சிறகடிக்க ஆசை: முத்து பற்றி அண்ணாமலை சொன்ன ரகசியம்! தலைகுனிந்த விஜயா.. அசிங்கப்படுத்திய ஸ்ருதி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 மார்ச் மூன்றாம் தேதிக்கான எபிசோடில் கண்ணில் அடிபட்டிருந்த மனோஜ்க்கு மீண்டும் பார்வை வந்திருக்கிறது. அதே நேரத்தில் முத்து பற்றி அண்ணாமலை சொன்ன வார்த்தையை கேட்டு விஜய் தலை குனிந்து இருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் விஜயா ஹாஸ்பிடல் போவதற்காக ரெடியாகி வருகிறார். அப்போது மீனாவை காணவில்லை என்றதும் மீனா எங்க போனா? டிபன் செய்யலையா? எல்லாத்தையும் விட்டுட்டு பூ கட்ற வேலைக்கு மீண்டும் போயிட்டாளா? இந்த வீட்டில் அவா தான் பொறுப்பா இருக்கிறா என்று சொல்லுவீங்க அவங்களோட பொறுப்பை பார்த்தீர்களா?

திட்டும் விஜயா
என் பையன் ஹாஸ்பிடலில் அடிப்பட்டு கிடக்கிறான், அப்போ கூட அவளுக்கும் அவ புருஷனுக்கும் அவங்க வேலை தான் முக்கியமா இருக்கு. இப்போ என் மகன் நிலைமையை சொல்லி அவங்க அம்மா வீட்டில் போய் சிரிக்கிறதுக்காக மீனா அங்க போயிட்டாளா என்று திட்டிக்கொண்டே இருக்கிறார். அப்போது அண்ணாமலை நீ பேசி முடிச்சிட்டியா இன்னும் இருக்கா என்று கேட்டு விஜயாவை கையை பிடித்து இழுத்து வந்து டைனிங் டேபிளில் வைக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தை பார்க்க சொல்கிறார்.
அண்ணாமலை பதிலடி
அங்கே டிபன் செய்து வைத்திருப்பதை பார்த்து விஜயா அதிர்ச்சி அடைகிறார். முதலில் பேசுவதற்கு முன்னாடி யோசித்து பேசு உன் பாட்டுக்கு தவளை கத்துற மாதிரி கத்திக்கிட்டு இருக்காத என்று திட்டிக் கொண்டிருக்க, ரவி நீங்க பேசுவதற்கு முன்னாடி முதலில் எங்கள பேச விடுங்க நீங்களே பேசிட்டு இருக்கீங்க மீனா அண்ணி அவங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடு எடுத்துட்டு ஹாஸ்பிடலுக்கு போய் இருக்காங்க என்று சொன்னதும் விஜயாவின் முகம் மாறுகிறது.

அண்ணாமலை கேட்ட கேள்வி
அதற்கு அண்ணாமலை இது மட்டுமல்ல மனோஜ்க்கு ஹாஸ்பிடல் செலவு முத்து தான் செலவு பண்ணி இருக்கான். அது உனக்கு தெரியுமா? என்று விஜயாவை திட்டுகிறார். அவங்க கரெக்டா தான் இருக்காங்க நீ தான் அவங்கள புரிஞ்சுக்கல என்று திட்டிக் கொண்டு இருக்கிறார். அப்போது ஸ்ருதி இவங்களுக்கு ஒண்ணுமே தெரியாமல் படபடன்னு பேசுவாங்க நீங்க சூப்பர் அங்கிள் என்று விஜயாவை அவமானப்படுத்தி விட்டுப் போகிறார்.
மனோஜ் ரோகிணி காதல்
மறுபக்கத்தில் மனோஜ்க்கு ரோகிணி ஜூஸ் கொடுத்துக்கொண்டிருக்க முத்துவும் மீனாவும் சாப்பாடு எடுத்துக்கொண்டு வருகிறார்கள். அப்போது ரோகிணி எனக்கு இப்ப சாப்பாடு வேண்டாம் கட்டு பிரிச்சதுக்கு அப்புறம் நான் சாப்பிடுகிறேன் என்று மனோஜ்க்கு மட்டும் சாப்பாடு ஊட்டுகிறார். அடுத்ததாக எல்லோரும் வெளியே இருக்கிறார்கள்.
ஏமாந்த விஜயா
அப்போது டாக்டர் மனோஜ்க்கு கட்டு பிரிக்க போறோம் என்று சொல்கிறார்கள். உடனே விஜயா மனோஜ்க்கு கட்டுபிரிக்கும் போது அவன் என்னதான் பாக்கணும்னு ஆசைப்படுவான் என்று சொல்ல அதற்கு நர்ஸ் இல்ல அவருடைய மனைவி ரோகிணியை தான் பாக்கணும் என்று சொல்லுறாரு என்று சொல்ல விஜயா ஏமாற்றம் அடைகிறார்.

பார்வை மீண்டும் வந்துவிட்டது
பிறகு ரோகிணி மனோஜ் முன்பு நிக்குறார் அப்போது கண் கட்டு அவிழ்க்கப்படுகிறது. பிறகு அவருக்கு பார்வை நன்றாக தெரிகிறது இதனால் ரோகிணி வெளியே வந்து முதலில் அழுது கொண்டிருக்கிறார். பிறகு மனோஜ்க்கு நன்றாக கண் தெரிகிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது முத்து நான் ரொம்ப பயந்துட்டேன். இவ்வளவு நேரமும் என் பயத்தை வெளியே காட்டாமலேயே நடிச்சிட்டு இருந்தேன் இப்பதான் எனக்கு சந்தோஷமா இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
மீனாவின் சந்தேகம்
அப்போது மீனா எதையோ யோசித்துக் கொண்டு தனியாக வருகிறார். முத்து பின்னாடி வருகிறார் முத்துவிடம் மீனா, ரோகிணி ரொம்ப பாவம். உங்க அண்ணன் ஏமாத்துறாரு. ஒன்னு கவனிச்சீங்களா க்ரிஷ்க்கு அடிபட்டது போல உங்க அண்ணனுக்கும் அடிபட்டு இருக்கு என்று சொல்ல அதற்கு முத்து உனக்கு மனோஜ் மேல டவுட்டு தான் இருக்கு இன்னும் கன்ஃபார்ம் ஆகல அதனால நீயா எதையும் யோசிச்சிட்டு இருக்காத என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications