியதாக என்ட்ரி கொடுத்திருக்கிறார். அவர் முத்து மீனா ஹெல்ப் பண்ணும் பாட்டி தாத்தாவை நடுரோட்டில் தாக்கியதால் முத்து அவர் மீது கோபத்தில் இருக்கிறார். அதே நேரத்தில் தன்னை முத்து கேள்வி கேட்டு விட்டார் என்பதற்காக டிராபிக் போலீஸ் கடும் கோபத்தில் இருக்கிறார். இந்த நிலையில் டிராபிக் போலீஸ் குடும்பத்திற்கு மீனாவின் தங்கை சீதா உதவி செய்கிறார்.

இதனால் அவர்களுக்கு சீதா மீது நல்ல மரியாதை ஏற்படுகிறது. இந்த நிலையில் சீதாவிற்கு இனி டிராபிக் போலீஸ் அருண் தான் ஜோடி என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டிராபிக் போலீஸ் மற்றும் முத்து இடையே அடுத்த வாரம் அல்லது அதற்கு அடுத்த வாரங்களில் பெரிய மோதல் நடக்கும் அப்போது சீதா தான் முத்துவை காப்பாற்றுவார் என்று தெரிகிறது.
இப்படியான நிலையில் இந்த சீரியலில் மீனாவாக நடிக்கும் கோமதி பிரியாவிற்கு இன்று காலையில் இருந்து அதிகமான சின்னத்திரை பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். அதாவது இன்று கோமதி பிரியாவின் பிறந்த நாளாம். அதற்காகத்தான் அவருக்கு அவருடைய புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் விஜய் டிவி பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

சின்னத்திரையில் வெவ்வேறு மொழி நடிகைகள் தமிழ் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மதுரையை சார்ந்த கோமதி பிரியாவிற்கு இந்த சீரியல் பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது. இதற்கு முன்பு விஜய் டிவியில் பாவம் கணேசன் உட்பட சில சீரியல்களில் கோமதி பிரியா நடித்திருக்கிறார்.
ஆனால் அதில் எல்லாம் கிடைக்காத பெயரும் புகழும் சிறகடிக்க ஆசை சீரியலில் தான் கோமதி பிரியாவிற்கு கிடைத்திருக்கிறது. தற்போது பல குடும்பங்களில் கோமதி பிரியாவை அவர்கள் வீட்டு மீனாவாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இன்று அவருடைய பிறந்தநாளுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த ரசிகர்களுக்கும் தன்னுடைய நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்து கோமதி பிரியா ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதோடு நேற்று ரோஜா டே கொண்டாடப்பட்ட போது தன்னுடைய நண்பர்கள் தனக்காக ரோஜா மற்றும் கிப்ட் கொடுத்ததற்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications