சிறகடிக்க ஆசை: மனோஜ்க்கு பாட்டி போட்ட போடு.. வாயை கொடுத்து சிக்கிய விஜயா.. ரோகிணிக்கு வந்த பிரச்சனை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூலை 25ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்று இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் அண்ணாமலை மற்றும் விஜயாவை பேச வைப்பதற்காக முத்து பாட்டியை மீண்டும் வீட்டிற்கு கொண்டு கூட்டிட்டு வந்து இருக்கிறார். பாட்டி விஜயா மற்றும் ரோகிணியை லெப்ட் ரைட் வாங்கி இருக்கிறார்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ரோகிணி பிரசவம் குறித்து பேச மீனா என்ன நீங்க குழந்தை பெத்த மாதிரி சொல்றீங்களே என்று கேள்வி கேட்க, தன்னுடைய கிளையண்ட் இது பற்றி எல்லாம் பேசி இருக்காங்க. அதனால எனக்கு தெரியும் என்று சமாளிக்க அதை கேட்டு பயந்து பொண்ணு ஸ்ருதி என்னால எல்லாம் இவ்வளவு வலியை தாங்கிட்டு குழந்தை பெத்துக்க முடியாது என்று சொல்ல அதற்கு ரோகிணி ரவிக்கு ஆசை இருக்கும்ல்ல என்று சொல்ல, அவன் வேணும்னா பெத்துக்கட்டும் என்று சொல்லி விடுகிறார்.

மீனா தாய்மை பற்றி எவ்வளவோ எடுத்து சொல்லியும் ஸ்ருதி தன்னுடைய முடிவில் உறுதியாக இருக்கிறார். அடுத்ததாக முத்து பாட்டியை கூட்டிகொண்டு வீட்டிற்கு வருகிறார். வரும்போது பாட்டி முத்துவை திட்டிக்கொண்டு வருகிறார். இவ்வளவு நடந்த பிறகு என்கிட்ட எத்தனை நாளா நீங்க மறைச்சு இருக்கிறீங்க என்று திட்டிக் கொண்டு வருகிறார். விஜயா சோபாவில் உட்கார்ந்து இருக்கும்போது பாட்டியை பார்த்ததும் வாங்க அத்தை என்ன உடனே வந்துட்டீங்க? போன வாரம் தானே வந்துட்டு போனீங்க என்று கேட்கிறார்.

அதற்கு நான் என் புள்ள வீட்டுக்கு வர கூடாதா என்று விஜயாவை பாட்டி மடக்குகிறார். பிறகு வீட்டில் நடந்த எல்லா விஷயமும் எனக்கு தெரியும். என்ன வேலை பண்ணி வச்சிருக்க? உன்னை கேட்க யாரும் இல்லைன்னு நீ ஆட்டம் போடுறியா? என்று விஜயாவை திட்டியபடியே அண்ணாமலை எங்க என்று கேட்க அவர் மாடியில் இருக்கிறார் என்று விஜயா சொன்னதும் போய் கூட்டிட்டு வா என்று சொல்ல விஜயா திரு திருவென முழித்துக் கொண்டு இருக்கிறார்.
அதற்கு பாட்டி நானே போய் என் பிள்ளையை கூட்டிட்டு வரேன் என்று மாடிக்கு வருகிறார். அங்கு அண்ணாமலை தனியாக நின்று கொண்டிருப்பதை பார்த்து என்ன அண்ணாமலை நீ 25 வயசு பையனா? பொண்டாட்டிகிட்ட சண்டை போட்டுட்டு பேசாம இருக்க... உன்னை பார்த்து தான் உன் குழந்தைகள் கத்துக்கணும் என்று திட்ட, அதற்கு அண்ணாமலை விஜயா வர வர ரொம்ப மோசம் ஆகிட்டே போறா ஆரம்பத்தில் இருந்தே என்னை அசிங்கப்படுத்திட்டே இருந்தா...
இப்போதும் தன்னுடைய மகனுக்காக தப்பு மேல தப்பு பண்ணிட்டு அந்த தப்பை அடுத்தவங்க மேல தூக்கி போடுதா.. அதனால நான் வெறுத்து போயிட்டேன். உங்களுக்காக நான் அவ கூட பேசணும்னா அவ மீனாவிடம் மன்னிப்பு கேட்டால் நான் பேசுறேன் என்று சொல்ல, அப்படி ஒருவேளை நடந்தால் விஜயா இன்னும் மீனாவை அதிகமா கொடுமைப்படுத்த ஆரம்பிச்சிடுவா என்று சொல்லி அண்ணாமலையை கீழே கூட்டிட்டு வந்து விஜயாவை மன்னிப்பு கேட்க சொல்ல விஜயா அண்ணாமலையிடம் தெரியாம பண்ணிட்டேன் இனிமே இப்படி பண்ண மாட்டேன் என்று மன்னிப்பு கேட்க எல்லார் முன்னாடியும் மன்னிப்பு கேட்க சொல்ல பிறகு எல்லாரும் வீட்டில் வந்ததும் விஜயா அண்ணாமலை இடம் மன்னிப்பு கேட்கிறார்.

அடுத்து பாட்டி மனோஜை கூப்பிட்டு கன்னத்தில் பளார் என்று அரை கொடுத்து எல்லாத்துக்கும் நீதான் காரணம் என்று திட்டுகிறார். பிறகு ரோகிணியிடம் இவன் அம்மா தான் இவனை செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்கி நீயுமா இப்படி அவனை வச்சிருக்க.. அவனுக்கு புத்திமதி சொல்லித் திருத்த மாட்டியா என்று திட்டுகிறார். இனிமேலாவது பொறுப்பா இருக்க சொல்லு என்று சொல்ல முத்து அவன் பொறுப்பா இருக்க ஒரே ஒரு வழி தான் இருக்கு மொத்தம் அவன் 29 லட்சம் தரணும் மாசா மாசம் 50000 தர சொல்லுங்க என்று ஐடியா கொடுக்க ரோகிணியும் விஜயாவும் இதை கேட்டு அதிர்ச்சி அடைகின்றனர்.
இது நல்ல ஐடியாவா இருக்கு என்று சொல்ல பாட்டி மனோஜிடம் மாதா மாதம் பணம் கொடுக்க சொல்ல மனோஜ் கடையில் நிறைய செலவு இருக்கு மாசா மாசம் என்னால கொடுக்க முடியாது என்று சமாளிக்கிறார். அதற்கு பார்ட்டி விஜயாவிடம் நீ சொன்னாதானே உன் பையன் கேட்பான் நீயே அவனிடம் சொல்லு என்று அதட்ட விஜயா தன்னுடைய கோபத்தை மனோஜிடம் காட்டி பணத்தை தரேன்னு சொல்லுடா என்று கத்த வேறு வழி இல்லாமல் மனோஜ் சரி என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications