சிறகடிக்க ஆசை: விஜயாவிற்கு சவால் விட்ட ரோகிணி.. மனோஜ் எடுத்த முடிவு, அண்ணாமலை கொடுத்த அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 மார்ச் 26ம் தேதிக்கான எபிசோடில் ரோகிணியின் கழுத்தை பிடித்து விஜயா வெளியே தள்ளுகிறார். பிறகு ரோகிணி இந்த விஷயத்தை எப்படி சமாளிக்க என்று முக்கிய முடிவு எடுத்திருப்பதாக கூறுகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் விஜயா கோபப்பட்டு ரோகிணியை வெளியே போக சொல்ல அண்ணாமலை இப்ப எதுக்கு இவ்வளவு கோவப்படுற? அவ என்னமோ சொல்ல வரா கேட்போம் என்று சொல்ல, விஜயா இதுக்கு மேல அவ எதுவும் சொல்லக்கூடாது நீங்க அமைதியா இருங்க என்று எல்லாரையும் அதட்டி விட்டு ரோகிணியை வெளியே போக சொல்கிறார்.

அண்ணாமலை அட்வைஸ்
ஆனால் ரோகிணி எதையோ சொல்ல வருகிறார் நான் கடைசி வரைக்கும் விஜயா அதைக் கேட்காமல் அவரை வெளியே போவதற்கு முன்பு ரோகிணி மனோஜிடம் நீ போக வேண்டாம் என்ற சொல்லு மனோஜ் என்று சொல்ல, ரோகிணி கையை தட்டி விட்டு இனி அவன் கூட உனக்கு என்னடி பேச்சு என்று விஜயா திட்டி விடுகிறார். அண்ணாமலை இப்ப நீ செய்தது தப்பு அவ என்ன சொல்ல வரான்னு கேக்கணும் என்று சொல்ல அதற்கு அவள் செஞ்சது நம்பிக்கை துரோகம் அவ எவனையோ கூட்டிட்டு வந்து நடிக்க வைத்து ஏமாற்றி இருக்கா அவளுக்கு நான் பூ போட்டு கும்பிடணுமா என்று கோபப்பட்டு ரோகிணியை வீட்டை விட்டு வெளியே தள்ளிவிட்டு கதவை பூட்டி கொள்கிறார்.
ரோகிணியை துரத்திய விஜயா
அதற்கு அண்ணாமலை நீ போய் ரோகிணியை கூப்பிட்டு வாடா என்று மனோஜிடம் சொல்ல, மனோஜ் விஜயாவை பார்த்துக்கொண்டு அமைதியாக நிற்கிறார். அண்ணாமலை வற்புறுத்தி சொல்ல விஜயா ரூமுக்கு போக சொல்கிறார். உடனே மனோஜ் ரூமுக்கு போய் விடுகிறார். ரோகிணி வீட்டை விட்டு வெளியே வந்து வித்யா வீட்டிற்கு அழுது கொண்டே வருகிறார்.
உண்மை உடைந்தது
அப்போது ரோகிணி வந்த கோலத்தை பார்த்து வித்யா என்ன ஆச்சு என்று கேட்க, அதற்கு ரோகிணி பிரவுன் மணி வந்து வீட்டில் எல்லா விஷயத்தையும் சொன்னதைப் பற்றி சொல்ல நீ எதை மறக்கணும்னு நினைச்சியோ அது தெரிஞ்சிருச்சு அதுவும் இல்லாம உங்க வீட்ல இருக்கிறவங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்க அவங்களை எவ்வளவு நாள் ஏமாத்த முடியும் என்று வித்யாவும் சொல்கிறார்.
ரோகிணியின் கோபம்
அதோடு ஒரு பத்திரிக்கையை எடுத்துக்கொண்டு வந்து இது தான் போன கல்யாண வீடு பத்திரிக்கையா பாரு என்று சொல்ல, உனக்கு எப்படி இந்த பத்திரிகை கிடைச்சதுன்னு கேட்கிறார். அதற்கு பிரவுன் மணி வந்து என்னோட தங்கச்சி பையனுக்கு கல்யாணம்னு சொல்லி ரோகிணி பாப்பாவும் நீயும் வந்திருதாதேன்னு சொல்லி கொடுத்துட்டு போனாரு உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன் என்று சொன்னதும் ரோகிணி கோபப்படுகிறார்.
வித்யா சொன்ன அட்வைஸ்
நீ மட்டும் இதை முன்னாடியே சொல்லி இருந்தா கண்டிப்பா நான் இந்த பிரச்சனையை சரி பண்ணி இருப்பேன் என்று சொல்ல, அதற்கு வித்யா மறந்துட்டேன் என்று சொல்கிறார். அது மட்டும் இல்லாம இந்த விஷயம் தெரிஞ்சு இருந்தா நீ போய் இருக்க மாட்ட ஆனா உன் குடும்பம் கல்யாணத்துக்கு போயிருக்கும். அதுபோல பிரவுன் மணி அவரோட சொந்த தங்கச்சி பையன் கல்யாணத்திற்கு போகாம இருக்க மாட்டாரு என்று சொல்ல, ஆனால் தெரிந்திருந்தால் நான் ஏதாவது பண்ணி இருப்பேன் என்று ரோகிணி மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
ரோகிணியின் வைராக்கியம்
உன்னை வெளியே அனுப்பும்போது மனோஜ் எதுவும் சொல்லலையா என்று வித்யா கேட்க எதுவும் சொல்லாம நின்னுட்டு இருந்தான் என்று சொல்லிவிட்டு சிறிது நேரம் வேறு யோசித்து விட்டு இனி நான் அழ போறது கிடையாது, கஷ்டப்பட மாட்டேன் நான் தேர்ந்தெடுத்துகிட்ட வாழ்க்கை கண்டிப்பாக இதை நான் சரி பண்ணுவேன் என்று தலைமுடியை வாரி கொண்டை போட்டு தைரியமாக பேசுகிறார்.
ரோகிணி எடுத்த முடிவு
என் மாமியார் இப்படி தான் பேசுவாங்க. ஆனா அவங்க மாமனார் ரொம்ப நல்லவரு அவர் குடும்பம் ஒன்னா இருக்கணும்னு தான் நினைப்பாரு. நான் வீட்டுக்குள்ள போயிட்டா மட்டும் போதும் மனோஜை என் வழிக்கு கொண்டு வந்துருவேன் என்று சொல்ல, உன் மாமியார் இப்போ நீ பணக்காரி இல்லைன்னு தெரிஞ்சு உன் மேல கோபப்படுவாங்க என்று வித்யா கேட்க, இந்த பிரச்சனை எல்லாம் நான் வீட்டுக்குள் போனா சரி பண்ணிடுவேன் என்று ரோகிணி சொல்லிக் கொண்டிருக்கிறார்.
மனோஜ் சொன்ன முடிவு
மறுபக்கத்தில் முத்துவும் மீனாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது நம்ம வீடு இப்படி மாறிடுச்சு. இந்த ரோகிணி இவ்வளவு பெரிய உண்மையை மறைச்சிருக்கு ஆனாலும் அவங்கள வீட்டை விட்டு வெளியே அனுப்புனது தப்பு என்று மீனாவும் முத்துவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மனோஜ் அப்போது அங்கு வந்து தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்க அதை பார்த்து முத்து மனோஜ்க்கு அட்வைஸ் செய்கிறார். ஆனால் நான் ரோகிணியை கூப்பிட மாட்டேன் அவள் என்னை ஏமாத்திட்டா என்று சொல்ல, அதற்கு அண்ணாமலையும் மனோஜை திட்டி கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications