மனோஜ் கல்யாணத்திற்கு முன்பு ரவி, சீதா கொடுத்த அதிர்ச்சி.. மீனாவை திட்டும் மாமியார்..திடீர் திருப்பம்
சென்னை: மனோஜ் கல்யாணத்திற்கு வேலை செய்து கொண்டிருந்த மீனாவை அவருடைய மாமியார் விஜயா அவமானப்படுத்துகிறார்.
அதே நேரத்தில் சீதாவும், ரவியும் மாலையும் கழுத்துமாக கோவிலுக்குள் வர அதை பார்த்து விஜயா அதிர்ச்சியாகி கத்துகிறார்.

இந்த நிலையில் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூலை 29ஆம் தேதி தேதிக்கான எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
எபிசோட்டின் ஆரம்பத்தில் மனோஜிடம் உன் கூட வேலை பாக்குறவங்க யாருகிட்டயும் நீ கல்யாணத்துக்கு சொல்லலையா என்று அண்ணாமலை கேட்க, அதற்கு மனோஜ் நான் இப்பதானே வேலைக்கு சேர்ந்தேன். அதனால யார்கிட்டயும் சொல்லல என்று சொல்லிக் கொண்டிருக்க, அந்த நேரம் அங்கு வந்த விஜயா எப்ப பாத்தாலும் அவனை கேள்வி மேல கேள்வி கேட்கிறாங்க என்று திட்டிக்கொண்டு மனோஜை டிரஸ்ஸ மாத்திட்டு வா என்று அனுப்பி வைக்கிறார்.

அதைத்தொடர்ந்து மீனா விளக்கேற்றிக் கொண்டிருக்க அங்க வந்த விஜயா மீனாவை திட்டுகிறார். மனோஜ்க்கு நல்லபடியா கல்யாணம் நடக்கணும். ஆனால் நீ விளக்கு ஏத்துனா விளங்குமா? நீயே ஒரு தரித்திரம் என்று கண்டமேனிக்கு திட்டிக் கொண்டிருக்க மீனா கண் கலங்கி கொண்டிருக்கிறார். அப்போது அந்த பக்கமா வந்து அண்ணாமலை என்னவென்று கேட்க, ஊதுபத்தி புகை கண்ணில் பட்டுடுச்சு என்று மீனா ஏமாற்றுகிறார்.
மறுபக்கம் ரோகிணியை மிரட்டிக் கொண்டிருக்கும் மேனேஜர் காரில் இருந்து கொண்டு தன்னுடைய நண்பரிடம் போனில் பேசிக் கொண்டிருக்கிறார். அவளுக்குன்னு யாருமே இல்ல. ஆனா அவ என்னுடைய பொண்டாட்டியை என்கிட்ட இருந்து பிரிச்சி என்னை அவமானப்படுத்திட்டா. அவளை நான் சும்மா விடமாட்டேன். அவளோட கல்யாணத்தை நிறுத்தாம நான் விடமாட்டேன் என்று கோபமாக பேசிக் கொண்டிருக்கிறார்.

மண்டபத்தில் இருந்த ரோகிணி அப்போது மனோஜ்க்கு போன் செய்து தான் ஏற்கனவே திருமணம் ஆன விஷயத்தையும், தனக்கு ஒரு குழந்தை இருப்பதை பற்றியும் சொல்ல எதுவும் பேசாமல் மனோஜ் உடைய போன் கட் ஆகி விடுகிறது. இதனால் கல்யாண புடவை கட்டணுமா? வேண்டாமா? என்று ரோகிணி யோசித்துக் கொண்டு இருக்க அப்போது மீனா வந்து கதவைத் தட்டி உங்களை கீழ வர சொன்னாங்க என்று சொல்ல நான் இப்ப வருகிறேன் என்று ரோகிணியும் சொல்கிறார்.
அதைத்தொடர்ந்து கோவிலில் விஜயா தன்னுடைய தோழியிடம் பேசிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் ரவி மற்றும் சீதா இருவரும் மாலையும் கழுத்துமாக வருவதை பார்த்து விஜயா கத்தி கதறுகிறார். அந்த நேரம் அவருடைய மாமியாரும், அண்ணாமலையும் வந்து என்னாச்சு என்று விசாரிக்க ரவி, சீதாவை கல்யாணம் பண்ணிட்டு வர்றான் என்று சொல்ல விஜயாவின் மாமியார் என்ன ஆச்சு இவளுக்கு அவங்க கல்யாண மாலை எடுத்துட்டு வராங்க என்று திட்டுகிறார்.

அதை கேட்டு விஜயா திரும்பி பார்க்க ரவி மற்றும் சீதா இருவரும் கையில் மாலையை கொண்டு வருவதை பார்த்து இருவரும் கல்யாணம் பண்ணிட்டு வரலையா? இது என்னோட கனவா என்று நிம்மதி அடைகிறார். பிறகு சீதாவை அங்கிருந்து விரட்டி விடுகிறார். விஜயாவும் அவருடைய தோழியும் ரோகிணியை கூப்பிட போக அப்போது வாசலில் மீனா நிற்பதை பார்த்து உனக்கு சூசகமா சொன்னா புரியாதா என்று திட்ட அங்கிருந்து பீல் பண்ணியப்படியே கிளம்புகிறார்.
அதைத் தொடர்ந்து ரோகிணியிடம் சீக்கிரமாக கிளம்பி கீழே வரச் சொல்லி விஜயா சொல்ல, ரோகிணியும் சரி என்று சொல்கிறார். அந்த நேரம் கீழே வந்த மீனா சோகமாக இருப்பதை பார்த்த மாமனார் விஜயா ஏதாவது சொல்லிட்டே தான் இருப்பா. நீ தான் மூத்த மருமக இந்த கல்யாணத்தை நீ தான் முன் நின்று நடத்தணும் என்று சொல்கிறார். இதைக் கேட்டு என்ன சொல்வது என்று தெரியாமல் மீனா யோசிக்க, மறுபக்கம் ரோகிணியும் யோசித்து கொண்டு இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications