விஜயாவுக்கு ஆப்பு வைக்க வந்த “நபர்”.. ரோகினியால் குடும்பத்தில் குழப்பம்.. எதிர்பாராத திருப்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜனவரி 18ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது. அதில் விஜயா கொடுக்கும் தொல்லையால் ரோகிணி புது பிரச்சனையில் மாட்டி இருக்கிறார். ஏற்கனவே பணக்கஷ்டத்தில் இருக்கும் ரோகிணி விஜயாவால் புதியதாக கடன் வாங்க அது மீனாவின் தம்பிக்கு தெரிய வந்திருக்கிறது. இதே நேரத்தில் இனி இந்த சீரியலில் யார் மாட்டப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து இருக்கிறது.

ஒரு பக்கத்தில் ரோகினி தனக்கு தாய் மாமாவாக நடிக்க வேண்டும் என்று கறிக்கடைக்காரர் ஒருவரை செட் அப் செய்து வைத்திருக்கிறார். அதே நேரத்தில் மீனாவின் தம்பி சிட்டியோடு வட்டிக்கு பணம் கொடுக்கும் பிசினஸ் செய்து வருவது தெரியாமல் வீட்டை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இன்று என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

siragadikka aasai serial January 18th episode Confusion in the family by Rohini

அந்த வகையில் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் விஜயா ரோகினி இடம் உங்க அப்பாவை வர சொல்லுமா இல்லன்னா உங்க மாமாவையாவது வந்து பார்த்துட்டு போக சொல்லு அப்பதான் உனக்கு இங்கே ஒரு மரியாதை இருக்கும். நம்ம பொங்கலுக்கு கிராமத்துக்கு போறதுக்கு முன்னாடி அவங்கள வர சொல்லு என்று சொல்கிறார். இதற்கு ரோகிணி என்ன செய்வது என்று தெரியாமல் வித்யாவிடம் இது பற்றி புலம்பி கொண்டு இருக்கிறார்.

அப்போது வித்யா, ரோகிணியை ஒரு கறிக்கடைக்கு கூட்டிட்டு போகிறார். அந்த கறிக்கடைக்காரர் ட்ராமாக்களில் நடிப்பவர் என்பதால் அவரை வைத்து ரோகினியின் மாமாவாக நடிக்க வைத்து விடலாம் என்று பேசுகிறார். வித்யா அவரை கூப்பிட்டு கமல் மணிரத்தினம் படத்தில் நடிக்கும் வாய்ப்புக்காக அவங்களிடம் டீடைல் அனுப்பி வச்சிருக்கேன்.

siragadikka aasai serial January 18th episode Confusion in the family by Rohini

அதுக்கு முன்னாடி நீங்க ஒரு வேலை பண்ணனும் என்று சொல்லி ரோகிணிக்கு தாய் மாமாவாக நடிக்க வேண்டும் என்ற விஷயத்தை சொல்ல அதற்கு அவர் நான் அப்படியெல்லாம் பொய் சொல்லி நடிக்க மாட்டேன். என்னால பித்தலாட்டம் எல்லாம் பண்ண முடியாது. நான் ஒரு நல்ல நடிகன் என்று மறுக்கிறார். அதற்கு வித்யா அப்படின்னா கமல்ஹாசன் பட வாய்ப்பு உங்களுக்கு கிடைக்காது பரவாயில்லையா? என்று மிரட்ட அதற்கு வேறு வழி இல்லாமல் கறிக்கடைக்காரர் பட வாய்ப்புக்காக நடிக்க ஒப்புக்கொள்கிறார்.

அடுத்த கட்டத்தில் இதை யார்கிட்டயும் சொல்லக்கூடாது. உங்க கிட்டயும் இதை சொல்லக்கூடாது என்று தான் எங்க மேலிடம் சொல்லி இருந்தாங்க ஆனா இது ஒரு விதமான ஆடிஷன்தான். உங்களுக்கே தெரியாம அங்க கேமரா வச்சு நீங்க நடிக்கிறதை ரெக்கார்ட் பண்ணுவாங்க என்று சொல்ல, அதற்கு அவர் அப்படினா அப்போ நான் பிச்சி உதறிடுவேன். என்று ஒப்புக்கொள்கிறார். அதைத் தொடர்ந்து வித்யாவும் ரோகிணியும் பேசிக் கொண்டிருக்கையில் மாமா மட்டும் வந்தா போதாது சீரும் செய்யணும்.

siragadikka aasai serial January 18th episode Confusion in the family by Rohini

அப்பதான் எங்க மாமியார் சும்மா இருப்பாங்க. மனோஜ்க்கு ஒரு பிரேஸ்லெட் மோதிரமாவது போடணும் என்று அதுக்கு பணத்துக்கு என்ன பண்ணலாம் என்று யோசித்து பிறகு சிட்டியை பார்க்க போக அங்கு சத்தியா சிட்டியோடு பேசிக் கொண்டிருக்கிறார். அந்த இடத்தில் ஏற்கனவே முத்துவின் ஃப்ரெண்ட் செல்வம் சிட்டியிடம் வட்டிக்கு பணம் வாங்கிவிட்டு போகிறார். அதைத்தொடர்ந்து ரோகிணி அங்கு போவதை பார்த்த சத்யா ஒளிந்து கொள்கிறார்.

பிறகு அங்கு ஒரு லட்சம் கடன் வாங்கிட்டு போவதை பார்த்ததும் சத்யாவுக்கு ரோகிணி மீது சந்தேகம் வருது. இவங்க அப்பா மலேசியாவில் இருக்காரு, இவங்களும் பியூட்டி பார்லர் வச்சிருக்காங்க... ஆனால் எதுக்காக இவங்க இப்படி கடன் வாங்கிட்டே இருக்காங்க என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக மீனா தன்னுடைய வீட்டிற்கு வந்து அம்மாவிடம் நீங்க எதுக்காக அந்த வீட்டுக்கு வந்தீங்க நீங்க அங்க வந்ததுனாலதான் நீங்க சீர் செய்யணும்னு சொல்லி உங்கள கேவலப்படுத்தினாங்க என்று திட்டிக் கொண்டிருக்கிறார்.

அப்போது அங்கு சத்தியாவும் வருகிறார். சத்யாவை சிட்டி கூட இனி சேந்துடாத நீ படிக்கிற வேலையை மட்டும் பாரு என்று சொல்ல, உனக்கு முறை செய்கிறது பற்றி நீ ஏற்கனவே சொல்லி இருந்தா நான் பணத்துக்கு ஏதாவது ஏற்பாடு பண்ணி இருப்பேன் என்று சத்தியா சொல்ல அதற்கு மீனா உன் பேச்சு எல்லாம் பாக்குறதுக்கு எனக்கு பயமா இருக்கு. நீ நல்லபடியா இருக்கணும். பழையபடி எந்த தப்பு தண்டா பண்ணிடாத என்று மிரட்டி விட்டு வீட்டிற்கு போகிறார்.

அடுத்த கட்டத்தில் வித்யா துணிமணி பிரேஸ்லெட் எல்லாம் வாங்கிக்கொண்டு கடைக்காரரிடம் கொடுத்து இதெல்லாம் நீங்க ரோகிணிக்கு அவருடைய வீட்டுக்காரருக்கு கொடுக்கணும். சந்தேகம் வராமல் நடிக்கணும் என்று அட்வைஸ் செய்கின்றனர். கூடவே கொஞ்சம் பணத்தையும் அவரிடம் கொடுத்து இதில் உங்களுக்கான துணிமணிகளை வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்.

அந்த நேரத்தில் மனோஜ் ரோகினிக்கு ஃபோன் போட்டுக் கொண்டிருக்க ரோகிணி போனை எடுக்காததால் பார்லரில் விசாரிக்கின்றனர். அங்கு அவர் வரவில்லை என்று சொல்ல விஜயா எங்க போனான்னு தெரியலையே என்று பதட்டத்தில் இருக்கும்போது ரோகிணி வீட்டிற்கு வந்து அப்பாவால இப்போதைக்கு வர முடியாதுன்னு சொல்லிட்டாரு ஆனா தாய் மாமா வராரு டிக்கெட் கூட புக் பண்ணிட்டாரு என்று அவரே வந்து செய்ய வேண்டிய சீரியல் எல்லாம் செய்வார் என்று பேசிக் கொண்டிருக்க விஜயா சந்தோஷப்படுகிறார்.

அப்போது மனோஜ் நீ பார்லரில் இல்லைன்னு சொன்னாங்க நாங்க போன் பண்ணேன் என்று உளற அதற்கு ரோகிணி திட்டுகிறார். நீ பார்லருக்கு எதுக்காக போன் பண்ண? நீ போன் பண்ணுனா அங்க இருக்கிறவங்க நீ என்னை சந்தேகப்படுகிறாய் என்ற நினைப்பாங்க என்று கேவலப்படுத்துறியா என்று கேட்க அதற்கு விஜயா சமாளிக்கிறார்.

siragadikka aasai serial January 18th episode Confusion in the family by Rohini

அதைத் தொடர்ந்து அடுத்த கட்டத்தில் எல்லோரும் ஊருக்கு கிளம்பி கொண்டு இருக்க அப்போது அண்ணாமலை உங்க மாமா இன்னும் வரலையே என்னாச்சு என்று ரோகினியிடம் விசாரிக்க அதற்கு மாமா கிராமத்துக்கு வந்துருவாரு என்று சொல்கிறார். அதற்கு அந்த ஊரு டவுன் பஸ்லயா அங்க வருவாரு என்று விசாரிக்க அதற்கு முதலில் ரோகினி திணறி கொண்டு இருக்க விஜயா சமாளித்து விடுகிறார். எல்லோரும் அதைத்தொடர்ந்து ஊருக்கு கிளம்பி போகின்றனர் இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+