சிறகடிக்க ஆசை சீரியலில் இத்தனை டுவிஸ்டா? இனி நடக்கப்போவது இதுதானா? செம ட்ரீட் இருக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் யாரும் எதிர்பார்க்காத பல ட்விஸ்ட்டுகள் இனி வரும் எபிசோட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மனோஜ் வேலைக்கு போகாமல் நடித்துக் கொண்டு இருந்த விஷயம் வீட்டிற்கு தெரிய வந்திருக்கிறது. அதை தொடர்ந்து ரோகிணி வீட்டில் நடித்துக் கொண்டிருக்கும் விஷயமும் தெரிய வர இருக்கிறது.

அதே நேரத்தில் மீனாவின் தம்பி செய்யும் பித்தலாட்டங்களும் குடும்பத்திற்கு தெரிய வரும் நிலையில் மீனாவின் நிலைமை என்னவாகும் என்பதும் கேள்வியை குறியாக இருக்கிறது. அதுபோல ரோகிணி பணக்கார வீட்டு பொண்ணு கிடையாது என்பது தெரிய வந்ததும் விஜயா என்ன முடிவெடுப்பார் என்ற கேள்விகளும் இருக்கத்தான் செய்கிறது. இந்த நிலையில் இனி வரும் எபிசோட்டில் என்ன நடக்கப்போகிறது என்பதை பற்றி பார்க்கலாம்.

அந்த வகையில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே சிறகடிக்க ஆசை சீரியல் வேகமாக பயணிக்க தொடங்கி இருக்கிறது. இதுவரைக்கும் எதிர்நீச்சல் சீரியலுக்கும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு பெரிய அளவில் போட்டி இருந்து கொண்டிருந்தது. இரண்டு சீரியல்களும் 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருவதால் இந்த சீரியலில் எது ரசிகர்களை அதிகமாக கவரப்போகிறது என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறது.

 siragadikka aasai serial January month coming episode

அதிலும் சிறகடிக்க ஆசை சீரியல் தரப்பினர் சீரியலில் கதையை மொத்தமாக மாற்றி அனைவரையும் வியக்க வைத்திருக்கின்றனர். அந்த வகையில் கடந்த வாரத்தில் மனோஜ் வேலைக்கு போகாமல் நடித்துக் கொண்டிருந்த விஷயம் வெளியே தெரிய வந்ததும் அன்றைய நாளுக்கான டிஆர்பி யாரும் எதிர்பாக்காத வகையில் 10 புள்ளிக்கு மேலே எகிறி இருக்கிறது. அதை தொடர்ந்து இப்போது வேகமாக கதையை தொடங்கி இருக்கின்றனர்.

இப்போது சிறகடிக்க ஆசை குடும்பத்தினர் அனைவரும் கிராமத்திற்கு வந்திருக்கின்றனர். இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் கலகலப்பான பல காட்சிகள் இருந்தது. சில தினங்களாக ஸ்ருதி பேசுவது மற்றும் நடந்து கொள்வது மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கும். தப்பு செய்த மனோஜை விட்டுவிட்டு அதை வீட்டில் சொல்லிக்கொடுத்த முத்து மீது மொத்த குடும்பத்தினரும் பழி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று மக்கள் புலம்பிக் கொண்டிருந்த நிலையில் இன்று ஸ்ருதி சமையல் செய்கிற இடத்தில் போட்ட கூச்சல் குழப்பம் பார்க்கும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கும்.

 siragadikka aasai serial January month coming episode

அதுவும் அடுப்பில் கடுகு போட்டது, அதுபோல சின்னதாக கையில் வெட்டிக்கொண்டு பெரிய ஆர்ப்பாட்டம் போட்டது போன்றவை சுவாரசியமாக இருந்தது. இந்த நிலையில் இனி ரோகிணியின் மாமாவாக சீரியலில் அறிமுகமாகி இருக்கும் நடிகரால் அடுத்த திருப்பங்கள் வர இருக்கிறது. ஏற்கனவே அவர் தான் குடித்து விட்டால் எல்லாவற்றையும் உளறி விடுவேன் என்று சொல்லி இருக்கிறார். இதனால் இவர் ரோகிணி மாமாவாக நடித்துக் கொண்டிருக்கும் போது முத்துவிடம் மாட்டி மொத்த உண்மையையும் கொட்டி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 siragadikka aasai serial January month coming episode

ஏற்கனவே மீனாவின் தம்பிக்கு ரோகிணி மீது சந்தேகம் வந்திருக்கிறது. அதனால் மீனாவின் தம்பியிடம் மீனா ரோகினி வீட்டில் செய்த சீர் பற்றி பேசும்போது ஒருவேளை ரோகிணி ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்குன விஷயத்தை அவர் போட்டுக் கொடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அதுபோல ரோகிணி கிராமத்தில் இருக்கும்போது அங்கு க்ரிஷ் அல்லது அவருடைய அம்மா வந்தாலும் ரோகினிக்கு ஆபத்துதான்.

 siragadikka aasai serial January month coming episode

அல்லது அவருடைய உறவினர்கள் யாராவது பார்த்தால் ரோகிணியின் குட்டு உடைந்து விட வாய்ப்பு இருக்கிறது. இதனால் இந்த வாரம் முழுக்கவே இனி சிறகடிக்க ஆசை சீரியல் பல டூவிஸ்ட்களோடு போக இருக்கிறது. இந்த சீரியலில் மனோஜ் உண்மை வெளியே தெரிந்தது கூட பெரிய அளவில் ஹைப் கிடையாது. ஆனால் இத்தனை நாட்களாக ரோகிணிக்கு விஜயா செய்யும் சப்போட்டுக்கு ரோகினி பற்றிய உண்மை தெரியும் போது தான் பெரிய அளவில் பூகம்பமே வெடிக்க போகிறது.

ஏற்கனவே பார்லர் ரோகினி பெயரில் இல்லை என்பதும் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருக்கும் விஷயமும் விஜயாவுக்கு தெரியாமல் இருக்கும் நிலையில் அடுத்ததாக அதுவும் தெரிய வந்தபோது சீரியலில் என்டர்டைன்மெண்டுக்கு பஞ்சமே இல்லாமல் ஹைப் அதிகரிக்க போகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+