சிறகடிக்க ஆசை: சீதாக்காக முத்துவிடம் நறுக்குன்னு கேட்ட சத்யா.. மீனா பிடித்த பாயிண்ட்.. அடுத்த பஞ்சாயத்து வந்தாச்சு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 மே 31ஆம் தேதி எபிசோடில் சீதாவின் காதலுக்காக சத்யா முக்கிய முடிவெடுத்திருக்கிறார். அதாவது முத்துவிடம் சத்யா சீதாவிற்காக பேசுகிறார். அதைத்தொடர்ந்து முத்துவிடம் மீனா சில கேள்விகளை கேட்க முத்து கோபப்படுகிறார். கடைசியில் என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் முத்து தன்னுடைய நண்பர்களுடன் கார் செட்டில் பேசிக் கொண்டிருக்கிறார். அங்கு மீனா வருகிறார். மீனாவை பார்த்ததும் என்ன விஷயம் என்று விசாரிக்க, சத்யா தான் இங்க வரணும் என்று மெசேஜ் பண்ணுனான் என்று சொல்கிறார். அந்த நேரத்தில் சத்யாவும் அங்கு வர, என்ன விஷயம் என்று முத்து விசாரித்ததும் சீதா பற்றி பேசுவதற்காக தான் நாங்க வந்தோம் என்று சத்யா சொல்கிறார்.

கோபத்தில் முத்து
ஏற்கனவே சீதா வந்து பேசிட்டு போயிட்டா நான் அவகிட்ட அருணுக்கு கல்யாணத்திற்கு சம்மதிக்க மாட்டேன் என்று சொல்லிட்டேன், அவளும் புரிஞ்சிட்டா என்று முத்து சொல்ல, சத்யா சீதாவிற்காக பேசுகிறார். நீங்க சொன்னதை கேட்டு சீதா அருண் வீட்டிற்கு சென்று இனி என்னை நினைக்க வேண்டாம், நான் உங்களை கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டு வந்திருக்கிறா.. ஆனால் இதுவரைக்கும் சீதா அக்கா பல கஷ்டப்பட்டு இருக்கிறா. இந்த வீட்டுக்காக மீனா அக்கா போலவே பல தியாகம் பண்ணி இருக்கிறா. அவளுக்கு நல்லது எது? கெட்டது எது? என்று நல்லாவே தெரியும்.
சத்யா சொன்ன வார்த்தை
அதனால் சீதா அக்கா அருண் விஷயத்தில் தப்பான முடிவு எடுத்திருக்க மாட்டா. உங்களுக்கு அவரை தப்பா தெரியலாம். ஆனால் அக்கா அவர் நல்லவர் என்று நம்புறா. அவரை நம்புனதனாலதான் அவர் மீது அக்காவுக்கு காதல் வந்திருக்கிறது. இப்போ நீங்க வேண்டாம்னு சொல்றதுனால அவ கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டா. அவ உங்களுக்காக இவ்வளவு பெரிய முடிவு எடுத்திருக்கும் போது நீங்க அக்காவுக்காக என்ன பண்ண போறீங்க? என்று சத்யா கேட்டதும் சீதா என்ன புரிஞ்சிருக்கா, அதனால நான் சொல்றது சரின்னு அவளுக்கு தெரியுது. ஆனா உங்களுக்கு நான் சொல்றது புரியல.

முத்துவின் முடிவு
என்ன இருந்தாலும் அந்த அருணுக்கு சீதாவை நான் கல்யாணம் பண்ண சம்மதிக்க மாட்டேன் என்று உறுதியாக சொல்கிறார். இதனால் சத்யாவும் மீனாவும் அங்கிருந்து கிளம்புகின்றனர். அடுத்த கட்டத்தில் ரவியும் ஸ்ருதியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ரெஸ்டாரண்ட் தொடங்குவது பற்றி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. மறுபக்கத்தில் முத்து சாப்பிட்டு கொண்டு இருக்கிறார். அந்த நேரத்தில் மீனா சீதாவின் கல்யாணத்தைப் பற்றி பேச, அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் வருகிறது. அதனால் ரவி சோகமாக முத்து சாப்பிடும் இடத்திற்கு வந்ததும் என்ன நடந்தது என்று முத்து விசாரிக்கிறார்.
ரோகிணியின் நாடகம்
அப்போது ரெஸ்டாரண்ட் தொடங்குவது பற்றிய பிரச்சினையை சொல்ல, நீ சொல்றதெல்லாம் சரி உனக்காக பல குரல் கிட்ட நான் பேசுறேன் என்று முத்து சொல்கிறார். பிறகு ரவி போனதும் உங்க தம்பிக்கு ஒரு நியாயம்? என் தங்கச்சிக்கு ஒரு நியாயமா? அவளுக்கு பிடிச்ச வாழ்க்கையை அவ வாழக்கூடாதா? என்று மீனா கேட்க, அதனால் கோபப்பட்ட முத்து அங்கிருந்து போய் விடுகிறார். அடுத்ததாக ரோகிணி பெட்ரூமில் இருக்கும்போது அந்தப் பக்கமாக மனோஜ் வருகிறார். மனோஜ் வருவதை பார்த்ததும் தன் நண்பர் மகேஷிடம் பேசுவதாக ரோகிணி நடித்துக் கொண்டு இருக்க, அதை பார்த்து மனோஜ் கோபப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications