சிறகடிக்க ஆசை: எலுமிச்சை பழத்தால் மனோஜ், விஜயாவை மாட்டவைத்த முத்து.. ஆனால் அண்ணாமலை முடிவு இதுதானா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூலை 15ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் முத்து பிளான் போட்டபடி எலுமிச்சை பழத்தை வைத்து விஜயாவையும் மனோஜையும் சிக்க வைத்தாரா? இல்லையா? என்பது தெரியவந்திருக்கிறது. அது பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியலில் கடந்த வாரத்தில் மனோஜ் ஏமாந்த 4 லட்சம் பணத்திற்காக மீனாவின் நகைகளை விற்றிருக்கிறார். அதே நேரத்தில் தங்க நகை கவரிங்காக மாறியிருக்கும் விஷயம் முத்து மற்றும் மீனாவிற்கும் தெரிய வந்திருக்கிறது. இந்த நிலையில் பாட்டியின் பிறந்தநாளுக்கு பிறகு இது பற்றி பேசிக்கொள்ளலாம் என்று நினைத்திருந்த முத்துவிற்கு விஜயா அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

அதாவது கவரிங் நகை மீனாவின் வீட்டில் தான் மாறி இருக்கிறது என்று விஜயா அடித்து சொல்ல இந்த உண்மையை நானே கண்டுபிடிக்கிறேன் என்று முத்துவும் சொல்லி இருக்கிறார். இப்படியான நிலையில் செல்வத்திற்கு பிரிட்ஜ் வாங்குவதற்காக போயிருந்த இடத்தில் முத்துவும் செல்வமும் போலீசில் கைது செய்யப்படுகின்றனர். அப்போது அங்கு ஸ்டேஷனுக்கு வந்த மனோஜ் தான் 4 லட்சம் பொருள்கள் ஏமாந்து போன விஷயத்தைப் பற்றி சொல்ல அதை வீடியோவாக எடுத்த முத்து வீட்டில் போட்டு காட்டி உண்மையை அம்பலப்படுத்தி இருக்கிறார்.

ஆனாலும் நகை விஷயத்தில் உண்மையை முத்துவால் சொல்லவைக்க முடியவில்லை. இந்த நிலையில் மீனா கொடுத்த ஐடியா படி ஒரு எலுமிச்சை பழத்தை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்திருக்கிறார். இந்த நிலையில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் எலுமிச்சம் பழத்தை கொண்டு வந்த முத்து அண்ணாமலையிடம் இந்த எலுமிச்சம் பழம் ஒரு சாமி தந்தது.

இது வீட்டில் இருந்தால் நகையை யாரு கவரிங்காக மாற்றினார்கள் என்பது தெரிந்துவிடும். உண்மையா நகையை மாற்றியவர்களுடைய வாய் கோணலா மாறிவிடும் என்று சொல்ல, அதைக் கேட்டு மனோஜும் விஜயாவும் பயத்தில் இருக்கின்றனர். அதனால் அந்த எலுமிச்சம்பழம் வீட்டில் இருந்தால் தானே நமக்கு பிரச்சனை என்று அந்த எலுமிச்சை பழத்தை எடுக்கும் போது முத்து கையும் களவுமாக பிடித்துக் கொள்கிறார்.

அதோடு நீங்கதான் நகையை மாற்றியது என்பதை எல்லாருக்கும் தெரிய வைக்க வேண்டும் என்பதற்காக தான் சாதாரண எலுமிச்சம்பழத்தை வாங்கிக்கொண்டு வந்து வீட்டில் வைத்தேன் என்று சொல்ல, மனோஜூம் விஜயாவும் திரு திருவென முழித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அண்ணாமலை இதற்கு என்ன சொல்ல போகிறார் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.

வழக்கம்போல அண்ணாமலை சரி உண்மை தெரிஞ்சிடுச்சுல்ல, இனி அவங்கவங்க வேலையை பாருங்க என்று இருக்கப் போகிறாரா? என்ற எதிர்பார்ப்புதான் எல்லோருக்கும் இருக்கின்றது. இது குறித்து ரசிகர்கள் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து வரும் நிலையில் இந்த சீரியலில் மனோஜாக நடிக்கும் ஸ்ரீதேவா நீங்க நினைச்ச மாதிரி இல்லை இப்போ டுவிஸ்ட் இருக்கப் போகிறது என்று கூறியிருக்கிறார். இதனால் அண்ணாமலை நாளை என்ன சொல்லப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications