சிறகடிக்க ஆசை: சிட்டியால் முத்து உயிருக்கு ஆபத்து.. போன் செய்த பிஏ.. விபரீத முடிவெடுத்த ரோகிணி, பரபரப்பான சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 மே 9ஆம் தேதிக்கான எபிசோடில் ரோகிணியின் பழைய பிஏ ரோகிணிக்கு போன் செய்து மிரட்டுகிறார். அதே நேரத்தில் முத்துவின் உயிருக்கு சிட்டியால் ஆபத்து வருகிறது. ரோகிணி அவரை காப்பாற்றிக் கொள்வதற்காக யாரும் எதிர்பார்க்காத செயலை செய்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜை ஏமாற்றிய கதிரை போலீசில் பிடித்துக் கொடுத்தது குறித்து வீட்டில் வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அப்போது ரோகிணி போலீஸ் கிட்ட சொல்லாம எங்க கிட்ட மட்டும் சொல்லி இருந்தா கதிரிடம் எப்படியாவது பேசி பணத்தை வாங்கி இருக்கலாம் என்று சொல்ல, அண்ணாமலை முத்து செஞ்சது தான் கரெக்ட் என்று சொல்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

மனோஜ்க்கு பதிலடி

அதற்கு மனோஜ் இவன் மட்டும் பொண்டாட்டி பணம் தொலைச்சதுக்கு போலீஸ்கிட்டையா சொன்னான்? அந்த பொம்பள வீட்ல போய் எடுத்துட்டு வந்தாங்களே என்று கேட்க, அதற்கு முத்து நாங்க போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து இருந்தா அந்த பணத்தை அவங்க ஈஸியா மறைச்சு வச்சிருப்பாங்க. அதுவும் இல்லாம பணம் அங்க தான் இருக்குன்னு எங்களுக்கு தெரிஞ்சு போச்சு. அதனால நாங்க எடுத்துட்டு வந்தோம். ஆனா உனக்கு பணம் எங்க இருக்குன்னு தெரியாது.

போனில் மிரட்டல்

நாங்க உனக்காக அந்த கதிரை பிடிச்சு கொடுத்தோம் பாரு எங்களுக்கு இதுவும் தேவைதான் இதுக்கு மேலயும் தேவைதான் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது, ரோகிணிக்கு போன் வர அவர் போனை எடுத்துக் கொண்டு ரூமுக்கு வந்து விடுகிறார். புது நம்பரில் இருந்து போன் வந்ததும் அது யார் என்று அட்டென்ட் பண்ணும் போது பிஏ சிரிக்கிறார். என்ன கல்யாணி என்ன அடிச்சு காலி பண்றதுக்காக ஆளை ரெடி பண்ணி அனுப்பிட்டு இப்ப ஒன்னும் தெரியாத மாதிரி நீ இருக்கியா? எனக்கு பணம் வேண்டும் என்று மிரட்ட, என்கிட்ட இப்போ எந்த பணமும் இல்லை நானே பிரச்சனை இல்ல மாட்டியிருக்கிறேன் என்று ரோகிணி சமாளிக்கிறார்.

போன் செய்த பிஏ

ஆனால் நீ இப்படித்தான் ஒவ்வொரு முறையும் சொல்லுவா எனக்கு காசு சரியா கொடுத்துடுவ, கொடுக்கலைன்னா என்ன நடக்கும்னு தெரியுமா என்று மிரட்டி விட்டு போனை வைக்கிறார். அப்போது சிட்டி பக்கத்தில் இருந்து என்னை விட நீ நல்ல வில்லத்தனம் பண்ணுற என்று பாராட்டுகிறார். அந்த நேரத்தில் ரோகிணி சிறிது நேரம் யோசித்து விட்டு சிட்டிக்கு போன் பண்ணுகிறார். ரோகிணி போனை பார்த்ததும் சிட்டி எங்க தொட்டா எங்க ஷாக் அடிக்கும் என்பது கரெக்டா தெரிஞ்சு வச்சிருக்க, நீ மிரட்டியதும் போண் வருது பாரு என்று சிட்டி போனை எடுத்து பேசுகிறார்.

மிரட்டும் சிட்டி

அப்போது ரோகிணி பிஏ பணம் கேட்டு மிரட்டும் விஷயத்தை சொல்ல அதற்கு சிட்டி நான் தான் சொன்ன இல்ல அவன் திரும்ப வந்துட்டான்னு, அவனை நான் பார்த்துக்கிறேன் ஆனா எனக்கு நீங்க ஒரு ஹெல்ப் பண்ணனும். முத்து கார் சாவி எங்களுக்கு கால் மணி நேரம் வேணும் அப்புறம் நாங்க திருப்பி கொடுத்துவிடுகிறோம் என்று சொன்னதும் எதுக்காக என்று ரோகிணி கேட்க, அது உங்களுக்கு தேவையில்லாத விஷயம் என்று சொல்லிவிடுகிறார்.

சிட்டி செய்த செயல்

வேறு வழி இல்லாமல் ரோகிணியும் சரி என்று சம்மதித்து விடுகிறார். பிறகு இரவு எல்லோரும் தூங்கிய பிறகு யாருக்கும் தெரியாமல் ரோகிணி முத்துவின் கார் சாவியை எடுத்து ரோட்டில் நின்று கொண்டிருக்கும் சிட்டியிடம் தூக்கி வீச, அவர் சரியாக அதை பிடித்து முன்பக்கம் திறந்து எதையோ செய்கிறார். பிறகு நாளையிலிருந்து அவன் கதை முடிஞ்சுரும் என்று சொல்லி ரோகிணியிடம் கார் சாவி தூக்கி போட அவர் பிடித்துக் கொண்டு அந்த சாவியை இருந்த இடத்திலே மாட்டப் போகிறார்.

ரோகிணி செய்த செயல்

அப்போது விஜயா வந்ததும் ஒளிந்து கொள்கிறார். பிறகு யார் கண்ணிலும் படாமல் சாவியை அதே இடத்தில் வைத்துவிட்டு ரூமுக்கு வரும்போது மனோஜ் எங்க போயிட்டு வர என்று கேட்க, தண்ணீர் குடிச்சிட்டு வரேன்னு சமாளிக்கிறார். அடுத்த நாள் காலையில் முத்து வேலைக்கு கிளம்பி கொண்டிருக்கிறார். அப்போது அண்ணாமலை கொஞ்சம் தன்னுடைய பழைய துணிகளை எடுத்துட்டு வந்து இதை ஆசிரமத்திற்கு கொடுக்கணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

திருந்தாத மனோஜ்

அந்த நேரத்தில் ஸ்ருதியும், ரவியும் வந்து அவர்களும் தங்களுடைய டிரஸை கொடுக்கிறோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல மீனா என்னுடைய டிரஸ்ஸை எடுத்துட்டு வரேன் என்று சொல்ல, வழக்கம் போல மனோஜ் இதிலும் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+