சிறகடிக்க ஆசை: ரோகிணி பற்றி விஜயாவுக்கு தெரிந்த அடுத்த உண்மை.. அருண் கையில் ஆதாரம்.. ரசிகர்கள் நினைத்தது நடந்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 மே 15ஆம் தேதிக்கான எபிசோடில் ரோகிணி பற்றிய அடுத்த உண்மையும் விஜயாவுக்கு தெரியவந்திருக்கிறது. இதனால் விஜயா பிரச்சனை செய்கிறார். அதே நேரத்தில் முத்துவுக்கு அவருடைய நண்பர்களால் பிரச்சனை வருகிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் முத்துவும் மீனாவும் இன்ஸ்பெக்டரை பார்த்து அவரிடம் பேசிவிட்டு வெளியே வருகிறார்கள். அப்போது நீ வீட்டுக்கு போ நான் செட்டுக்கு போயிட்டு செல்வத்தை பார்த்து என்ன பண்றதுன்னு பேசிட்டு வரேன் என்று முத்து கிளம்பி போகிறார். மறுபக்கத்தில் மனோஜ் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது விஜயா வந்து பரிமாறிக் கொண்டு நீ இந்த மாதிரி லேட்டா போனா கடையை யார் பாத்துக்குவாங்க என்று மனோஜிடம் போட்டு வாங்குகிறார். அப்போது மனோஜ் ரோகிணி தான் என்று சொல்லிவிடுகிறார்.

Siragadikka aasai serial vijay tv

கோபத்தில் விஜயா

உடனே விஜயா ரோகிணி கடைக்கு வராளா? என்று கேட்டதும், மனோஜ் முழித்துக் கொண்டிருக்கிறார். பிறகு விஜயா கேள்வி மேல் கேள்வி கேட்க, மனோஜ் உண்மைகளை சொல்லிவிடுகிறார். இதனால் ரோகிணியை கூப்பிட்டு நீ எதுக்கு அவன் ஷோருமுக்கு போன? உன்னை போகக்கூடாது என்று சொல்லி இருக்கிறேன். நீ வேலைக்கு போனியா வந்தியானு இருக்கனும், இல்லன்னா கைய காலை ஒடச்சு வீட்டில் உட்கார வைத்துவிடுவேன் என்று ரோகிணி அடிக்க போவது போல மிரட்டுகிறார்.

மனோஜ் உளறிய உண்மை

ரோகிணி நான் கடைக்கு போகல என்று சொன்னதும் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த மாதிரி பேசாத. நீ வாய தொறந்தாலே பொய்தான். ஆனா என் மகன் என்கிட்ட உண்மையை சொல்லிட்டான் என்று ரோகிணியை மிரட்டி விட்டு அங்கிருந்து போகிறார். விஜயா போனதும் ரோகிணி மனோஜை மிரட்டுகிறார். நமக்குள்ள என்ன நடக்கிறது என்று எல்லா விஷயத்தையும் உங்க அம்மா கிட்ட சொல்லிடுவியா என்று திட்டுகிறார்.

மாட்டிக்கொண்ட ரோகிணி

அதற்கு மனோஜ் அம்மா மடக்கி மடக்கி கேள்வி கேட்டாங்க என்னால பொய் சொல்ல முடியல என்று சமாளிக்கிறார். இதனால் ரோகிணி கோபமாகி அங்கிருந்து போகிறார். அதோடு இவனை இப்படியே விடக்கூடாது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் முத்து செட்டுக்கு வந்து நடந்த விஷயத்தை சொன்னதும் அங்கு இருந்தவர்கள் எல்லோரும் நாம சரக்கு அடிக்கலாம் என்று முத்துவை கூட்டிக்கொண்டு போகிறார்கள்.

அருண் வீட்டுக்கு வந்த முத்து

அங்கு எல்லோரும் குடித்துவிட்டு லைசென்ஸ் எப்படி வாங்கணும் என்று எங்களுக்கு தெரியும் வா என்று முத்துவை பாரிலிருந்து கூட்டிக்கொண்டு வருகிறார்கள். மறுபக்கத்தில் சீதா அருண் வீட்டிற்கு வருகிறார். அவருடைய அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அருண் டூட்டியில் இருந்து வருகிறார். பிறகு சீதாவும் அவருடைய அம்மாவும் வெளியே போன நேரத்தில் முத்து அவருடைய நண்பர்களுடன் அந்த வீட்டிற்கு வந்து சேர்கிறார்.

நண்பர்களால் தொல்லை

அவருடைய நண்பர்கள் இதுதான் அந்த போலீஸ்காரர் அருண் வீடு என்று சொன்னதும் முத்து இப்போ எதுக்காக இங்க வந்தீங்க? வாங்க போகலாம் என்று அவர்களிடம் சொல்ல முத்துவின் நண்பர்கள் குடித்துவிட்டு அலப்பறை செய்து கொண்டிருக்கிறார்கள். முத்து தடுத்து பார்த்தும் அவர்கள் நிற்கவில்லை. அந்த நேரத்தில் வீட்டிற்குள் இருந்து வந்த அருண் நீ குடிச்சிட்டு தகராறு பண்ண வீட்டுக்கே வந்துட்டியா என்று அங்கு நடப்பதை எல்லாம் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார்.

வீடியோ எடுத்த அருண்

அப்போது முத்துவின் நண்பர் ஒருவரை அருண் பிடித்து தள்ள அதனால் கோபமான முத்து அருனை அடிக்க போகிறார். பிறகு செல்வம் எல்லாரையும் அங்கிருந்து கூட்டிக்கொண்டு போகிறார். ஆனால் இதையெல்லாம் அருண் வீடியோ எடுத்து வைத்திருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+