சிறகடிக்க ஆசை: நீங்கதான் என் உசுரு! முத்து சொன்ன வார்த்தை, விஜயா செய்த செயல்! அதிர்ச்சியில் குடும்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூலை 24ஆம் தேதிக்கான எபிசோடில் விஜயாவிடம் டான்ஸ் கற்றுக் கொள்ளும் ரதியின் குடும்பத்தினர் விஜயா வீட்டிற்கு வந்து விஜயாவை மிரட்டுகின்றனர். அப்போது முத்து மற்றும் மீனா விஜயாவுக்கு சப்போர்ட் செய்து கொண்டிருக்கின்றனர். அதை பார்த்து விஜயா ஃபீல் பண்ணுகிறார். பிறகு விஜயா செய்த செயலை பார்த்து குடும்பத்தினர் எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
இன்றைய காட்சி, பரபரப்பான திருப்பங்களுடன் நகர்கிறது. ரோகிணி அடித்ததை கிரிஷ் மறைக்க, மீனாவிற்கு சந்தேகம் வலுக்கிறது. கிரிஷுக்கு வீட்டில் இருக்க பிடிக்கவில்லை என ரோகிணி கூறியதையும் மீனா யோசிக்கிறார். அது பற்றி மீீனா கேட்கும் போது கிரிஷ் நான் அப்படி சொல்லல பாட்டிக்கு சரி ஆகுற வரைக்கும் இங்கே தான் இருப்பேன்னு சொன்னதாக சொன்னதும் மீனாக்கு சந்தேகம் வருகிறது.

முத்து செய்த செயல்
மறுநாள் காலையில், கிரிஷ் பாட்டியிடம் நடனம் கற்றுத் தர கேட்கிறார். விஜயா மறுக்கிறார். குடும்பத்தினர் முன்னிலையில், நடனம் ஆடத் தெரியும் எனக் கிரிஷ் கூற, தான் பல போட்டிகளில் பரிசு பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கிறார். அதனால் முத்து பாட்டு போட, கிரிஷ் மற்றும் ரவி, ஸ்ருதி நடனமாடுகின்றனர். குடும்பத்தினர் மகிழ்ச்சியாக பார்க்க, விஜயா கோபப்படுகிறார். இவர்கள் நடனமாடிக் கொண்டிருக்கும்போது, சிலர் கூட்டமாக வந்து விஜயாவைப் பற்றி கோபமாக பேசுகிறார்கள். முத்து அவர்களிடம் கோபப்படுகிறார்.
காப்பாற்றிய மீனா
விஜயாவின் டான்ஸ் கிளாஸ் என் பொண்ணு வாழ்க்கையை கெடுத்துடுச்சு என்று ரதியின் அம்மா குற்றம் சாட்டுகிறார். ஆத்திரமடைந்த அந்த பெண்மணி விஜயாவை அடிக்கப் போக, மீனா தடுத்து நிறுத்துகிறார். என் அத்தை மீது கை வைத்தால் கையை உடைத்துவிடுவேன் என எச்சரிக்கிறார். முத்துவும் நியாயமாக பேசுமாறு அறிவுறுத்துகிறார்.
பிரச்சனை செய்த ரதி குடும்பம்
ரதியின் குடும்பத்தினர் நியாயம் கேட்டு போராட, முத்து அவர்களை அமைதிப்படுத்துகிறார். மீனா ரதியிடம் கோபமாக பேசுகிறார். எல்லாத்துக்கும் நீதான் காரணம். எப்படி அத்தை பொறுப்பாக முடியும்? என்ன நடந்தது என்று வாயைத் திறந்து பேசு ரதி அமைதியாக இருக்காதே என்று கேட்கிறார். முத்து மீனாவை சமாதானப்படுத்தி, இப்பிரச்சனையில் தான் தலையிட்டு தீர்த்து வைப்பதாக உறுதியளிக்கிறார். மேலும், மாப்பிள்ளை வீட்டாரிடம் பேசி சமாதானம் செய்வதாக கூறுகிறார். பின்னர், மீனாவும் விஜயாவை சமாதானம் செய்கிறாள். பயத்தில் விஜயா அறையில் ஒடுங்கி உட்காருகிறார்.
முத்து சொன்ன வார்த்தை
முத்து, மீனா அப்பவே சொன்னா அந்த பசங்க கட்டி பிடிச்சுட்டு நின்னுட்டு இருந்தாங்க. அப்பவே கதவை பூட்ட சொன்னேன். யாரும் கேட்கல என்கிறார். விஜயா, மனோஜ் பார்த்துக்கொள்வான் என கூறுகிறார். மனோஜ் வக்கீலுக்கு ஏற்பாடு செய்வதாக சொல்கிறார். ஆனால், வக்கீல் வேண்டாம் என முத்து சொல்ல, முத்து எனக்கு நீங்க தன் உசுரு உங்களுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன் இந்த பிரச்சனையில் நானே தீர்த்து வைக்கிறேன் என்று சொல்ல விஜயா அதிர்ச்சியாகி முத்துவை பார்த்துக் கொண்டே இருக்க மொத்த குடும்பத்தினரும் என்னாச்சு என்று விஜயாவிடம் கேட்க விஜயா பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications