சிறகடிக்க ஆசை: முத்துவுக்காக ரோகிணியை அடிக்க பாய்ந்த விஜயா.. எதிர்பார்க்காத மாற்றங்கள்.. ஸ்ருதியால் புது பிரச்சனை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 மே இருபதாம் தேதிக்கான எபிசோடில் முத்துவை போலவே ரோகிணி மீது விஜயாவுக்கும் சந்தேகம் வருகிறது. முத்துவின் கார் ஒயர் கட்டானது ரோகிணியால் தான் இருக்கும் என்று விஜயா ரோகிணியை அடிக்கப் போகிறார். அதே நேரத்தில் எதிர்பார்க்காத பல சம்பவங்கள் நடந்து இருக்கிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் முத்துவின் கார் ஒயர் கட்டாவதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அப்போது நம்ம வீட்டில் இருந்து யாரோ கார் சாவியை எடுத்து இருக்காங்க என்று முத்து ரோகிணி மீது சந்தேகம் இருக்கிறது என சொன்னதும், விஜயா எனக்கும் இவ மேல சந்தேகமாய் இருக்கு, இவ தான் பொய் சொல்லிட்டு அலையிறவ. பொய் சொல்றவங்க என்ன வேணாலும் செய்வாங்க என்று கோபப்பட்டு ரோகிணியை அடிக்கப் போகிறார்.

ஏமாந்த அண்ணாமலை
அப்போது அண்ணாமலை தடுத்து நம்ம வீட்டுல இருக்கிறவங்க யாரும் அப்படி செஞ்சிருக்க மாட்டாங்க. இது வெளியே இருந்து தான் யாரோ இப்படி பண்ணி இருக்காங்க என்று சொல்கிறார். அதைத்தொரடர்ந்து ரெஸ்டாரண்டில் ஸ்ருதி மற்றும் நீத்து இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய ரெஸ்டாரண்ட்டில் அதிகமான லாபம் கிடைத்திருப்பதாக நீத்து சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்.
கோபத்தில் ஸ்ருதி
அதற்கு ஸ்ருதி இதில் ரவிக்கு முக்கிய பங்கு இருக்கிறது, ரவி டேஸ்டா சாப்பாடு செய்வதால் தான் இங்கே நிறைய பேர் வராங்க என்று சொல்ல, அப்படி எல்லாம் இல்ல நான் யூடியூபர்களை வைத்து ப்ரமோஷன் செய்ததால் தான் இது ஒர்க் அவுட் ஆனது என்று நீத்து சொல்லிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் ஸ்ருதி மற்றும் நீத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்போது ரவி இல்லாவிட்டாலும் இந்த இடத்தில் எந்த செஃப் இருந்தாலும் இந்த ஹோட்டல் இப்படித்தான் போகும் என்று நீத்து சொன்னதும் ஸ்ருதி கோபப்பட்டு ரவியை ரிசைன் பண்ணிட்டு வா போகலாம் என்று கூப்பிடுகிறார். ஆனால் ரவி வர முடியாது என்று சொன்னதும் ஸ்ருதி கோவப்பட்டு அங்கிருந்து கிளம்பி போய் விடுகிறார்.
சிட்டியின் பிளான்
மறுபக்கத்தில் வித்யாவின் காதலன் முருகன் ஒரு லட்சம் பணத்தைக் கொண்டு வந்து ரோகிணியிடம் கொடுக்கிறார். பிறகு ரோகிணியை கல்யாணத்துக்கு கண்டிப்பா வரணும் என்று சொல்லிவிட்டு அவர் கிளம்பி போனதும் ரோகிணி அந்த பணத்தை கொண்டு வந்து சிட்டியிடம் கொடுத்துவிட்டு நகையை வாங்குகிறார். நகையை வாங்கி போட்டு அழகு பார்த்து சந்தோஷப்படுகிறார்.
கோபத்தில் விஜயா
அதோடு முத்துவிற்கு வீட்டிலிருந்து யாரோ தான் கார் சாவியை எடுத்துக் கொடுத்து இருக்கணும் என்று சந்தேகம் வந்திருக்கிறது. அதுவும் என் மேல தான் இருக்கு என்று சொல்ல, சிட்டி நான் எந்த சூழ்நிலையிலும் உங்களை மாட்டி விடமாட்டேன் என்று சொல்கிறார். பிறகு ரோகிணி அங்கிருந்து கிளம்பியதும் பிஏ வந்து, நீ சொன்னது போலவே இவ இந்த நகைக்காக ஆசைப்பட்டு பணத்தை கொடுத்துட்டு போறா என்று சிட்டியிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அசிங்கப்படுத்திய விஜயா
மறுபக்கத்தில் விஜயாவும் மனோஜும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது தன்னுடைய ரெஸ்டாரண்டில் வேலை பார்க்கும் ஒரு நபருக்கு கல்யாணம் நடக்கப்போகிறது அதற்கு நானும் ரோகிணியும் வரணும் என்று சொல்லி இருக்கிறான். போயிட்டு வரோம் என்று மனோஜ் சொல்ல, அதற்கு விஜயா இவ கூட நீ போகக்கூடாது என்று திட்டுகிறார்.

ஸ்ருதி செய்த பிரச்சனை
அப்போது விஜயாவிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக ரோகிணி இந்த ஷோரூம் ஓனர் எப்போதுமே அத்தை தான். அவங்க என்ன முடிவு எடுக்குறாங்களோ அதுதான் சரி என்று சொல்கிறார். ஆனாலும் விஜயா வழக்கம் போல ரோகிணியை திட்டி அவமானப்படுத்துகிறார். அதை பார்த்து முத்து கிண்டல் செய்து கொண்டிருக்கிறார். பிறகு அடுத்த நாள் ரவி ரெஸ்டாரண்டுக்கு கிளம்பி கொண்டிருக்கும்போது ஸ்ருதி நான் அவ்வளவு சொல்லியும் நீ அந்த ரெஸ்டாரண்டுக்கு மீண்டும் வேலைக்கு போகக்கூடாது என்று பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications